நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியா மீது தொடங்கப்படும் விசாரணை.. டிரம்ப் அமைத்த குழு.. புதிய திட்டம் போடும் அமெரிக்கா.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் பொருட்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிப்பதாக கூறி இந்தியா மீது விசாரணை நடந்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருக்கிறது என்கிறார்கள்.

Recommended Video

    இந்தியாவை கூட்டு சேர்க்கிறீர்களா? அமெரிக்காவை எச்சரித்த சீனா!

    அமெரிக்க அதிபராக டிரம்ப் பொறுப்பேற்றதில் இருந்தே உலக நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது விதிக்கும் கூடுதல் வரியை விமர்சனம் செய்து வருகிறார். முக்கியமாக சீனா மீதும், இந்தியா மீதும் அவர் விமர்சனங்களை வைத்து வருகிறார்.

    அதன்பின் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் டிஜிட்டல் சாதனங்கள் மீது சீனா மற்றும் இந்தியா அதிக வரியை விதிக்கிறது. இதற்கு பதிலடியாக இந்த இரண்டு நாட்டு பொருட்கள் மீது அதிக வரியை விதிக்க போகிறோம் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார்.

    கலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சிகலைஞருக்கு வாழ்த்துப்பாடும் பேத்தி மகிழினியும்..பேரன் இன்பாவும்.. மா.சுப்பிரமணியன் நெகிழ்ச்சி

    வர்த்தக யுத்தம்

    வர்த்தக யுத்தம்

    இதனால் சீனாவிற்கும் அமெரிக்காவிற்கும் வர்த்தக யுத்தம் வந்தது. அதன்பின் அமெரிக்காவுடன் சீனா சென்ற வருடம் ஒப்பந்தம் செய்த பின் வர்த்தக ஒப்பந்தம் முடிவிற்கு வந்தது.இந்த நிலையில் அமெரிக்காவின் பொருட்களுக்கும் நிறுவனங்களுக்கும் அதிக வரி விதிப்பதாக கூறி இந்தியா மீது விசாரணை நடந்த அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதற்கு பின் நிறைய திட்டங்கள் இருக்கிறது என்கிறார்கள்.

    என்ன வரி விதிப்பு

    என்ன வரி விதிப்பு

    வெளிநாட்டு டிஜிட்டல் சர்வீஸ் வரி என்று இதை அமெரிக்கா அழைக்கிறது. இதில் அமெரிக்க நிறுவனங்கள் மீது இந்தியா விதிக்கும் வரி குறித்து அமெரிக்கா விசாரணை நடத்தும். அமெரிக்க வர்த்தக பிரதிநிதி அலுவலகம் (US Trade Representative office) இந்தியாவிற்கு எதிரான இந்த விசாரணையை நடத்தும். கூகுள், ஆப்பிள், பேஸ்புக், அமேசான், நெட்பிளிக்ஸ் போன்ற அமெரிக்க நிறுவனங்கள் மீது இந்தியா விதிக்கும் வரி குறித்து விசாரணை நடக்கும்.

    பிரான்ஸ் என்ன

    பிரான்ஸ் என்ன

    ஏற்கனவே பிரான்ஸ் மீது அமெரிக்க இதேபோல் வரி விசாரணை நடத்தியது. அதில் அமெரிக்க பொருட்களுக்கு பிரான்ஸ் கூடுதல் வரி விதிப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஷேம்பெயின் போன்ற பிரான்ஸ் பொருட்களுக்கு அதிகம் வரி விதிப்போம் என்று பிரான்ஸை அமெரிக்கா மிரட்டியது . இதையடுத்து பிரான்ஸ் அமெரிக்க பொருட்கள் மீதான வரியை குறைத்தது. இதேபோல் இந்தியா மீதும் அமெரிக்கா நடவடிக்கை எடுக்க வாய்ப்புள்ளது.

    என்ன பின்னணி

    என்ன பின்னணி

    இந்த குழுவை டிரம்ப் அமைக்க பின்னணி காரணம் ஒன்று இருக்கிறது. கொரோனா வைரஸ் காரணமாக ஏற்பட்ட வர்த்தக யுத்தத்தால் சீனாவில் இருந்து அமெரிக்க நிறுவனங்கள் வெளியேறுகிறது. இதனால் அமெரிக்க நிறுவனங்கள் இந்தியா வர அதிக வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள். இப்படி இந்தியா வரும் அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு எந்த நெருக்கடியும் இருக்க கூடாது என்று டிரம்ப் முதல் கட்ட நடவடிக்கையாக இதை மேற்கொண்டு இருக்கிறது.

    இறக்குமதி செய்யும்

    இறக்குமதி செய்யும்

    முதலில் இந்தியாவில் இறக்குமதி செய்யப்படும் அமெரிக்க பொருட்களுக்கான வரியை குறைக்க டிரம்ப் கோரிக்கை வைப்பார். இந்த விசாரணை மூலம் இந்தியாவில் அமெரிக்கா பொருட்களுக்கான இறக்குமதி வரியை குறைக்க அழுத்தம் கொடுக்கப்படும். அதன்பின் அமெரிக்க நிறுவனங்களை இந்தியாவில் தொடங்க நிறைய சலுகைகளை அளிக்கும்படி டிரம்ப் கோரிக்கை வைக்க வாய்ப்புள்ளது.

    English summary
    Trade War: US president Trump to investigate the Tax harassment on US products in India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X