நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்த.. ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு யுனிசெஃப் அழைப்பு!

Google Oneindia Tamil News

நியூயார்க்: யுனிசெஃப் அமைப்பானது 155 நாடுகளில் பணியாற்றி வருகிறது. பெண் பிள்ளைகளின் கல்வி, சிறுவரின் பாதுகாப்பு உள்ளிட்ட குழந்தைகள் தொடர்பான பல்வேறு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் யுனிசெஃப் தன்னார்வத் திட்டத்தில் பங்கேற்க ஆர்வமுள்ள தன்னார்வலர்களுக்கு யுனிசெஃப் அழைப்பு விடுத்துள்ளது.

உலகெங்கிலும் உள்ள குழந்தைகளின் வாழ்க்கையை மேம்படுத்துவதற்கும், யுனிசெப்பில் மக்களின் சக்தியைக் கொண்டுவருவதற்கான உலகளாவிய வலையமைப்பை உருவாக்குவதற்கும் மக்களின் நடவடிக்கைகள், யோசனைகள் மற்றும் சக்தியைப் பயன்படுத்துவதற்கான ஒரு முயற்சிதான் யுனிசெஃப் தன்னார்வ திட்டமாகும்.

UNICEF calls on volunteers interested in making a difference in the community

தனிநபர்களுக்கும் நிறுவனங்களுக்கும் யுனிசெஃப் உடன் தன்னார்வத் தொண்டு செய்வதற்கும் கூட்டாளராக இருப்பதற்கும் வாய்ப்பளிப்பதே யுனிசெஃப் தன்னார்வ திட்டத்தின் நோக்கமாகும். தன்னார்வ திட்டத்தில் இணைபவர்கள் உலகெங்கிலும் உள்ள குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் வாழ்க்கையில் பங்களிப்பதில் யுனிசெஃப்பிற்கு உதவுவீர்கள் என்று யுனிசெஃப் கூறியுள்ளது.

உள்ளூர் சமூகத்தில் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் செயல்படுத்துவதில் ஒரு தனித்துவமான மற்றும் முக்கியமான பங்கை தன்னார்வலர்கள் வகிப்பீர்கள் என்றும் கூறியுள்ளது. என்வே சமூகங்களில் ஒரு மாற்றத்தை ஏற்படுத்த தன்னார்வலர்களின் உதவியை யுனிசெஃப் நம்பியுள்ளது. ஆர்வமுள்ள தன்னார்வலர்கள் 2021 ஜூன் 30-க்கு முன்னதாக தங்கள் ஆர்வம் குறித்து பதிலளிக்க வேண்டும் என்று யுனிசெஃப் தெரிவித்துள்ளது.

English summary
UNICEF calls on volunteers interested in making a difference in the community
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X