நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

எல்லோரும் கைவிரித்தார்கள்.. ஈரானை தாக்காமல் கடைசி நேரத்தில் பின்வாங்கிய டிரம்ப்.. பரபர காரணம்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முக்கிய காரணங்களால் கடைசி நேரத்தில் ஈரானை தாக்காமல் பின்வாங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள்.

Google Oneindia Tamil News

Recommended Video

    ஈரான் - அமெரிக்கா என்ன தான் பிரச்னை... இவர்களில் யார் பலசாலி ?

    நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பல்வேறு முக்கிய காரணங்களால் கடைசி நேரத்தில் ஈரானை தாக்காமல் பின்வாங்கிவிட்டார் என்று கூறுகிறார்கள்.

    அமெரிக்கா ராணுவ தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதல் தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது நேற்றைய பேட்டியில், போர் தொடுப்பதை அமெரிக்கா விரும்பவில்லை. போர் சில விஷயங்களுக்கு தீர்வாக அமையாது. அதனால் அதை நாங்கள் விரும்பவில்ல.

    ஈரானை தனிமைப்படுத்தவே நாங்கள் விரும்புகிறோம். ஈரான் மீதான நடவடிக்கைகளை நாங்கள் நிர்வாக ரீதியாக மேற்கொள்வோம். ஆயுத ரீதியாக செய்ய மாட்டோம் என்று குறிப்பிட்டார் .

    மக்கள் ஆதரவு

    மக்கள் ஆதரவு

    அதிபர் டிரம்ப்பின் இந்த முடிவிற்கு நிறைய காரணம் உள்ளது. அதில், மிக முக்கிய காரணமாக ஈரானுக்கு இருக்கும் மக்கள் ஆதரவு பார்க்கப்படுகிறது. ஈரானில் சுலைமானி இறுதி ஊர்வலத்தில் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் கூடினார்கள். இதனால் ஈரானில் போர் மூலம் அந்நாட்டு அரசை நீக்க முடியாது. அது நடக்காது என்பதை டிரம்ப் உணர்ந்து கொண்டார்.

    சொந்த கட்சி

    சொந்த கட்சி

    அதேபோல் ஈரானை தாக்குவதற்கு டிரம்பிற்கு பிரநிதிகள் சபை, செனட் சபை இரண்டும் எதிர்ப்பு தெரிவித்தது. டிரம்ப்பின் சொந்த கட்சியை சேர்ந்தவர்களே அவருக்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார்கள். குடியரசு கட்சியை சேர்ந்தவர்களே டிரம்பிற்கு எதிராக இதில் கருத்து கூறினார்கள்.

    தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    அதேபோல் இந்த வருட இறுதியில் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்கிறது. அப்படி நடக்கையில் ஈரான் உடன் அமெரிக்கா போர் செய்து கொண்டு இருக்க முடியாது. அதனால் போர் செய்தால் பொருளாதாரம் நாசம் ஆகும் என்று கூறி போரை தடுத்து இருக்கிறார்கள் .

    பெரிய அழுத்தம்

    பெரிய அழுத்தம்

    இது மட்டுமின்றி அதிபர் தேர்தலில் டிரம்ப் மீண்டும் போட்டியிட விரும்புகிறார். அதனால் போர் நடத்துவது சரியான ஐடியாவாக இருக்காது என்று அவர் முடிவு செய்துள்ளார். அந்நாட்டு நாடாளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சியும் இதில் டிரம்பிற்கு எதிராக தீர்மானம் கொண்டு வர இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    பென்டகன் கேட்கவில்லை

    பென்டகன் கேட்கவில்லை

    அதேபோல் டிரம்ப் பேச்சை பெரிதாக பென்டகனும் கேட்கவில்லை. ஈரான் மீது தாக்குதல் நடத்துவதை அந்நாட்டு ராணுவ தலைமையகம் பெரிதாக விரும்பவில்லை. இதனால் அதிபர் டிரம்பிற்கும் வேறு எதுவும் வழி இல்லாமல் போய்விட்டது.

    ஈரான் பலம்

    ஈரான் பலம்

    மிக முக்கியமாக ஈரான் மலேசியா, முக்கியமான ஓபெக் நாடுகள், ரஷ்யா , சீனா, பாகிஸ்தான் ஆகிய முக்கிய நாடுகளுடன் நட்பாக மாறியது. இவர்கள் அமெரிக்கா சுலைமானியை கொன்றதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஈரானுக்கு நாளுக்கு நாள் உலக நாடுகள் ஆதரவு தந்ததும் டிரம்ப் கடைசி நேரத்தில் முடிவை மாற்ற காரணம் என்கிறார்கள்.

    English summary
    President Trump didn't left with options other than going smooth with Iran.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X