நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சம்பளம் கொடுக்கவே காசு இல்லை.. கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை!

ஐநா சபையில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இந்த மாத இறுதியில் கஜானா காலியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கடும் நிதி நெருக்கடி.. கஜானா காலியாகும் நிலையில் ஐநா சபை! | Guterres warns UN

    நியூயார்க்: ஐநா சபையில் கடும் நிதி நெருக்கடி நிலவுவதால், இந்த மாத இறுதியில் கஜானா காலியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

    ஐநா சபையின் பொதுச்செயலாளராக தற்போது அன்டோனியோ குட்டெரெஸ் இருக்கிறார். ஐநா சபை உலகம் முழுக்க பல்வேறு இடங்களில் இயங்கி வருகிறது.

    மனித உரிமை மீறல், போர்குற்றம், நாடுகளுக்கு இடையில் நிலவும் பிரச்சனை, அகதிகள் மறுவாழ்வு என்று பல விஷ்யங்களை ஐநா சபை கவனித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    உங்க பின்னாடி இருக்குறது யாருன்னு தெரியும்.. ஐரோப்பிய நாடுகளை கடுமையாக எச்சரித்த வடகொரியாஉங்க பின்னாடி இருக்குறது யாருன்னு தெரியும்.. ஐரோப்பிய நாடுகளை கடுமையாக எச்சரித்த வடகொரியா

    என்ன கடிதம்

    என்ன கடிதம்

    இந்த நிலையில் ஐநா சபையில் கடும் நிதி நெருக்கடி நிலவி வருகிறது. இதனால், இந்த மாத இறுதியில் கஜானா காலியாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அன்டோனியோ குட்டெரெஸ் ஐநாவின் பல்வேறு பகுதியில் வேலை பார்க்கும் 37000 பேருக்கு கடிதம் அனுப்பி உள்ளார்.

    என்ன செலவு

    என்ன செலவு

    அதில், நாம் செலவுகளை பெரிய அளவில் குறைக்க வேண்டும். பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்கவே நிதி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய பட்ஜெட் தற்போது காலாவதியாகும் நிலை உள்ளது.

    பணம் இல்லை

    பணம் இல்லை

    ஐநா உறுப்புகள் நமக்கு கொடுக்க வேண்டிய பட்ஜெட் பணத்தில் 70% மட்டுமே வந்துள்ளது. அதனால்தான் பட்ஜெட்டில் குறைபாடு ஏற்பட்டுள்ளது. இதன் மதிப்பு 230 மில்லியன் டாலர் ஆகும். இவ்வளவு பணம் நம்மிடம் இல்லை.

    என்ன சேமிப்பு

    என்ன சேமிப்பு

    ஆகவே நம்முடைய சேமிப்பும் கரைந்து வருகிறது. இந்த மாத இறுதியில் நாம் முற்றிலுமாக காலாவதியாகிவிடுவோம். ஆகவே நாம் மீட்டிங், செயல்பாடுகள், செலவுகள், சேவைகள் உட்பட அனைத்தையும் குறைக்க வேண்டும். அவசியம் என்றால் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும், என்று குறிப்பிட்டுள்ளார்.

    என்ன தட்டுப்பாடு

    என்ன தட்டுப்பாடு

    இந்த பணத்தட்டுப்பாடு காரணமாக உலகம் முழுக்க ஐநா சபை மிகப்பெரிய அளவில் சேவைகளை துண்டிக்க வாய்ப்புள்ளது. ஆசிய நாடுகள், அரபு நாடுகள் , ஆப்ரிக்க நாடுகள் என்று பல இடங்களில் இதனால் ஐநா செய்யும் சேவைகள் நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. இதனால் பல ஏழை மக்கள், அகதிகள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    United Nations will run out of money by this end of the month says Secretary-General Antonio Guterres.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X