நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

நினைத்த நேரத்தில் ஈரானை தாக்க முடியாது.. டிரம்ப்பை லாக் செய்த அமெரிக்க நாடாளுமன்றம்.. என்ன நடந்தது?

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    நில நடுக்கம் ஏன் ஏற்பட்டது ? | Iran's earthquake happened maybe because of Atom Bomb test

    நியூயார்க்: ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்துவதை தடுக்கும் வகையில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில் அமெரிக்க நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி நினைத்த நேரத்தில் எல்லாம் ஈரான் மீதோ வேறு நாடுகள் மீதோ அமெரிக்கா தாக்குதல் நடத்த முடியாது.

    கடந்த சில தினங்களாக ஈரான் மீது அமெரிக்க டிரோன் தாக்குதல் நடத்தி வருகிறது. முதற் கட்டமாக ஈராக்கில் உள்ள ஈரான் படைகள் மீதும், ஈரான் தலைவர்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது.இதுவரை நடத்தப்பட்ட தாக்குதலில் மொத்தம் 14 முக்கிய ஈரான் தலைவர்கள் பலியாகி உள்ளனர்.

    இதற்கு பதிலடியாக கடந்த இரண்டு நாட்களாக ஈரான் ஈராக்கில் உள்ள அமெரிக்க படைத்தளங்கள் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த தாக்குதல் விரைவில் போராக உருவெடுக்க வாய்ப்புள்ளது.

     சந்தேகம் வருகிறது.. ஏதோ தவறு நடந்துள்ளது.. உக்ரைன் விமான விபத்து.. ஈரான் மீது டிரம்ப் பகீர் புகார்! சந்தேகம் வருகிறது.. ஏதோ தவறு நடந்துள்ளது.. உக்ரைன் விமான விபத்து.. ஈரான் மீது டிரம்ப் பகீர் புகார்!

    எப்படி போர்

    எப்படி போர்

    டிரம்ப் ஈரானுக்கு எதிரான போருக்காக மிக தீவிரமாக தயார் ஆகிக்கொண்டு இருக்கிறார். இதனால் எப்போது வேண்டுமானாலும் அங்கு போர் வர வாய்ப்புள்ளது என்கிறார்கள். இந்த நிலையில் டிரம்ப்பின் இந்த செயலை தடுக்கும் வகையில் அமெரிக்கா பிரதிநிதிகள் சபை மற்றும் செனட் சபையில் தீர்மானம் ஒன்றை கொண்டு வந்துள்ளனர்.

    என்ன சக்தி

    என்ன சக்தி

    ஒரு காலத்தில் அமெரிக்காவில் அதிபர் வேறு நாட்டில் தாக்குதல் நடத்த வேண்டும் என்றால், அவர் அந்நாட்டு காங்கிரஸ் அவையிடம் அனுமதி வாங்க வேண்டும். அவர்கள் ஒப்புதல் அளித்த பின்பே தாக்குதல் நடத்த முடியும். காலப்போக்கில் இந்த அனுமதி என்பது மாற்றப்பட்டு காங்கிரஸ் அவையிடம் தெரிவித்தால் மட்டும் போதும் என்று மாற்றப்பட்டது.

    என்ன மாற்றம்

    என்ன மாற்றம்

    இந்த நிலையில் தற்போது மீண்டும் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் சக்தியை குறைக்கும் வகையில், போரை தடுக்கும் வகையில் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர். தற்போது டிரம்பிற்கு ராணுவத்தை கட்டுப்படுத்தும் சக்தி தற்போது முழுமையாக இருக்கிறது. அதை குறைத்து, அவர் காங்கிரஸ் அவையின் கட்டுப்பாடு இன்றி எதுவும் செய்ய முடியாது என்று சட்டம் கொண்டு வந்துள்ளனர்.

    காங்கிரஸ் அவை

    காங்கிரஸ் அவை

    அதாவது காங்கிரஸ் அவை அனுமதிக்காமல் அவரால் ராணுவத்திற்கு ஆணைகளை பிறப்பிக்க முடியாது. இதற்கான தீர்மானத்தை இன்று தாக்கல் செய்தனர். இந்த மசோதா 224-194 என்று நிறைவேறியது. டிரம்பின் குடியரசு கட்சியிலும் மூன்று பேர் இதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

    ஏற்கனவே

    ஏற்கனவே

    நாடளுமன்ற சபாநாயகர் நான்சி பெலுச்சிதான் இந்த தீர்மானத்தை கொண்டு வந்து நிறைவேற்றி இருக்கிறார். இதனால் அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு இனி நினைத்த நேரத்தில் ஈரானை தக்க உத்தரவிட முடியாது.

    English summary
    US assembly passes a resolution to decrease Trump power over war fear.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X