நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

83 பேரின் உயிர்.. எதையோ மூடி மறைக்கும் டிரம்ப்.. ஈரானை தொடர்ந்து ஆப்கானில் அடிவாங்கிய அமெரிக்கா!

ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் குறித்து பல முக்கிய விஷயங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் மூடி மறைக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம் குறித்து பல முக்கிய விஷயங்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் மூடி மறைக்கிறார் என்று புகார் எழுந்துள்ளது.

ஆப்கானிஸ்தானில் 83 பயணிகளுடன் சென்ற ஜெட் விமானம் விபத்துக்கு உள்ளானது.ஆப்கானிஸ்தானில் ஹெரெட் பகுதியில் இருந்து நேற்று காலை அந்த விமானம் புறப்பட்டுள்ளது. காபூல் நோக்கி அந்த விமானம் சென்றுள்ளது. அப்போது காஸ்னி அருகே விமானம் விபத்திற்கு உள்ளாகி, கீழே விழுந்து நொறுங்கி உள்ளது.

ஆப்கானிஸ்தானில் வெடித்த விமானம் அமெரிக்காவின் விமானப்படைக்கு சொந்தமானது என்று உண்மை வெளியாகி உள்ளது. அமெரிக்காவின் ரோந்து விமானமான Bombardier E-11A விழுந்து நொறுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விழுந்துவிட்டது, என்று அமெரிக்கா கடைசியாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால் இதில் பயணித்த 83 பேரின் நிலை என்ன என்று இன்னும் விவரம் வெளியாகவில்லை.

தாலிபான் ஆட்டமா? எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்!தாலிபான் ஆட்டமா? எரிந்தபடி விழுந்து நொறுங்கிய அமெரிக்க போர் விமானம்.. விசாரிக்கும் பென்டகன்!

மறுப்பு

மறுப்பு

இந்த விமான விபத்து அல்லது தாக்குதலில் அமெரிக்கா அதிபர் டிரம்ப் முக்கியமான விஷயங்களை மறைப்பதாக புகார் எழுந்துள்ளது. முதலில் ஆப்கானிஸ்தான் விபத்தில் அமெரிக்கா விமானம்தான் விழுந்தது என்பதையே அமெரிக்கா மறைத்து வந்தது. அதில் எங்கள் விமானப்படையின் விமானம் எதுவும் கீழே விழவில்லை. ஆப்கானிஸ்தானில் நிறைய விமானங்கள் அமெரிக்க விமானப்படை சார்பாக ரோந்து பணிகளை மேற்கொள்கிறது. ஆனால் இதுவரை எங்கள் விமானம் எதுவும் விழுந்ததாக எங்களுக்கு தகவல் எதுவும் வரவில்லை, என்றது.

புகைப்பட ஆதாரம்

புகைப்பட ஆதாரம்

அதன்பின் இது தொடர்பாக புகைப்பட ஆதாரங்கள் வெளியானது. அதேபோல் தாலிபானும் அமெரிக்கா விமானம்தான் விழுந்தது. இதை நேரில் பார்த்தோம். அங்கு உடல்கள் சிதறிக்கிடந்தது. விமானத்தில் அமெரிக்க விமானப்படை முத்திரை இருந்தது. இது பயணிகள் விமானம் இல்லை என்று தலிபான் கூறியது. இதையடுத்து அமெரிக்கா இந்த இராணுவ விமான விபத்தை ஒப்புக்கொண்டது.

இன்னும் இல்லை

இன்னும் இல்லை

ஆனால் இன்னும் இது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்தியாளர்களிடம் பேசவில்லை. அதேபோல் இது தொடர்பாக அமெரிக்க விமானப்படை வெளிப்படையாக இரங்கல் தெரிவிக்கவில்லை. இதெல்லாம் போக மிக மோசமாக அந்த 83 பேருக்கு என்ன ஆனது என்பதையும் அமெரிக்க விமானப்படை தெரிவிக்கவில்லை. 83 பேர் உயிரோடு இருக்கிறார்களா, எத்தனை பேர் பலியானார்கள் என்பதை குறித்தும் அமெரிக்கா எதுவும் தெரிவிக்கவில்லை.

டிரம்ப் எப்படி

டிரம்ப் எப்படி

அமெரிக்க அதிபர் டிரம்ப் இதில் தொடர்ந்து மௌனம் காப்பது நிறைய கேள்விகளை எழுப்பி உள்ளது. ஏன் டிரம்ப் இன்னும் வாய் திறக்கவில்லை, அவர் எதை மறைக்கிறார் என்று கேள்வி எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் ஈராக் தலைநகர் பாக்தாத்தில் இருக்கும் அமெரிக்க படைகளை ஈரான் தாக்கியது. அமெரிக்க படைகளின் அல் அசாத் விமான தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 12 ராக்கெட்டுகளை ஏவி தாக்குதல் நடத்தியது.

மீண்டும் இப்படி

மீண்டும் இப்படி

இந்த தாக்குதலின் போது எத்தனை அமெரிக்க வீரர்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று டிரம்ப் தெரிவிக்கவில்லை. அதன்பின்தான் சில அமெரிக்க படையினருக்கு இதனால் மூளையில் காயம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் இதையும் டிரம்ப் வெளியே தெரிவிக்காமல் மறைத்துவிட்டார். அதேபோல்தான் இப்போது ஆப்கானிஸ்தான் விமான விபத்து குறித்து டிரம்ப் இதுவரை எந்த கருத்தும் சொல்லாமல் மௌனியாக இருக்கிறார்.

English summary
Trump is hiding something in US military plane in Afghanistan yesterday,
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X