நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கை கொடுக்காமல் சென்ற டிரம்ப்.. 'சும்மா கிழி' என்று கிழித்த நான்சி.. சந்தி சிரித்த நாடாளுமன்ற கூட்டம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சிக்கும் இன்று அவையில் நடந்த சண்டை உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    Trump and Nancy fight in the House of Senate| டிரம்ப் உரையை கிழித்த சபாநாயகர் நான்சி

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கும் அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சிக்கும் இன்று அவையில் நடந்த சண்டை உலகம் முழுக்க பெரிய அளவில் வைரலாகி உள்ளது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் மீது இந்திய நேரப்படி இன்று இரவு செனட் சபையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது.

    அவருக்கு எதிராக இந்த தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்காவில் பொதுவாக பதவி நீக்க தீர்மானம் இரண்டு அவையிலும் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் அதிபர் மீதான புகார்கள் மீது இன்று செனட் சபை வாக்கெடுப்பு நடத்தப்படும்.

    அடடடடா.. ஒரு இடத்தில் நிற்காமல்.. கையை அசைத்து.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே.. ஏன்! அடடடடா.. ஒரு இடத்தில் நிற்காமல்.. கையை அசைத்து.. டிரம்ப் என்ன செஞ்சாலும் தப்பு தப்பா போகுதே.. ஏன்!

    எப்படி நடக்கும்

    எப்படி நடக்கும்

    செனட் சபைதான் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து விலக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்யும். அதாவது மொத்தமாக அவரை பதவி நீக்கம் செய்யும். ஆனால் டிரம்ப் பதவி நீக்கம் செய்யப்பட வாய்ப்பில்லை என்கிறார்கள்.அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள்.

    வாய்ப்பில்லை

    வாய்ப்பில்லை

    அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை. இதனால் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இது கொஞ்சம் நடக்காத காரியம். இதனால் அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவது சந்தேகம்தான், செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது. இந்த நிலையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் இன்று செனட் உறுப்பினர்கள் உரை நிகழ்த்தினார்கள்.

    என்ன பேசினார்கள்

    என்ன பேசினார்கள்

    செனட் உறுப்பினர்களை தொடர்ந்து தனது ஸ்டேட் ஆப் யூனியன் உரையை அதிபர் டிரம்ப் நிகழ்த்தினார். அதில். அமெரிக்கா தன்னுடைய ஆட்சியின் கீழ் பெரிய அளவில் முன்னேறி இருக்கிறது. நான் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளேன். என் கட்சியின் செனட் உறுப்பினர்கள் எல்லோரும் மிக சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். உலகம் முழுக்க அமெரிக்காவின் தாக்கம் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியுள்ளது. கொரோனாவை அமெரிக்கா கட்டுப்படுத்தி உள்ளது என்று டிரம்ப் பேசினார்.

     நீண்ட நேரம்

    நீண்ட நேரம்

    டிரம்ப் தனது உரையில் நீண்ட நேரம் தன்னையே புகழ்ந்து கொண்டார். எப்போதும் போல தன்னையே அவர் புகழ்ந்து பேசினார். அவரின் பதவி நீக்கம் குறித்து எதுவும் பேசவில்லை. இவர் ஒவ்வொரு முறை தன்னை புகழ்ந்து பேசிய போதும், அங்கிருந்த டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் எழுந்து நின்று அவருக்கு கை தட்டினார்கள். இதுதான் சிறந்த ஸ்டேட் ஆப் யூனியன் பேச்சு என்றும், டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் தெரிவித்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் இன்று சுவாரசியமான சம்பவம் இரண்டு நடைபெற்றது.

    கை கொடுக்கவில்லை

    இதில் டிரம்ப் பேசுவதற்கு முன் தன்னுடைய உரையின் பிரதியை சபையின் சபாநாயகர் நான்சி பெலுச்சியிடம் கொடுத்தார். நான்சிதான் டிரம்பிற்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
    இந்த உரையின் பிரதியை வாங்கிய பின் டிரம்ப்பிற்கு நான்சி பெலுச்சி கை கொடுக்க சென்றார். ஆனால் டிரம்ப் நான்சி பெலுச்சிக்கு கை கொடுக்காமல் அங்கிருந்து திரும்பினார். இதை பார்த்து நான்சி பெலுச்சி ஷாக்கானார்.

    பதிலடி கொடுத்தார்

    ஆனால் நான்சி பெலுச்சி டிரம்ப்பை விட பிடிவாதனமான ஆள். இதன் பின் டிரம்ப் பேசி முடித்ததும், அதை நான்சி பெலுச்சி பயன்படுத்திக் கொண்டார். டிரம்ப் கொடுத்த உரையின் பிரதியை அப்படியே கிழித்து எறிந்தார். டிரம்ப் நான்சி பெலுச்சிக்கு எதிரேதான் நின்று கொண்டு இருந்தார். அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல், நான்சி பெலுச்சி அந்த உரையை கிழித்து எறிந்தார். டிரம்பிற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அவர் அந்த உரையை கிழித்தார். இந்த இரண்டு வீடியோவும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

    English summary
    President Trump and Nancy fight in the House of Senate during the State of Union speech goes viral.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X