நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்தியாவிற்கு வர முடியாது.. மோடியின் கோரிக்கையை அதிரடியாக நிராகரித்த டிரம்ப்.. திடுக் காரணம்!

இந்தியாவிற்கு வரும்படி அழைத்த பிரதமர் மோடியின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியாவிற்கு வரும்படி அழைத்த பிரதமர் மோடியின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் நிராகரித்துள்ளார்.

இந்தியா அமெரிக்கா இரண்டு நாடுகளும் பல வருடங்களாக நட்பு நாடுகளாக இருந்து வருகிறது. இரண்டு நாட்டிலும் தலைவர்கள் மாறினாலும் நட்பு தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்த நிலையில்தான் கடந்த சில நாட்களாக இந்தியா அமெரிக்காவை விட, சக ஆசிய நாடுகளிடம் நெருக்கம் காட்ட தொடங்கியுள்ளது. இந்த நிலையில் இந்தியாவிற்கு வரும்படி அழைத்த பிரதமர் மோடியின் கோரிக்கையை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார்.

அழைப்பு

அழைப்பு

கடந்த ஏப்ரல் மாதம், இந்தியாவில் 2019ல் நடக்கும் குடியரசு தின விழாவில் கலந்து கொள்ளும்படி அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கண்டிப்பாக வருவார் என்றும் கூறப்பட்டது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு செப்டம்பர் மாதம் அறிவிக்கப்படும் என்றனர்.

[டிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது? ]

அழைப்பும் மறுப்பும்

அழைப்பும் மறுப்பும்

ஆனால் இந்தியாவின் அழைப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் மறுத்துள்ளார். பல முக்கிய காரணங்களால் இந்தியா வர முடியாது என்றுள்ளார். இந்த கடிதம் ''கொஞ்சம் காட்டமாக'' இருப்பதாகவும் பிரதமர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அமெரிக்க அதிபர் ஒருவர் இப்படி இந்திய பிரதமரின் கோரிக்கையை மறுப்பது இதுவே முதல்முறை.

காரணம் இரண்டு

காரணம் இரண்டு

கடந்த சில வாரங்களுக்கு முன் இந்தியா ரஷ்யாவிடம் இருந்து ஏவுகணைகளை வாங்கியது. அதிநவீன எஸ்-400 ரக ஏவுகணைகளை இந்தியா வாங்கியது. அமெரிக்காவின் தடையை மீறி இந்தியா இந்த ஒப்பந்தத்தை செய்தது அமெரிக்காவிற்கு கோபத்தை ஏற்படுத்தி உள்ளது. இது டிரம்ப்பின் இந்த முடிவிற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இரண்டாவது காரணம்

இரண்டாவது காரணம்

அதேபோல் இந்தியா ஈரானிடம் இருந்து தொடர்ந்து எண்ணெய் பொருட்கள் வாங்கும் முடிவில் உள்ளது. ஈரானிடம் இருந்து தனது நட்பு நாடுகள் எண்ணெய் பொருட்கள் வாங்க கூடாது என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து இருந்தது. ஆனால் அதையும் மீறி இந்தியா எண்ணெய் வாங்க முடிவெடுத்தது. இது டிரம்ப்பின் இந்த முடிவிற்கு இன்னொரு காரணமாக பார்க்கப்படுகிறது.

பெரும் பிரச்சனை

பெரும் பிரச்சனை

இது இந்தியா அமெரிக்கா இடையே நிலவிவந்த மறைமுகமான பிரச்சனையை வெளிப்படை ஆக்கியுள்ளது. இரண்டு நாட்டு உறவில் இதன் காரணமாக மேலும் விரிசல் விழுந்து இருக்கிறது. இது என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.

English summary
Trump turns down Modi's invitation to come to India on Republic day.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X