நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட அதிபருக்கே இப்படியா?.. டிரம்பின் ஐபோன் ஹேக் செய்யப்பட்டது?!.. சீனா வைத்த குறி!

அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் பயன்படுத்தி வரும் ஐபோனில் இருந்து சீனா தகவல்களை ஹேக் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டு இருக்கிறது.

அமெரிக்க அதிபர்களுக்கு நிறைய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. உலகிலேயே அமெரிக்க அதிபர்களுக்குத்தான் அதிக பாதுகாப்பு அளிக்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களுக்கு முன் அமெரிக்க அதிபருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அவரது ஐபோன் காரணமாக அவருக்கு பாதுகாப்பு பிரச்சனை ஏற்பட்டு இருப்பதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

[ஏர்செல்-மேக்சிஸ் வழக்கில் ப.சிதம்பரம் முதல் குற்றவாளி.. அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையில் தகவல்]

வழக்கமாக என்ன நடக்கும்

வழக்கமாக என்ன நடக்கும்

பொதுவாக அமெரிக்க அதிபர்கள் யாரும் ஐபோன் பயன்படுத்தியது இல்லை. தனிப்பட்ட பணிகளுக்கு ஐபோன் பயன்படுத்தினாலும், அலுவலக பணிகளுக்கு சேட்டிலைட் போன்களை மட்டுமே பயன்படுத்தி வருகிறார்கள். இது பென்டகனில் உள்ள டெக்கிகள் உருவாக்கி தந்த அதிநவீன சேட்டிலைட் போன்கள் ஆகும்.

என்ன குற்றச்சாட்டு

என்ன குற்றச்சாட்டு

இந்த நிலையில் தற்போதைய அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த போன்களை எப்போதாவதுதான் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அதாவது அலுவலக பயன்பாட்டிற்கும் அவர் தனது சொந்த ஐபோனை மட்டுமே பயன்படுத்துவதாக குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இதை குறித்து அமெரிக்க பத்திரிக்கைகள் பக்கம், பக்கமாக கட்டுரை எழுதியுள்ளது.

திருடி உள்ளதா?

திருடி உள்ளதா?

மேலும், சீனா அமெரிக்க அதிபரின் அலுவலக உரையாடல்களை திருடி இருப்பதாகவும் குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரின் ஐபோனில் இருக்கும் சில பாகங்கள் சீனாவில் தயாரானது, அதை வைத்து அதில் பேசப்படும் விஷயங்களை சீனா ஹேக் செய்து திருடுகிறது என்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது. இது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நடவடிக்கை என்ன

நடவடிக்கை என்ன

இந்த நிலையில் தனது அலுவலகத்தில் இருக்கும் அனைவரையும் அரசு அளித்த சேட்டிலைட் போன்களை பயன்படுத்தும்படி டிரம்ப் அறிவுறுத்தி இருக்கிறார். அதே சமயம் இந்த ஹேக்கிங் குற்றச்சாட்டையும் மறுத்துள்ளார். அப்படி தகவல்கள் எதுவும் திருடப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

English summary
Trump iPhone Hacked by China: US magazines create new fire in White House.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X