நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இதை உடனே செய்யுங்கள்.. உங்களுக்கு நல்லது.. இல்லையென்றால்.. இந்தியாவை புதிதாக மிரட்டும் அமெரிக்கா!

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 5-6 பில்லியன் டாலருக்கு பொருட்கள் வாங்கினால் இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்த்துக் கொள்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவிடம் இருந்து இந்தியா 5-6 பில்லியன் டாலருக்கு பொருட்கள் வாங்கினால் இந்தியாவை வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் மீண்டும் சேர்த்துக் கொள்வோம் என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது.

அமெரிக்கா சீனா இடையிலான வர்த்தக போர் முடிந்துள்ள நிலையில், இந்தியா அமெரிக்கா இடையில் வர்த்தக போர் உருவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த வருடமே இதற்கான அறிகுறிகள் தென்பட தொடங்கிவிட்டது என்றுதான் கூற வேண்டும்.

அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியாவும் இருந்தது. இந்த பட்டியலில் இருந்துதான் இந்தியாவை கடந்த வருடம் டிரம்ப் நீக்கினார்கள்.

"ஆல் இஸ் வெல்", வெறும் தலைவலிதான் என்று டிரம்ப் சொன்னாரே.. 34 அமெரிக்க வீரர்களுக்கு மூளையில் காயமாமே

ஆனால் நீக்கினார்

ஆனால் நீக்கினார்

இந்தியா மீது கோபத்தில் இருக்கும் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள். இதுதான் இந்தியா, அமெரிக்கா இடையிலான உறவில் விரிசலை ஏற்படுத்தியது. இந்த பட்டியலில் இருந்ததன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவில் வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும். உலகில் GSP மூலம் அதிக பலன் பெறும் நாடு இந்தியாதான். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை.

இந்தியா எப்படி

இந்தியா எப்படி

ஆனால் இந்தியாவை இதில் இருந்து டிரம்ப் நீக்கினார். இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிக்கிறது. வரி விதிப்பு முறையில் இந்தியா மோசமாக நடந்து கொள்கிறது. அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 100% வரியை இந்தியா விதித்து வருகிறது. அவர்கள் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள். அதனால் அவர்களை இந்த பட்டியலில் இருந்து நீக்குகிறோம் என்று அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார்.

எவ்வளவு இழப்பு

எவ்வளவு இழப்பு

இந்தியாவிற்கு இதனால் 30,000 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்படும் நிலை உருவானது. இதற்கு பதிலடியாக இந்தியாவும் களமிறங்கியது. இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது கூடுதல் வரியை விதிக்க முடிவு செய்தது. அமெரிக்கா உணவு பொருட்கள், மாமிசங்கள் மீது இந்தியா கூடுதல் வரி விதிக்க முடிவு செய்தது. 74 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவின் பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பதாக அறிவித்தது. இரண்டு நாட்டிற்கும் இடையில் இது மோதலை ஏற்படுத்தியது.

முன்னுரிமை எப்படி

முன்னுரிமை எப்படி

இந்த நிலையில்தான், இந்தியாவை மீண்டும் வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் சேர்க்க தயார் என்று அமெரிக்கா கூறியுள்ளது. ஆனால் அப்படி செய்ய வேண்டும் என்றால் இந்தியா அமெரிக்காவிடம் இருந்து 5-6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பொருட்களை வாங்க வேண்டும். அதிலும் குறைந்த வரிக்கு வாங்க வேண்டும். பதப்படுத்தப்பட்ட பொருட்களை வாங்க வேண்டும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. இதை செய்தால் உங்களை வர்த்தக முன்னுரிமை நாடுகள் பட்டியலில் சேர்ப்போம் என்று கூறியுள்ளது.

ஒப்பந்தம்

ஒப்பந்தம்

அடுத்த மாதம் டெல்லி வரும் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த கோரிக்கையை வைக்க வாய்ப்புள்ளது என்கிறார்கள். ஆனால் இதற்கு இந்தியா ஏற்றுக்கொள்ளுமா என்று தெரியவில்லை. சீனாவுடன் வர்த்தக போர் இருந்த போது, இதேபோல்தான் அமெரிக்கா டீலிங் செய்தது. அப்போது அமெரிக்காவிடம் இருந்து 200 பில்லியன் டாலருக்கு பொருட்கள் வாங்க சீனா ஒப்புக்கொண்டது. இதே டீலிங்கை இந்தியாவிடம் செய்ய அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

English summary
US asks India to buy more stuff to list the country back in Generalized System of Preferences (GSP) program.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X