நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒபாமாவின் பல திட்டங்களை தடுத்த ட்ரம்ப் சர்வாதிகாரத்தை ஆதரிக்கிறார்- கமலா ஹாரிஸ் அதிரடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஒபாமா கொண்டு வந்த பல திட்டங்களை தடுத்து நிறுத்திய அதிபர் ட்ரம்ப், உலகம் முழுவதும் உள்ள சர்வாதிகாரிகளைத் ஆதரிக்கிறார் என்று அமெரிக்க துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

அமெரிக்காவின் துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள் மைக் பென்ஸ் மற்றும் கமலா ஹாரிஸ் இன்று நேருக்கு நேர் விவாதம் செய்தனர். சாதனைகள், வாக்குறுதிகளைப் பற்றி பாதுகாப்பான முறையில் கண்ணாடிக்கு பின்புறம் அமர்ந்து காரசாரமாக விவாதம் நடத்தினர்.

Trump administration doesnt believe in science saya Kamala Harris

கொரோனா என்ற மிகப்பெரிய சவாலை எதிர்கொண்டு பல லட்சம் உயிர்களை காப்பாற்றியுள்ளதாக கூறினார் மைக் பென்ஸ். வேலைவாய்ப்பு, பொருளாதார நிலை பற்றியும் ட்ரம்ப் அரசின் சாதனைகளைப் பற்றியும் எடுத்துக்கூறினார்.

அதே நேரத்தில் கொரோனாவை கையாண்ட விதத்தில் ட்ரம்ப் அரசு தோல்வியடைந்து விட்டதாக குற்றம் சாட்டினார் கமலா ஹாரிஸ். காரசாரமாக நடைபெற்ற விவாதத்தில் ட்ரம்ப் அரசின் மீது அடுக்கடுக்காக புகார்களை முன் வைத்தார் கமலா ஹாரிஸ்.

ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறை காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டது என்று கூறிய ஹாரிஸ், அமெரிக்கர்கள் பலனடைந்த ஒபாமா கேர் திட்டத்தை நிறுத்தினார். ஒபாமாவின் பல நல்ல திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்து விட்டவர் ட்ரம்ப் என்று குற்றம் சாட்டினார்.

ட்ரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்: கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ் விவாதம் ட்ரம்ப் அரசின் தோல்வியை மக்கள் பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்: கமலா ஹாரிஸ் - மைக் பென்ஸ் விவாதம்

இதனை மறுத்த மைக் பென்ஸ் கொரோனா பரவலுக்கு சீனாதான் காரணம் என்று தெரிவித்தார். அதிபர் பதவிக்கு போட்டியிடும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர் ஜோ பிடன் பல ஆண்டுகளாக சீனாவிற்கு ஆதரவான தலைவராக இருக்கிறார் என்று குற்றம் சாட்டிய பென்ஸ், ஜோ பிடன் பொருளாதாரத் திட்டம் சீனாவிடம் சரணடைவது போல உள்ளது என்றார்.

துணை அதிபர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர் இருவரும் நேருக்கு நேர் நடத்திய விவாதத்தில் கடுமையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து விவாதித்தனர்.

English summary
Trump administration's approach to China has resulted in loss of jobs, lives says Kamala Harris.The vice presidential debate between Vice President Mike Pence and Senator Kamala Harris is set to begin in Salt Lake City.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X