நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

“நீதான் என் உயிர்த்தோழன்”.. 24 மணி நேரமும் எலும்புக்கூடுடன் சுற்றும் 2 வயது குட்டிப்பையன்!

2 வயது சிறுவன் ஒருவன் எலும்புக்கூடுடன் சுற்றும் வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒரு எலும்புக்கூட்டை தனது சிறந்த நண்பனாக நினைத்து, 24 மணி நேரமும் அதனுடனே 2 வயது சிறுவன் ஒருவன் வாழ்ந்து வருவது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த அபிகேல் பிராடி எனும் பெண்ணின் இரண்டு வயது மகன் தியோ. ஒருநாள் வீட்டின் அடித்தளத்தில் உள்ள பகுதியை, அபிகேல் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த தியோவின் கண்களில் ஒரு பிளாஸ்டிக் எலும்புக்கூடு ஒன்று தென்பட்டிருக்கிறது. பார்த்ததும் பிடித்து போகவே, அதை கையோடு தூக்கிச் சென்றிருக்கிறான் தியோ.

அந்த எலும்புக்கூடுக்கு பென்னி என பெயர் வைத்த தியோ, அதனை தனது நெருங்கிய நண்பனாக கருதி அதனுடனே விளையாட ஆரம்பித்துவிட்டான்.

எங்கேயும் எப்போதும்

எங்கேயும் எப்போதும்

வெளியே எங்கு சென்றாலும் பென்னி இல்லாமல் தியோ செல்வதில்லை. அதேபோல் உறங்கும் போதும் கூட பென்னியுடன் தான் உறங்குகிறான் தியோ. முதலில் இதனைத் தடுக்க முயன்ற அபிகேல், பின்னர் மகனின் விருப்பதிற்கே விட்டுவிட்டார்.

பொழுதுபோக்கு

பொழுதுபோக்கு

இப்போது தியோவும் பென்னியும் பிரிக்க முடியாத நண்பர்களாக மாறிவிட்டனர். கடற்கரையில் பென்னியை அமர வைத்து வேடிக்கை பார்க்க வைப்பது, சறுக்கு மரத்தில் சறுக்க விடுவது என பென்னியுடன் தான் தனது முழு பொழுதையும் கழித்து வருகிறான் தியோ.

வெறி பிடித்த அன்பு

எலும்புக்கூடுடன் தியோ விளையாடும் வீடியோக்களை அபிகேல் தனது சமூகவலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதை பார்த்த நெட்டிசன்கள், இது என்ன விநோதமாக இருக்கிறதே என கமெண்ட் செய்தனர். அதற்கு அபிகேல், "பென்னி (எலும்புக்கூடு) மீது எனது மகனுக்கு பயங்கரமான வெறிபிடித்த அன்பு ஏற்பட்டுவிட்டது", என அசால்டாக பதில் அளித்திருக்கிறார்.

பிளாஸ்டிக் பொம்மை

பிளாஸ்டிக் பொம்மை

பள்ளி அறிவியல் ஆய்வகங்களில் இருப்பது போல் பென்னி ஒரு பிளாஸ்டிக் பொம்மை தான். ஆனால் இதுவே நிஜமான எலும்புக்கூடாக இருந்திருந்தால் அபிகேலின் நிலை பாவம் தான். தற்போது மகனின் விருப்பத்திற்கு ஏற்ப பிளாஸ்டிக்கில் நாய் ஒன்றின் எலும்புக்கூடு போன்ற பொம்மையை தன் மகனுக்கு வாங்கிக் கொடுத்துள்ளார் அபிகேல்.

அறிவுரை

அறிவுரை

அதனையும் தனது சமூகவலைதளப் பக்கத்தில் அபிகேல் பதிவு செய்துள்ளார். அதைப் பார்த்து பலர் பென்னியின் வித்தியாசமான விருப்பத்தைப் பாராட்டினாலும், வேறு சிலரோ இது போன்ற ரசனைகளை குழந்தைகளிடத்தில் ஊக்குவிப்பது நல்லது இல்லை எனவும் அபிகேலுக்கு அறிவுரை செய்து வருகின்றனர்.

English summary
Abigail Brady's 2-year old son Theo is BFFs with a 5-foot skeleton and carries him everywhere he goes. "He even stays in his room at night," says Brady.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X