நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

'மியூஸ்' வந்தால் எல்லாம் சரியாகும்.. மனைவி மெலானியாவை கூடவே அழைத்து வரும் டிரம்ப்.. ஏன் தெரியுமா?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவை கூடுவே இந்திய அழைத்து வந்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவை கூடுவே இந்திய அழைத்து வந்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது.

Recommended Video

    Schedule of President Trump’s India visit | இன்று இந்தியா வரும் டிரம்பின் பயண விபரங்கள்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது மனைவி மெலானியாவை கூடவே இந்தியா அழைத்து வந்ததற்கு நிறைய காரணம் இருக்கிறது.

    அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் முதல் இந்திய அரசுமுறை பயணம் என்பது குறிப்பிடத்தக்கது. அமெரிக்க அதிபர் டிரம்ப் உடன் அவரின் மனைவி மெலானியா வந்து இருக்கிறார் .

    நாறும் யமுனை.. நாறும் யமுனை.. "கழுவி விடும்" உ.பி. அரசு.... ஆத்தோரமா மல்லிகை தோரணம் வேற.. டிரம்ப் வருகையால் பிஸி!

    என்ன பயணம்

    என்ன பயணம்

    இந்த பயணத்தில் மனைவி மெலானியாவை டிரம்ப் கூடவே அழைத்து வருவதற்கு நிறைய காரணம் இருக்கிறது. முதலில் டிரம்ப் மனைவி மெலானியாவை குறித்து தெரிந்து கொள்ள வேண்டும். அமெரிக்காவில் குடியேறி இருக்கும் பிற நாட்டு மக்களுக்கு எதிராக பேசும் டிரம்ப், கல்யாணம் செய்து இருப்பதே வேறு நாட்டை சேர்ந்த ஒரு பெண்ணைதான். மெலானியாவை ஸ்லோவேனியா நாட்டை சேர்ந்தவர். அமெரிக்காவிற்கு இவர் டூரிஸ்ட் விசா மூலம் வந்தவர்.

    விசா எப்படி

    விசா எப்படி

    அமெரிக்காவில் டூரிஸ்ட் விசா மூலம் வந்தவர்கள் சம்பளத்திற்கு வேலை பார்க்க கூடாது என்று விதி இருக்கிறது. ஆனால் அதையும் மீறி இவர் சம்பளத்திற்கு வேலை பார்த்ததாக புகார் உள்ளது. 1996ல் அமெரிக்கா வந்தவர் EB 1 விதி முறை 2000ம் ஆண்டு நேரடியாக விசா பெற்று, பின் குடியுரிமையும் பெற்றார். நான் மிகவும் திறமையானவர் என்பதை காரணமாக கூறி இவர் விசா பெற்றார். இதே காரணத்திற்காக 2000ம் ஆண்டு 6 பேர் மட்டுமே அமெரிக்காவில் விசா பெற்றனர்.

    சர்ச்சை எப்படி

    சர்ச்சை எப்படி

    ஆம் இவர் விசா பெற்றது அப்போதே சர்ச்சையானது. அப்போதில் இருந்து இப்போது வரை சர்ச்சைகளின் ராணியாக மெலானியா திகழ்கிறார். 1998ல்தான் இவர் டிரம்பை சந்தித்தார். அதன்பின் டிரம்ப் தனது 1999ல் தனது மனைவி மார்லாவை விவாகரத்து செய்துவிட்டு, மெலானியாவை திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணமும் பெரிய சர்ச்சையில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

    முக்கியம்

    முக்கியம்

    ஆனால் திருமணத்திற்கு பின் மெலானியாவை மிக முக்கியமான பொருளாதார நிபுணராக மாறினார். மெலானியாவை ஒரு பக்கம் மாடல். ஆனால் இன்னொரு பக்கம் தனது கணவரின் தொழில்களை முன்னின்று கவனித்துக் கொண்டார். டிரம்ப் செய்த ஒப்பந்தங்களில் மெலானியா மிக முக்கிய பங்கு வகித்தார். டிரம்ப் டவர் விவகாரத்தில் அடிக்கடி கோர்ட் படியேறி, பல்வேறு விஷயங்களை டிரம்பிற்கு சாதகமாக முடித்தவரும் மெலேனாதான்.

