நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இந்தியா- சீனா இடையே மோதல் குறித்து ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை

Google Oneindia Tamil News

நியூயார்க்: இந்தியா- சீனா இடையேயான மோதல் குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார்.

இந்தியாவின் லடாக் எல்லைக்குள் அத்துமீறி உள்நுழைந்த சீனா இந்திய ராணுவ வீரர்களைத் தாக்கியது. இதில் 20 இந்திய ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர்.

UN chief expresses concern on violence between China and India

இதற்கு பதிலடியாக இந்திய ராணுவமும் திருப்பித் தாக்கியது. இதில் 43 சீனா வீரர்கள் பலியாகினர். இதனால் இருநாடுகளிடையே உச்சகட்ட போர் பதற்றம் நிலவுகிறது.

லடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்லடாக் எல்லையில் இந்தியாவின் பதிலடியில் 43 சீனா ராணுவ வீரர்கள் பலி- பலர் படுகாயம்

இது தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸ் கவலை தெரிவித்துள்ளார். இந்தியாவும் சீனாவும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும் என்று அன்டோனியா குட்டெரெஸ் வேண்டுகோள் விடுத்துள்ளதாக அவரது செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

Recommended Video

    IndiaChina Border Fight1975ம் ஆண்டுக்கு பிறகு முதல் முறை சீனா செய்யும் தவறு பதிலடிக்கு இந்தியா தயார்

    ஐ.நா. பொதுச்செயலாளர் அன்டோனியா குட்டெரெஸின் செய்தி தொடர்பாளர் எரி கனெகோ கூறுகையில், எல்லை கட்டுப்பாட்டு கோட்டுப் பகுதியில் இருநாடுகளிடையே மோதல் ஏற்பட்டு வன்முறை நிகழ்ந்துள்ளது கவலை தருகிறது. இரு நாடுகளும் அதிகபட்ச பொறுமையை கடைபிடிக்க வேண்டும். இருநாடுகளும் தங்களது பகுதிகளுக்குள் படைகளை விலக்கிக் கொண்டிருப்பதை வரவேற்கிறோம் என கூறியுள்ளார்.

    English summary
    UN chief expresses concern about reports of deaths at LAC between China and India.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X