நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது.. டிரம்ப் அதிர்ச்சி முடிவு!

அமெரிக்காவில் பிறக்கும் பிறநாட்டை சேர்ந்தவர்களின் குழந்தைகள் நேரடியாக அமெரிக்க குடியுரிமை பெற முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டம் கொண்டு வர இருக்கிறார்.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவில் பிறக்கும் வெளிநாட்டு குழந்தைகளுக்கு குடியுரிமை கிடையாது.. டிரம்ப் முடிவு!- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவில் பிறக்கும் பிறநாட்டை சேர்ந்தவர்களின் குழந்தைகள் நேரடியாக அமெரிக்க குடியுரிமை பெற முடியாது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் சட்டம் கொண்டு வர இருக்கிறார்.

    அமெரிக்க சட்டத்தின் படி, ஒருவர் எந்த நாட்டை சேர்ந்தவராக இருந்தாலும், அந்த நபர் அமெரிக்காவில் வசித்து வரும் சமயத்தில் அங்கு அவருக்கு குழந்தை பிறந்தால், அந்த குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை வழங்கப்படும். நேரடியாக அந்த குழந்தை அமெரிக்க குடிமகனாக ஏற்றுக்கொள்ளப்படும்.

    அமெரிக்கா மட்டுமின்றி கனடா போன்ற உலக நாடுகளிலும் இது போன்ற விதிகள் உள்ளது. இந்த விதியை தன்னுடைய பிரதமர் அதிகாரத்தை பயன்படுத்தி மாற்ற போவதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

    மாற்ற முடிவு

    மாற்ற முடிவு

    இந்த நிலையில் இந்த சட்டத்தை மாற்ற போவதாக அமெரிக்க அதிபர் அறிவித்து இருக்கிறார். அமெரிக்காவில் இப்படி எல்லோரும் வந்து குழந்தை பெற்றுக்கொண்டு குடியுரிமை பெறுவதை ஏற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார். விரைவில் இதற்காக ஆணையிடுவேன் என்று டிரம்ப் கூறியுள்ளார்.

    இனி முடியாது

    இனி முடியாது

    இதனால் இனி வரும் காலங்களில் அமெரிக்காவில் குழந்தை பெற்றால் அந்த குழந்தை அமெரிக்க குடிமகனாக கருதப்படாது. அதற்கு பதிலாக எப்போதும் குடியுரிமை வழங்க சாதாரணமாக செய்யப்படும் வழிமுறைகளே குழந்தைகள் குடியுரிமை பெறவும் செய்யப்படும். நேரடியாக குடியுரிமை பெறும் உரிமை ரத்து செய்யப்படும்.

    காரணம் 1

    காரணம் 1

    இதற்கு இரண்டு காரணம் சொல்லப்படுகிறது. ஹான்டுரஸ் போன்ற மத்திய அமெரிக்க நாடுகளில் இருந்து அமெரிக்காவிற்கு மக்கள் அகதிகளாக வருகிறார்கள். இவர்களை தடுக்க அமெரிக்க அரசு கடுமையாக கஷ்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இவர்களின் குழந்தைகள் அமெரிக்காவில் நேரடியாக குடியுரிமை பெறுவதை தடுப்பதற்காக இந்த மாற்றமும் கொண்டு வரப்பட உள்ளது.

    காரணம் 2

    காரணம் 2

    வரும் நவம்பர் 6ம் தேதி அமெரிக்காவில் மிட் டெர்ம் (mid term)தேர்தல்கள் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் மூன்றில் ஒருபங்கு அமெரிக்க செனட்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அமெரிக்க பிரதிநிதிகளின் சபையை சேர்ந்த 435 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இது அதிபர் தேர்தலுக்கு சமமான தேர்தலாக பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்காக ஓட்டுக்களை கவர டிரம்ப் செய்யும் வேலைதான் இந்த அதிரடி என்று கூறுகிறார்கள்.

    பிரச்சனை என்ன

    பிரச்சனை என்ன

    ஆனால் அதிபரால் இந்த சட்டத்தை கொண்டு வர முடியாது என்றுள்ளனர். அதன்படி அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்தின் 14வது விதியின்படி அமெரிக்காவில் பிறக்கும் குழந்தைகளுக்கு குடியுரிமை பெற உரிமை உள்ளது. அதை அதிபர் நினைத்தால் மாற்ற முடியாது. அவையை கூட்டி பெரும்பான்மை உறுப்பினர்களின் கையெழுத்துடன் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று சட்ட வல்லுநர்கள் கூறுகிறார்கள்.

    English summary
    Trump's new Rule: He is gonna sign an order to end birthright citizenship.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X