நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சொன்னதை செய்கிறார் பிடன்.. ஒரு கோடி தடுப்பூசிகள்.. உலக நாடுகளுக்கு "கை" கொடுத்த அமெரிக்கா..!

ஆப்பிரிக்க நாடுகளுக்கு தடுப்பூசிகளை அனுப்பி வைக்கிறது அமெரிக்கா

Google Oneindia Tamil News

நியூயார்க்: தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை விரைவில் வழங்க இருப்பதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

இப்போதைக்கு உலகம் முழுக்க தொற்று ஆக்கிரமித்திருந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.. ஆனாலும், பிற நாடுகளுக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளது.

 பசவராஜ் பொம்மை மட்டுமல்ல..மொத்தம் 8 முதல்வர்கள்.. கர்நாடகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்! பசவராஜ் பொம்மை மட்டுமல்ல..மொத்தம் 8 முதல்வர்கள்.. கர்நாடகா அரசியலில் ஆதிக்கம் செலுத்தும் லிங்காயத்!

குறிப்பாக, பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா போன்ற நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசிகளை வழங்க உள்ளதாக வெள்ளை மாளிகை தரப்பு அறிவித்துள்ளது.

 ஜோபிடன்

ஜோபிடன்


அமெரிக்கா வசம் 8 கோடி தடுப்பூசிகள் உள்ளதாம்.. இதைதான் உலக நாடுகளுக்கு பகிர்ந்தளிக்க போவதாக அதிபர் ஜோ பிடன் ஏற்கனவே அறிவித்திருந்தார்... எந்த நாட்டில் தடுப்பூசி பற்றாக்குறை இருக்கிறதோ, அந்த நாடுகளுக்கு முன்னுரிமை தரப்படும் என்றும், அதையும் அடுத்த 6 மாதங்களுக்குள் மற்ற நாடுகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றும் உறுதி அளித்திருந்தார்.

 வெள்ளை மாளிகை

வெள்ளை மாளிகை

ஆசிய நாடுகளான மலேசியா, இந்தோனேசியா, நேபாளம், பூட்டான் ஆகிய நாடுகளுக்கு அமெரிக்க அரசு கொரோனா தடுப்பூசிகளை அனுப்பி வைத்தது... இது தவிர பிற ஆசிய நாடுகளான பிலிப்பைன்ஸ், வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், பப்புவா நியூகினியா, கம்போடியா போன்ற நாடுகளுக்கும், வறுமை கோட்டிற்கு கீழ் இருக்கும் 92 நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்தது. இந்த நிலையில் இப்போது இன்னொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது..

 தடுப்பூசிகள்

தடுப்பூசிகள்

கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளுக்கு சுமார் 1 கோடி தடுப்பூசிகளை விரைவில் வழங்க போகிறதாம்.. இது குறித்து வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிவிப்பில், "நைஜீரியாவிற்கு 40 லட்சம் "மாடர்னா" என்ற தடுப்பூசிகளும், தென் ஆப்பிரிக்காவிற்கு 56 லட்சம் தடுப்பூசிகளும் அனுப்பி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    ஒரு பக்கம் Antony Blinken-ன் India வருகை.. மறுபக்கம் தலிபான்களுடன் China அமைச்சர் சந்திப்பு
     ஆப்பிரிக்க நாடுகள்

    ஆப்பிரிக்க நாடுகள்

    இதன் மூலம் ஆப்பிரிக்க நாடுகளுக்கு அமெரிக்காவில் இருந்து அனுப்பப்பட்ட தடுப்பூசிகளின் எண்ணிக்கை 1.64 கோடியாக உயர்ந்துள்ளது... அதுமட்டுமல்ல, அதிபர் ஏற்கனவே, உறுதி தந்தபடி, உலக நாடுகளுக்கு 8 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகளை அமெரிக்கா வழங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    United States sends doses to Nigeria and south africa
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X