நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனா: அமெரிக்காவில் தொடரும் துயரம்- நேற்றும் ஒரே நாளில் 2479 பேர் மரணம்-பலி 30 ஆயிரத்தை எட்டுகிறது

Google Oneindia Tamil News

நியூயார்க்: கொரோனா வைரஸ் தொற்று நோயால் அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2479 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அமெரிக்காவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 30 ஆயிரத்தை எட்டுகிறது.

Recommended Video

    ஒபாமாவின் தவறு தான் கொரோனா வைரஸ் பரவ காரணம் - டிரம்ப் குற்றச்சாட்டு

    உலக நாடுகளில் அமெரிக்காவில்தான் கொரோனாவின் தாக்கம் மிக மிக அதிகமாக இருந்து வருகிறது. ஒவ்வொரு நாளும் சராசரியாக 2,000க்கும் அதிகமானோர் மாண்டு போகின்றனர்.

    U.S. coronavirus deaths increase by 2479; Total death cases to reach 30,000

    அமெரிக்காவில் நேற்று ஒரே நாளில் 2,479 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இதனையடுத்து அங்கு பலியானோர் எண்ணிக்கை 28,526 ஆக உயர்ந்துள்ளது.

    அமெரிக்காவுக்கு அடுத்ததாக பிரான்ஸில் நேற்று ஒரே நாளில் 1,438 பேர் மாண்டு போயினர். பிரான்ஸில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17,167 ஆக அதிகரித்திருக்கிறது.

    உயிரிழப்புகளில் அமெரிக்காவை தொடர்ந்து இத்தாலி 2-வது இடத்தில் இருக்கிறது. இத்தாலியில் 21,645 பேர் மொத்தம் மரணமடைந்துள்ளனர். ஸ்பெயினில் 18,812, இங்கிலாந்தில் 12,868 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர். ஈரானில் 4,777; பெல்ஜியத்தில் 4,440; நெதர்லாந்தில் 3,134 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

    2 நாளில் நம்பிக்கை அளித்த மாற்றங்கள்.. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாததுக்கு இதுவே காரணம்! 2 நாளில் நம்பிக்கை அளித்த மாற்றங்கள்.. தமிழகத்தில் கொரோனா சமூக பரவலாக மாறாததுக்கு இதுவே காரணம்!

    உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 1,34,540 ஆகவும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20, 82, 296 ஆகவும் அதிகரித்திருக்கிறது.

    English summary
    U.S. coronavirus deaths rising by 2479 on Wednesday.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X