நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை.. அமெரிக்க அதிபர் டிரம்ப் பகீர் திட்டம்.. பெரும் போருக்கு ஆயத்தமா?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.

Recommended Video

    டிரம்ப் அணுகுண்டு சோதனை குறித்து ஆலோசனை..பெரும் போருக்கு ஆயத்தமா?

    கொரோனா பாதிப்பு காரணமாக உலகின் பல நாடுகளுக்கு இடையே உரசல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இது எப்போது வேண்டுமானாலும் போராக வெடிக்கலாம் என்று கூறுகிறார்கள்.

    இன்னொரு பக்கம் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையே லடாக் சிக்கிம் எல்லையில் சண்டை நடந்து வருகிறது. இதில் அமெரிக்கா இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்து வருகிறது. இதுவும் பெரிய போராக மாற வாய்ப்புள்ளது.

    24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா24 மணிநேரத்தில் 6,767 பேருக்கு கொரோனா பாதிப்பு-147 பேர் மரணம்- 50 ஆயிரத்தை நெருங்கும் மகாராஷ்டிரா

    அமெரிக்கா சோதனை

    அமெரிக்கா சோதனை

    இந்த நிலையில்தான் அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். கடைசியாக அமெரிக்கா கடந்த 1992ல் அணு ஆயுத சோதனை செய்தது. ரஷ்யாவுடன் மோதல் இருந்த சமயத்தில் அமெரிக்கா இந்த சோதனையை செய்தது. அதன்பின் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் மூலம் அமெரிக்கா சோதனைகளை கைவிட்டது.

    பொருளாதார தடை

    பொருளாதார தடை

    அமெரிக்கா அணு ஆயுத சோதனையை கைவிட்டது போலவே மற்ற நாடுகளும் அணு ஆயுத சோதனையை செய்ய கூடாது என்று உத்தரவிட்டது. இதையும் மீறி அணு ஆயுத சோதனை மேற்கொண்ட வடகொரியா மீது அமெரிக்கா பொருளாதார தடை விதித்தது. அணு ஆயுத ஆராய்ச்சி செய்ய முயன்ற ஈரான், ஈராக் மீது தாக்குதல் நடத்தியது, உலகில் எந்த நாடும் அணு ஆயுதம் பக்கம் இனி செல்லவே கூடாது என்று அமெரிக்கா முடிவு செய்தது.

    பகீர் திருப்பம்

    பகீர் திருப்பம்

    இந்த நிலையில் திடீர் திருப்பமாக அமெரிக்க பாதுகாப்பு படை மீண்டும் அணுகுண்டு சோதனை நடத்துவது தொடர்பாக அமெரிக்க அதிபர் டிரம்ப் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்ட ஆலோசனை கடந்த மே 15ம் தேதியே நடந்துவிட்டது என்று கூறுகிறார்கள். வெள்ளை மாளிகையில் பென்டகன் அதிகாரிகள், சில ராணுவ மேஜர்கள் முன்னிலையில் இந்த ஆலோசனை நடந்துள்ளது. இதில் முடிவு எதுவும் எட்டப்படவில்லை.

    எந்த முடிவும் இல்லை

    எந்த முடிவும் இல்லை

    அதன்படி இந்த கூட்டத்தில் முடிவு எட்டப்படாத காரணத்தால் தொடர்ந்து பல்வேறு ஆலோசனைகளை அமெரிக்கா மேற்கொள்ளும் என்றும் கூறுகிறார்கள். விரைவில் இதில் முக்கிய முடிவு எடுக்கப்படும் என்று கூறுகிறார்கள். அமெரிக்கா வேகமாக ராபிட் அணு குண்டு டெஸ்ட் நடத்தும் என்கிறார்கள். சீனாவும், ரஷ்யாவும் ரகசியமாக அணுகுண்டு சோதனைகளை நடத்தி வருகிறது. அதனால் நாங்களும் செய்வோம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.

    மறுப்பு தெரிவித்தது

    மறுப்பு தெரிவித்தது

    ஆனால் இதை சீனா, ரஷ்யா இரண்டு நாடுகளும் மறுத்துள்ளது. சீனாவிற்கும் ரஷ்யாவிற்கு தக்க பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்கா இந்த செயலை செய்வதாக கூறுகிறார்கள். உலகின் பல்வேறு அணு ஆயுத எதிர்ப்பாளர்கள் இதை எதிர்த்துள்ளனர். அமெரிக்கா மீண்டும் அணு ஆயுதங்களை சோதனை செய்ய முயன்றால் அது பெரிய பிரச்சனையாக மாறும் என்கிறார்கள். இது பெரும் போருக்கான ஆயுத்தம் என்கிறார்கள்.

    English summary
    President Trump on Nuke talks: The US may test one atom bomb after decades.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X