அந்த இரண்டு பேர் யார்? அமெரிக்க படை தாக்குதலில் கைதான 2 ஐஎஸ் தீவிரவாதிகள்.. பென்டகன் சீக்ரெட்!
நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொலை செய்யப்பட்ட போது 2 முக்கியமான ஐஎஸ் தீவிரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அமெரிக்க படை தாக்க வந்த போது, ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார். சிரியாவில் அமெரிக்கப்படை தாக்குதல் நடத்திய போது பக்தாதி பலியானார்.
அல் பக்தாதி குறித்து சிஐஏ கொடுத்த உளவுத் தகவலின்படி அமெரிக்க படை தாக்குதல் நடத்தி உள்ளது. இந்த தாக்குதல் குறித்த முழு விவரங்கள், ரகசியங்கள் வெளியாகி வருகிறது.
இன்று மாலை வரைதான் டைம்.. மருத்துவர்களுக்கு தமிழக அரசு காலக்கெடு.. அமைச்சர் விஜயபாஸ்கர் அதிரடி!

2 பேர் கைது
இந்த நிலையில், இந்த ரெய்டின் போது 2 ஐஎஸ்ஐஎஸ் தலைகள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள். இவர்களை அமெரிக்க ராணுவம் கொலை செய்யவில்லை. மாறாக இவர்களை கைது செய்து, ஹெலிகாப்டரில் தங்களுடன் அழைத்து வந்து இருக்கிறார்கள்.

ரகசியமான இடம்
தற்போது இவர்கள் ரகசியமான இடத்தில் வைத்து விசாரணை செய்யப்பட்டு வருகிறார்கள். மொத்தம் அந்த கட்டிடத்தில் இருந்து 6+ பெண்களில் 4 பெண்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இவர்கள் உடலில் பாம் கட்டி இருந்ததால் சுட்டு கொலை செய்யப்பட்டனர். இன்னொரு ஐஎஸ் தீவிரவாதி ஒருவனும் இதில் சுட்டு கொலை செய்யப்பட்டார்.

கைது யார்?
ஆனால் கைது செய்யப்பட்ட இரண்டு தீவிரவாதிகள் யார் என்பதுதான் தற்போது பெரிய புதிராக இருக்கிறது. பென்டகன் அவர்களின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று கூறிவிட்டது. இரண்டு பேரும் முக்கியமான ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகள், அவர்களிடம் இருந்து முக்கியமான விஷயங்களை பெற முடியும். அதனால் அவர்களின் அடையாளத்தை வெளியிட முடியாது என்று பென்டகன் கூறியுள்ளது.

ஹார்ட் டிஸ்க்குகள்
அதேபோல் இந்த தாக்குதலில் நிறைய ஹார்ட் டிஸ்க்குகள் கைப்பற்றப்பட்டு உள்ளது. நிறைய எலக்ட்ரானிக் கருவிகள் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் ஐஎஸ் அமைப்பின் முக்கியமான விஷயங்கள் எல்லாம் வெளியே தெரியும். இது மிக முக்கியமான் ஆதாரங்கள் என்று பென்டகன் தெரிவித்து இருக்கிறது.

ஏன் இப்படி?
இந்த நிலையில் அமெரிக்க படையால் கைது செய்யப்பட்ட தீவிரவாதிகள் குறித்து ஏன் பென்டகன் ரகசியம் காக்கிறது என்று உலக நாடுகள் கேள்வி கேட்க தொடங்கி உள்ளது. முக்கியமாக துருக்கி இந்த விஷயத்தில் ஆர்வமாக இருக்கிறது. கைது செய்யப்பட்ட இரண்டு பேர் யார் என்று துருக்கி விசாரிக்க தொடங்கி உள்ளது.