நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

பனிப்போர் தொடங்கியது.. சீன விமானங்களுக்கு தடை விதித்த டிரம்ப்.. கடும் கோபத்தில் ஜிங்பிங்.. பின்னணி!

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவின் பயணிகள் விமானங்களை தடை செய்வதாக அமெரிக்க அரசு முடிவு எடுத்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இரண்டு நாட்டு போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது.

Recommended Video

    இந்தியாவை கூட்டு சேர்க்கிறீர்களா? அமெரிக்காவை எச்சரித்த சீனா!

    சீனாவின் பயணிகள் விமானங்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவின் போர் விமானங்களை தடை செய்ய இருப்பதாக தகவல் வந்துள்ளது. இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளது.

    அமெரிக்காவில் விமான போக்குவரத்து தொடங்க உள்ள நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளார். சீனாவை எதிர்க்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த திட்டத்தில் இருக்கிறார்.

    6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள் 6ஆம் தேதி ராணுவ தரப்பில் பேச்சுவார்த்தை.. எல்லையில் பின்வாங்கிய இந்திய-சீன படைகள்

    போர் அறிகுறி

    போர் அறிகுறி

    சீனாவின் பயணிகள் விமானங்களை தடை செய்வதாக அமெரிக்க அரசு முடிவு எடுத்து இருப்பது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது இரண்டு நாட்டு போருக்கான அறிகுறியாக பார்க்கப்படுகிறது. பொதுவாக இரண்டு நாடுகளுக்கு இடையில் போர் நடக்கும் போது, முதலில் எதிரி நாட்டு பொருட்கள், நிறுவனங்கள், போக்குவரத்துக்கு தடை விதிப்பார்கள். தற்போது அமெரிக்காவிலும் இதேபோல் அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

    அரசு முடிவு என்ன

    அரசு முடிவு என்ன

    இதன் மூலம் சீனா - அமெரிக்கா இடையிலான உறவு மொத்தமாக துண்டிக்கப்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இதே நிலை தொடர்ந்தால்அமெரிக்காவில் இருந்து சீனர்கள் விரைவில் வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள். இதை போருக்கான ஆயத்தமா என்றும் கேள்வி எழுப்ப தொடங்கி உள்ளனர். இது தொடர்பாக சீனா இன்னும் கருத்து தெரிவிக்கவில்லை. சீனா இதற்கு எப்படி எதிர்வினையாற்றும் என்று கேள்வி எழுந்துள்ளது.

    போர் அச்சம்

    போர் அச்சம்

    சீனாவின் பதில், இந்த பதற்றத்தை இன்னும் அதிகரிக்கலாம். சீனா கடும் கோபத்தில் உள்ளது மட்டும் உறுதி. அதேபோல் இன்னொரு பக்கம் அமெரிக்காவை பின் தொடர்ந்து அமெரிக்காவின் நெருக்கமான நட்பு நாடுகளும் சீனாவின் பயணிகள் விமானங்களை தடை செய்ய வாய்ப்பு உள்ளது. சீனாவை உலக நாடுகளிடம் இருந்து தனிமைப்படுத்த முடிவு செய்து அமெரிக்கா இப்படி செயல்களை செய்து வருகிறது. எதுவும் நல்ல அறிகுறி இல்லை என்று கூறுகிறார்கள்.

    ஏற்கனவே தடை

    ஏற்கனவே தடை

    இதற்கு முன்னே அமெரிக்கா சீனாவிற்கு எதிரான சிறிய தடைகளை விதித்து இருக்கிறது. சீனாவின் ஆராய்ச்சியாளர்கள் , சில மாணவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சீன நிறுவனங்களை கண்காணிக்க டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இன்னும் சில நாட்களில் சீனா மீது பொருளாதார ரீதியான தடைகள் கொண்டு வரப்பட வாய்ப்புள்ளது என்றும் கூறுகிறார்கள்.

    பனிப்போர் எப்படி

    பனிப்போர் எப்படி

    இனி வரும் நாட்களில் பெரிய தடைகள் வரும். இதனால் சீனா அமெரிக்கா இடையில் எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வ உறவு துண்டிப்பு ஏற்படலாம். எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்க வாய்ப்பு இருக்கிறது. தற்போது நிகழ்ந்து வருவது பனிப்போர். இதை இரண்டு நாடுகளும் அதிகாரபூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் அதுதான் நிஜம் என்று கூறுகிறார்கள்.

    English summary
    US President Trump's ban on China passenger aircraft will be an act of war.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X