    தேர்தல் எப்படி

    தேர்தல் எப்படி

    மெலானியா டிரம்ப், டிரம்ப் தேர்தலில் நின்ற போது பெரிதாக பிரச்சாரம் செய்யவில்லை. பொதுவில் பெரிதாக மெலானியா பேசவில்லை. ஆனால் ஆன்லைன் சார்ந்த பணிகளை மெலேனா முன்னின்று கவனித்துக் கொண்டார். ஆன்லைன் சார்ந்து பிரச்சாரங்களை மெலானியாதான் முன்னின்று கவனித்துக் கொண்டார். அப்போதில் இருந்து இப்போது வரை இணையம் சார்ந்த பிரச்சாரம், டிரெண்ட்கள் குறித்து மீட்டிங் பலவற்றில் மெலானியா கலந்து கொண்டு இருக்கிறார்.

    என்ன விஷயம்

    என்ன விஷயம்

    மெலானியா குறித்து பேச, டிரம்பை விட நிறைய விஷயங்கள் இருக்கிறது. ஆனால் டிரம்பின் அதிபர் தேர்தலிலேயே அமைதியாக திரைக்கு பின் வேலை பார்த்த மெலேனா இந்தியா வர முடிவு செய்துள்ளார். அவரின் இந்திய வருகைக்கு நிறைய காரணங்கள் இருக்கிறது. முதல் விஷயம், வரி தொடர்பான ஒப்பந்தம். இந்தியா அமெரிக்கா மீது விதிக்கும் வரிகளை குறைப்பது தொடர்பாக இன்று பேச உள்ளனர்.

    இந்தியா வந்தால்

    இந்தியா வந்தால்

    அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்தியா வந்தாலும், இந்த பேச்சுவார்த்தையில் இந்திய அதிகாரிகள் உடன் பேச போவது மெலேனாதான். மிக சிறந்த பிஸ்னஸ் பேச்சாளராக பார்க்கப்படும், மெலேனா இன்று இந்திய அதிகாரிகளின் மனதை மாற்றுவார். அமெரிக்காவிற்கு ஏற்றபடி ஒப்பந்தங்களை செய்வார் என்று கூறுகிறார்கள். இவர் தனது கணவருக்காக நிறைய ஒப்பந்தங்களை வெற்றிகரமாக செய்து கொடுத்துள்ளார்.

    மீட்டிங் எப்படி

    மீட்டிங் எப்படி

    இன்று நடக்கும் மீட்டிங்கிலும் மெலானியா வெற்றிபெறுவார் என்று கூறுகிறார்கள். இவரை ஒரு பிஸ்னஸ்மேனாகவே இந்தியா அழைத்து வந்து இருக்கிறார்கள். அதேபோல் முக்கியமான பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தங்கள் குறித்தும் மெலானியா பேச இருக்கிறார். கடந்த வருடம் ரஷ்யா உடன் இந்தியா செய்த ஒப்பந்தங்கள் அமெரிக்காவிற்கு பிடிக்கவில்லை. அதை பற்றி இன்று மெலானியா பேசுவார் என்கிறார்கள்.

    சீக்ரெட் சாவேஸ்

    சீக்ரெட் சாவேஸ்

    மெலானியாவை அவரது சீக்ரெட் சர்வீஸ் கோட் மூலம் மியூஸ் என்று ரகசியமாக அழைப்பார்கள். அதேபோல் டிரம்பை மோகால் என்று அழைப்பார்கள். பொதுவாக மியூஸ் வந்தால் எல்லாம் மாறிவிடும் என்று வெள்ளை மாளிகையில் ஒரு கருத்து நிலவி வருகிறது. இன்றும் மெலானியா அப்படித்தான் முக்கியமான விஷயங்களை நிறைவேற்றுவார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    Trump India Visit: Why first lady Muse is also coming with Mogul today? - Here is the reason.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X