நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

மிக மோசமாக நடத்துகிறீர்கள்.. நியூயார்க்கை விட்டு வெளியேறும் டிரம்ப்.. அதிபருக்கே இந்த நிலையா!?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்த ஊரான நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது சொந்த ஊரான நியூயார்க் நகரத்தை விட்டு வெளியேறுவதாக தெரிவித்துள்ளார். இவர் இனி புளோரிடாவில் வாழ போவதாக அறிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டிரம்ப், அமெரிக்காவில் அதிக அளவில் வரி சலுகைகளை அனுபவிக்கும் நபர். அவருடைய டிரம்ப் டவர் தொடங்கி கேசினோ கிளப்கள் வரை பலவற்றிற்கு அவர் தொடக்கத்தில் இருந்தே வரி சலுகைகளை அனுபவித்து இருக்கிறார். இப்போதும் பலவற்றுக்கு சலுகைகளை அனுபவித்து வருகிறார்.

ஆனாலும் அவர் தொடர்ந்து அமெரிக்கா அதிக வரியை விதிக்கிறது என்று புகார் வைத்து கொண்டுதான் இருக்கிறார். முக்கியமாக நியூயார்க்கில் அதிகமாக வரி விதிக்கப்படுகிறது என்றும் கூறி வருகின்றார்.

கடும் கோபம்

கடும் கோபம்

தன்னுடைய நிறுவனங்கள் அதிகமாக வரி செலுத்துகிறது. அமெரிக்காவில் பணக்காரர்கள் வாழ முடியவில்லை. சிலருக்கு நலத்திட்டங்கள் செய்ய வேண்டும் என்பதற்காக என்னை போன்ற பணக்காரர்களிடம் கொள்ளையடிக்கிறார்கள் என்று டிரம்ப் பலமுறை கூறி இருக்கிறார். அதன் வெளிப்பாடாக தற்போது நியூயார்க்கை விட்டு வெளியேறுவதாக அவர் அறிவித்துள்ளார்.

என்ன சொன்னார்

இது தொடர்பாக அதிபர் டிரம்ப் டிவிட் செய்துள்ளார். அதில், 1600 பென்சில்வேனியா அவென்யூ, வெள்ளை மாளிகை இந்த இடத்தில் இருப்பது எனக்கு பிடித்துள்ளது. இன்னும் 5 வருடங்கள் கூடுதலாக இங்கே இருப்பேன் என்று நம்புகிறேன். இதன் மூலம் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றுவேன்.

ஆனால் என்ன

ஆனால் என்னுடைய குடும்பமும், நானும் புளோரிடாவில் உள்ள பால்ம் பீச்சை சொந்த, நிரந்தர இருப்பிடமாக மாற்றிக்கொள்ள போகிறோம். நான் நியூயார்க் மற்றும் நியூயார்க் மக்களை எப்போது மனதில் வைத்து இருப்பேன். ஆனால் இங்கிருந்து வெளியேறுகிறேன்.

அதிக வரி

நான் இந்த நகரத்திற்கும், மாநிலத்திற்கும், நாட்டிற்கும் பல மில்லியன் டாலர்களை வரியாக செலுத்துகிறேன். ஆனாலும் என்னை மோசமாக நடத்துகிறார்கள். அரசியல் தலைவர்கள் என்னை மிக மோசமாக நடத்துகிறார்கள். சிலர் என்னை மிக மிக மோசமாக நடத்தி இருக்கிறார்கள்.

வருத்தம்

வருத்தம்

இந்த முடிவை எடுக்க எனக்கு விருப்பமில்லை. ஆனால் இதுவே கடைசியில் சரியான முடிவாக இருக்கும். ஒரு பிரதமராக நியூயார்க் மக்களுக்கு நான் எப்போதும் உதவியாக இருப்பேன். நியூயார்க் நகரத்திற்கும் எப்போதும் என் மனதில் தனி இடம் உண்டு, என்று குறிப்பிட்டுள்ளார்.

English summary
Treated Very Badly Sometimes Worse: Donald Trump decides to move to Florida from New York.60
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X