• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
LIVE

பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துகின்றன: பாக். கை விமர்சித்த மோடி

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 76வது அமர்வில் பிரதமர் நரேந்திர மோடி இன்று உரையாற்றினார்.
பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாகிஸ்தானை மறைமுகமாக விமர்சித்த பிரதமர் மோடி, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் குறித்து கவலையை வெளிப்படுத்தினார்.

ஐ.நா பொதுச்சபை மண்டபத்தில் உரையாற்றும் முதல் உலகத் தலைவர் என்ற பெருமை பெருகிறார், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.

பிரதமர் மோடியின் பேச்சு உலகத் தலைவர்களிடையே மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஒன்றாக உள்ளது.

PM Narendra Modi UNGA speech today LIVE Updates in Tamil: What we can expect

Newest First Oldest First
7:19 PM, 25 Sep
ஆப்கான் மக்கள் இன்னல்களுக்கு ஆளாகாமல் நாம் அனைவரும் அவர்களை காக்க வேண்டும்: பிரதமர்
7:19 PM, 25 Sep
பயங்கரவாத ஒழிப்பு, பாதுகாப்பு விவகாரங்களில் உலக நாடுகள் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும்
7:19 PM, 25 Sep
அச்சமின்றி நாம் நமது இலக்கை நோக்கி முன்னேறினால் நிச்சயம் வெற்றி கிடைக்கும்: பிரதமர் மோடி
7:19 PM, 25 Sep
சரியான நேரத்தில் சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐநாவில் பிரதமர் மோடி உரை
7:18 PM, 25 Sep
உலகம் முழுவதும் உள்ள தடுப்பூசி உற்பத்தியாளர்கள் இந்தியாவில் தடுப்பூசி தயாரிக்க முன்வர வேண்டும்: பிரதமர்
7:18 PM, 25 Sep
உலகிற்கான பயங்கரவாத அச்சுறுத்தல் அதிகரித்து வருவதாக பிரதமர் நரேந்திர மோடி கவலை
7:17 PM, 25 Sep
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதம் வளர்ந்தால் அது உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாகிவிடும்: பிரதமர் மோடி
7:17 PM, 25 Sep
பிற்போக்கு சிந்தனை, அதனால் உருவாகும் பயங்கரவாதத்தை உலகம் தடுக்க வேண்டும்: பிரதமர் மோடி
7:17 PM, 25 Sep
பயங்கரவாதத்தை சில நாடுகள் அரசியல் கருவியாக பயன்படுத்துவதாக பாக்.மீது பிரதமர் மறைமுக விமர்சனம்
7:09 PM, 25 Sep
ஏழை மக்களுக்கு வீடுகள் மற்றும் மருத்துவக் காப்பீடு போன்றவற்றை இந்திய அரசு அளித்து வருகிறது : மோடி
7:08 PM, 25 Sep
சொட்டுமருந்து போல செலுத்தக்கூடிய தடுப்பூசி, எம்ஆர்என்ஏ தடுப்பூசி ஆகியவை இந்தியாவில் தயாராகின்றன
7:06 PM, 25 Sep
பொருளாதார வளர்ச்சி , சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து இந்தியா செயல்படுகிறது
7:05 PM, 25 Sep
சுற்றுச்சூழல் மாசுபடாத வகையில் மின் உற்பத்தி செய்வதில் இந்தியா முன்னணியில் உள்ளது: பிரதமர்
7:05 PM, 25 Sep
உலகிலேயே 12 வயதுக்கு மேற்பட்டோருக்கு அளிக்கக்கூடிய டி.என்.ஏ. தடுப்பூசியை உருவாக்கியுள்ளோம் : மோடி
7:03 PM, 25 Sep
ஆளில்லா விமானங்கள் மூலம் நிலங்களை அளவை செய்து ஏழைகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது
7:03 PM, 25 Sep
நாடு முழுவதும் 6 லட்சம் கிராமங்களை ட்ரோன் மூலம் கண்காணித்து மேம்படுத்த திட்டம் : மோடி
7:03 PM, 25 Sep
அனைவருக்கும் வளர்ச்சி கிடைக்கவேண்டும் என்ற நோக்கம் ஜனநாயகத்தின் மூலம் சாத்தியமாகிறது
7:01 PM, 25 Sep
உலக ஜனநாயகத்தின் முன்னோடியாக இப்போது 75வது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாடுகிறது
7:01 PM, 25 Sep
வளர்ச்சி என்பது அனைவரையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்: பிரதமர் மோடி
7:01 PM, 25 Sep
கடைக்கோடி மக்களை சென்றடையும் வகையிலான பல்வேறு திட்டங்களை இந்திய அரசு வடிவமைத்துள்ளது
7:01 PM, 25 Sep
இந்தியா சீர்திருத்தங்களை அமல்படுத்தும் போது உலகம் முழுவதும் அதன் தாக்கம் ஏற்படுகிறது
6:54 PM, 25 Sep
இந்திய ஜனநாயகத்தின் வலிமையால் சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த நான் ஐ.நாவில் பேசுகிறேன்
6:54 PM, 25 Sep
பன்முகத்தன்மையே இந்தியாவின் அடையாளம் என்று பிரதமர் மோடி பேச்சு
6:54 PM, 25 Sep
நூறு ஆண்டுகளில் இல்லாத பேரிடரை ஒன்றரை ஆண்டில் உலகம் சந்தித்துள்ளது
6:53 PM, 25 Sep
பன்முகத்தன்மை கொண்டஇந்திய ஜனநாயகம் உலகிற்கு முன்னோடியாக உள்ளது: பிரதமர் மோடி
6:51 PM, 25 Sep
பிரதமர் நரேந்திர மோடி ஐநா பொதுச்சபையின் 76வது அமர்வில் உரையாற்றி வருகிறார்
6:51 PM, 25 Sep
நியூயார்க்கில் பிரதமர் மோடியை வரவேற்க ஏராளமான இந்தியர்கள் திரண்டனர்
6:50 PM, 25 Sep
இந்திய தேசிய கொடியுடன் ஓட்டல் முன்பு ஏராளமான இந்தியர்கள் திரண்டு பிரதமர் மோடியை வரவேற்றனர்
6:38 PM, 25 Sep
நியூயார்க்கில் உள்ள ஐநா சபை தலைமையகத்திற்கு வருகை தந்தார் பிரதமர் நரேந்திர மோடி
6:37 PM, 25 Sep
ஐநா பொதுச்சபையின் 76 வது அமர்வு கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்ற உள்ளார்
READ MORE

English summary
PM Modi UNGA Speech (ஐ.நா. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரை) LIVE Updates in Tamil : Check the Live Coverage News on PM Narendra Modi Address at 76th Session of UN General Assembly (UNGA) on September 25 in New York and much more in tamil language. ஐ.நா. பொதுச்சபை கூட்டத்தின் 76-வது அமர்வில் பிரதமர் மோடி ஆற்றும் உரையின் நேரலை செய்திகளை இந்த பக்கத்தில் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X