நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அட.. தேர்தலில் போட்டியிடும் முன்பே முதல் வெற்றி.. டிரம்பிற்கு ஒரே சந்தோசம்.. மீண்டும் அதிபராகிறாரா?

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து டெமாக்ரடிக் வேட்பாளர் கமலா ஹாரிஸ் விலகியது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரிய அளவில் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து டெமாக்ரடிக் வேட்பாளர் கமலா ஹாரிஸ் விலகியது அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு பெரிய அளவில் வெற்றியாக பார்க்கப்படுகிறது.

அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து தமிழக வம்சாவளியை சேர்ந்த பெண்மணி கமலா ஹாரிஸ் விலகி இருக்கிறார். தனக்கு ஆதரவு குறைந்து கொண்டே வந்ததால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளார். பிரச்சாரம் செய்ய போதிய பணம் இல்லை என்று கூறி அவர் பதவி விலகி உள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல்கள் அடுத்த வருடம் நவம்பர் மாதம் நடக்க உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பதவிக்காலம் 2020 இறுதியில் முடிகிறது. இந்த தேர்தலில் ரிபப்ளிக் கட்சி மற்றும் டெமாக்ரடிக் கட்சி சார்பாக இரண்டு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்! அமெரிக்க அதிபர் தேர்தல்.. போட்டியிலிருந்து விலகினார் சென்னை பெண் கமலா ஹாரிஸ்.. ஷாக்கிங் காரணம்!

வெற்றி

வெற்றி

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இது பெரிய அளவில் வெற்றியாக பார்க்கப்படுகிறது. டிரம்பிற்கு எதிராக மிக கடுமையாக பேசி வந்தவர்தான் கமலா. இரண்டு நாட்களுக்கு முன் டிரம்பை ஜெயிலில் அடைக்க வேண்டும் என்றும் கூட கமலா குறிப்பிட்டு இருந்தார். ஆனால் இன்னொரு பக்கம் கமலாவிற்கான ஆதரவும் குறைந்து கொண்டே வந்தது.

இன்னொரு ஆதரவு

இன்னொரு ஆதரவு

டெமாக்ரடிக் கட்சியில் கமலாவை விட துளசி கப்பார்டுக்கு அதிக ஆதரவு உள்ளது. அமெரிக்காவின் செனட் சபையில் முதல் இந்து பெண்மணி இவர். இவர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர். இந்த நிலையில் கமலா ஹாரிஸ் விலகியதால் துளசி கப்பார்ட் அதிக முக்கியத்துவம் பெறுகிறார்.

போட்டிகள் நிலவி வருகிறது

போட்டிகள் நிலவி வருகிறது

ஒரே கட்சியை சேர்ந்த இந்த இரண்டு பேருக்கும் இடையில் தேர்தலில் போட்டியிடுவதற்கான கடுமையான போட்டிகள் நிலவி வந்தது. கடைசியில் கமலா விலகி உள்ளார். இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இது சாதகமாக பார்க்கப்படுகிறது.

மீண்டும் தேர்தல்

மீண்டும் தேர்தல்

டிரம்ப் மீண்டும் ரிபப்ளிக் கட்சி சார்பாக தேர்தலில் போட்டியிட திட்டமிட்டு வருகிறார். இந்த நிலையில் டிரம்பிற்கு கமலா பெரிய போட்டியாக இருக்க போகிறார் என்று எல்லோரும் நினைத்தார்கள். ஆனால் தற்போது கமலா விலகி உள்ளார். ஆகவே இது டிரம்பிற்கு முதல் வெற்றி ஆகும்.

கடைசியில் எப்படி

கடைசியில் எப்படி

இன்னும் டெமாக்ரடிக் கட்சியின் துளசி மற்றும் முன்னாள் துணை அதிபர் ஜோ பிடனை மட்டும் டிரம்ப் சமாளித்துவிட்டால் போதும். கண்டிப்பாக அவர் மீண்டும் அமெரிக்காவின் அதிபராகிவிடுவார் என்று கூறுகிறார்கள். பெரும்பாலும் இறுதிப்போட்டி டிரம்ப் vs துளசி என்றுதான் இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

பெரிய கொண்டாட்டம்

பெரிய கொண்டாட்டம்

கமலா ஹாரிஸ் விலகலை இப்போதே டிரம்ப் ஆதரவாளர்கள் மற்றும் அவரது கட்சியினர் கொண்டாட தொடங்கி உள்ளனர். இன்னொரு பக்கம் துளசி கப்பார்ட் ஆதரவாளர்களும் இதை பெரிய அளவில் கொண்டாடி வருகிறார்கள்.

சுவாரசியம்

சுவாரசியம்

இதில் துளசி பொருளாதார ரீதியாக டிரம்ப் அளவிற்கு பலம் வாய்ந்தவர் கிடையாது. ஆனால் அவருக்கு மக்கள் ஆதரவு உள்ளது. அதேபோல் டிரம்ப் இப்போது பதவி நீக்க வழக்கில் சிக்கி தவிப்பதால், அமெரிக்க அதிபர் தேர்தலில் இனி என்னவெல்லாம் நடக்கும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

English summary
Trump tastes his first snap of victory after Kamala Harris drops her out of 2020 US Presidential Race.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X