நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சொன்னபடி செய்த டிரம்ப்.. டிக்டாக், வீசாட் உடன் பரிவர்த்தனை மேற்கொள்ள தடை.. சீன நிறுவனங்களுக்கு கேட்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் எந்த விதமான பரிவர்த்தனையும் மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

சீனாவுடன் மோதல் நிலவிய நிலையில் இந்தியாவில் டிக்டாக் - TikTok, ஷேர் இட்- Shareit, யுசி பிரவுசர் - UC Browser, ஹெலோ - Helo, எம்ஐ கம்யூனிட்டி - Mi Community, செண்டர் - Xender உள்ளிட்ட 59 செயலிகள் தடை செய்யப்பட்டு இருக்கிறது. அதை தொடர்ந்து மேலும் 50 செயலிகள் இந்தியாவில் தடை செய்யப்பட்டது.

சீனாவுடன் சண்டை நிலவி வரும் நிலையில் இப்படி சீனாவின் செயலிகள் தடை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் இந்த தடையை அமெரிக்கா வரவேற்று இருந்தது.

Recommended Video

    TIK TOKகினை வாங்க கட்டாயம்! America மீது China நடவடிக்கை ?

    இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை!இலங்கை தேர்தல்: ராஜபக்சே கட்சி 145 இடங்களில் அமோக வெற்றி- ரணில் கட்சிக்கு ஒரு இடமும் கிடைக்கவில்லை!

    என்ன சொன்னார்

    என்ன சொன்னார்

    இந்த நிலையில் அமெரிக்காவிலும் டிக்டாக் செயலி தடை குறித்து ஆலோசனை செய்வோம் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார் . அமெரிக்காவில் இருக்கும் சீனாவின் தொழில்நுட்ப நிறுவனங்களை ஆராய்ச்சி செய்வோம். அவர்கள் என்ன மாதிரியான தகவல் திருட்டுகளில் ஈடுபடுகிறார்கள். சீன அரசுடன் தொடர்பில் இருக்கிறார்களா என்று ஆராய்ச்சி செய்வோம் என்று டிரம்ப் குறிப்பிட்டு இருந்தார் .

    தடை செய்தார்

    தடை செய்தார்

    இந்த நிலையில் தற்போது சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான டிக்டாக் உள்ளிட்ட நிறுவனங்கள் உடன் எந்த விதமான பண பரிவார்த்தனையும் மேற்கொள்ள கூடாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். அதன்படி டிக்டாக், வீ சாட், டென்சென்ட் ஆகிய நிறுவனங்களுடன் பரிவர்த்தனையை மேற்கொள்ள கூடாது. இன்னும் 45 நாட்களுக்குள் மொத்தமாக பரிவர்த்தனையை நிறுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    முன்னோட்டம்

    முன்னோட்டம்

    மொத்தமாக டிக்டாக் உள்ளிட்ட சீன செயலிகள் மீது தடையை விதிப்பதற்கான முதல் நடவடிக்கை இது என்று பார்க்கப்படுகிறது. பங்குகள் ரீதியாக அமெரிக்க நிறுவனங்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், தடையை விதிப்பதற்காக இந்த முடிவை டிரம்ப் எடுத்து உள்ளார். இது தொடர்பாக அறிவிப்பு வெளியிட்டுள்ள டிரம்ப், டிக்டாக் செயலியை நம்ப முடியாது. இது மக்களின் தகவலை திருடுகிறது.

    மக்களுக்கு ஆபத்து

    மக்களுக்கு ஆபத்து

    இந்த செயலிகள் மக்களுக்கு ஆபத்து விளைவிக்க கூடியது. தேசிய பாதுகாப்பிற்கு எதிராக சீனாவின் செயலிகள் செயல்படுகிறது. அதிலும் வீசாட் மக்களுக்கு தெரியாமல் அவர்களிடம் இருந்து பல லட்சம் தகவல்களை திருடுகிறது. இதன் மூலம் அமெரிக்கர்களின் வாழக்கையை சீனாவின் அரசு மறைமுகமாக கண்காணிக்கிறது. இதை இனியும் அனுமதிக்க முடியாது.

    செய்ய முடியாதது

    செய்ய முடியாதது

    இவர்கள் இனியும் அமெரிக்க முதலீடுகளை பெற கூடாது. இதனால் இந்த நிறுவனங்கள் உடன் அமெரிக்க நிறுவனங்கள் பண பரிவர்த்தனை மேற்கொள்வதை மொத்தமாக தடை செய்கிறேன், என்று டிரம்ப் குறிப்பிட்டுள்ளார். முன்னதாக டிக்டாக் நிறுவனத்தை மைக்ரோசாப்ட் நிறுவனம் வாங்கினால் அதை ஆதரிப்போம். ஆனால் செப்டம்பர் 15க்குள் வாங்க வேண்டும். அதோடு இந்த வியாபாரத்தில் குறிப்பிட்ட பங்கை அரசுக்கும் தர வேண்டும் என்று, டிரம்ப் குறிப்பிட்டார்.

    English summary
    President Trump bans the transaction with TikTok, WeChat and Tencent starting in 45 days in the USA.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X