நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றி.. அடுத்து நடக்க போகும் அதிரடி திருப்பங்கள்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப்பிற்கு எதிரான பதவி நீக்க தீர்மானம் வெற்றிபெற்றுள்ள நிலையில் அவருக்கு எதிரான புகார்கள் மீது செனட் சபையில் விசாரிக்கப்படும்.

அமெரிக்க அதிபர் டிரம்ப்பை பதவி நீக்கம் செய்ய கோரிய தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக அவர் மீது புகார் வைக்கப்பட்டுள்ளது.

அந்நாட்டு நாடாளுமன்ற பிரதிநிதிகள் சபையில் எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு பெரும்பான்மை இருக்கிறது. ஜனநாயக கட்சிக்கு அங்கு 233 உறுப்பினர்கள் உள்ளனர். அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு 197 உறுப்பினர்களே இருக்கிறார்கள். இதில் தீர்மானத்திற்கு ஆதரவாக 227 பேர் வாக்களித்தனர். தீர்மானத்திற்கு எதிராக 179 பேர் வாக்களித்தனர்.

அமெரிக்காவில் ஷாக்கிங் திருப்பம்.. அதிபர் டிரம்ப்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது!அமெரிக்காவில் ஷாக்கிங் திருப்பம்.. அதிபர் டிரம்ப்பை பதவிநீக்கக் கோரும் தீர்மானம் நிறைவேறியது!

கடைசி

கடைசி

அமெரிக்காவில் பொதுவாக பதவி நீக்க தீர்மானம் இரண்டு அவையிலும் விசாரிக்கப்பட வேண்டும். அந்த வகையில் இந்த புகார்கள் மீது இனி செனட் சபையில் விசாரிக்கப்படும். செனட் சபைதான் அமெரிக்க அதிபரை பதவியில் இருந்து விலக்கலாமா வேண்டாமா என்பதை தீர்மானம் செய்யும். அதாவது மொத்தமாக அவரை பதவி நீக்கம் செய்யும்.

எத்தனை

எத்தனை

அதிபர் டிரம்பின் குடியரசு கட்சிக்கு செனட் அவையில் 53 செனட் உறுப்பினர்கள் உள்ளனர். எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கு 47 உறுப்பினர்கள்தான் இருக்கிறார்கள். அங்கு டிரம்பை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என்றால் 66 செனட் உறுப்பினர்களின் பலம் தேவை.

எப்படி இருக்கிறார்கள்

எப்படி இருக்கிறார்கள்

இதனால் டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் அவருக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். இது கொஞ்சம் நடக்காத காரியம். இதனால் அங்கு டிரம்ப் தகுதி நீக்கம் செய்யப்படுவது சந்தேகம்தான், செனட் சபையில் டிரம்ப் காப்பாற்றப்பட வாய்ப்புள்ளது.

பதவியில் நீடிப்பார்

பதவியில் நீடிப்பார்

இதனால் டிரம்ப் குற்றமற்றவர் என்று வாக்களிக்கப்பட்டு அவர் பதவியில் நீடிப்பார். இதனால் அடுத்த வருடம் இறுதியில் நடக்கும் தேர்தல் வரை டிரம்ப் அதிபராக இருப்பார். அவர் பதவிக்கு எந்த ஆபத்தும் வராது.

ஒருவேளை நடந்தால்

ஒருவேளை நடந்தால்

ஆனால் டிரம்பிற்கு எதிராக செனட் சபையிலும் வாக்களிக்கப்பட்டு அது வெற்றிபெற்றால், அது பெரிய திருப்பமாக முடியும். இதனால் அவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, அதிபர் பதவிக்கு உடனே தேர்தல் நடக்கும் நிலை உருவாகும் .

English summary
President Trump has to face trial in Senate now as Impeachment motion against him wins in House of Representatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X