நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

விண்வெளி மையத்திற்கு சுற்றுலா... ஒரு நாள் தங்க ரூ 25 லட்சம் கட்டணம்... நாசா அறிவிப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: சர்வதேச விண்வெளி ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க 25 லட்ச ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் அமைத்துள்ள சர்வதேச விண்வெளி ஆய்வகத்தை வர்த்தக ரீதியில் சுற்றுலா மையம் ஆக்க நாசா திட்டமிட்டுள்ளது.

Traveling to Space Center, fee of 25 lakh rupees: NASA announcement

இது தொடர்பாக நாசா தலைமை நிதி அதிகாரி கூறுகையில், விண்வெளி சுற்றுலாவுக்கு ஏற்ப விண்வெளியில் மையம் அமைக்கப்படுவதாக குறிப்பிட்டார். தனியார் நிறுவனங்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும், இந்த ஆண்டு இறுதியில் சோதனை பயணம் நடைபெற உள்ளதாகவும் கூறினார். அடுத்த ஆண்டுக்குள் வர்த்தக ரீதியாக விண்வெளி சுற்றுலா செல்ல இலக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

பிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது பிரதமர் மோடிக்கு கௌரவம்... மாலத்தீவின் உயரிய நிஸான் இசுதீன் விருது வழங்கப்பட்டது

இதன்படி ஆண்டுக்கு 2 தடவை ஆய்வகத்துக்கு சுற்றுலா பயணிகள் அழைத்துச் செல்லப்படுவார்கள். ஆய்வகத்துக்கு சுற்றுலா செல்பவர்கள் அங்கு ஒரு நாள் இரவு தங்க 25 லட்ச ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். சர்வதேச விண்வெளி ஆய்வகம் செல்வதற்கான சுற்றுலா அடுத்த ஆண்டு தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே நேரம், விண்வெளிக்கு சுற்றுலா செல்வோர் அங்கு செல்வதற்கான மருத்துவ சோதனைகள் மற்றும் பயிற்சிகள் மேற்கொள்வதை உறுதிப்படுத்துவதோடு, எத்தனை பேர் செல்லலாம் என்பதையும் தனியார் வணிக நிறுவனங்களே முடிவு செய்ய வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் 360 கி.மீ உயரத்தில் வளி மண்டலத்தைத் தாண்டி உள்ள புறவெளியிலே நிறுவப்பட்டு உள்ளது. 91 நிமிடத்திற்கு ஒருமுறை உலகை சுற்றி வருகிறது. நாசாவுக்கு என்று சொந்தமான விண்வெளி நிலையம் இல்லை. சர்வதேச விண்வெளி நிலையம் 1998ம் ஆண்டு ரஷ்யாவோடு சேர்ந்து உருவாக்கப்பட்டது. இதனை வணிகப் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு தளர்வான அணுமுறையை ரஷ்யா சமீபத்தில் எடுத்துள்ளது.

2001ம் ஆண்டு சுற்றுலாப் பயணி ஒருவர் முதல் முறையாக சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்றார். டென்னிஸ் டிடோ என்னும் அந்த அமெரிக்க வணிகர் விண்வெளிக்கு போய் வர ரஷ்யாவுக்கு சுமார் 20 மில்லியன் டாலர் செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
NASA announcement that Traveling to international space laboratory have been fixed fee of 25 lakh rupees
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X