நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஒரு கூகுள் டூல் மூலம் சிஐஏவின் ரகசிய தளத்தை ஹேக் செய்த ஈரான்.. 30 ஏஜெண்டுகள் தப்பி ஓடிய திக் கதை!

அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ பயன்படுத்தி வந்த ரகசிய தொலைத்தொடர்பு முறையை ஈரான் கண்டுபிடித்தது அம்பலம் ஆகியுள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கூகுள் டூல் மூலம் சிஐஏவின் ரகசிய தளத்தை ஹேக் செய்த ஈரான்

    நியூயார்க்: அமெரிக்காவின் உளவுத்துறையான சிஐஏ பயன்படுத்தி வந்த ரகசிய தொலைத்தொடர்பு முறையை ஈரான் கண்டுபிடித்தது அம்பலம் ஆகியுள்ளது.

    சிஐஏ உலகின் மிகவும் வலுவான உளவுத்துறைகளில் ஒன்று. இவர்களின் ஏஜெண்டுகள் என்று அழைக்கப்பட்டு ரகசிய உளவாளிகள் உலகம் முழுக்க ரகசியமாக வேவு பார்த்து வருகிறார்கள்.

    இவர்கள் தொடர்பு கொள்ள ரகசிய தொலைத்தொடர்பு தொழில்நுட்பம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வந்தது. இதை ஈரான் ஹேக் செய்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    [டாலருக்கு நோ.. ஈரானிடம் இருந்து ரூபாய் மூலம் எண்ணெய் வாங்கும் இந்தியா.. அமெரிக்கா அதிர்ச்சி!]

    பொதுவாக என்ன

    பொதுவாக என்ன

    அமெரிக்காவின் சிஐஏ முதலில் ரகசிய தகவல் தொழில்நுட்ப முறை ஒன்றின் மூலம் தங்கள் ஏஜெண்டுகளுக்கு இடையே பேசி வந்தது. ஆனால் 9/11 தாக்குதலுக்கு பின் இந்த தொழில்நுட்பத்தை அமெரிக்கா கைவிட்டது. இந்த தொழில்நுட்பத்தில், அமெரிக்காவின் முன்னாள் ஏஜென்ட் ஒசாமா பின் லேடனுக்கு நிறைய அனுபவம் இருக்கிறது என்பதால் அந்த தொழில்நுட்பம் கைவிடப்பட்டது.

    எதை பயன்படுத்துகிறது

    எதை பயன்படுத்துகிறது

    இந்த நிலையில் அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் புதிய தொழில்நுட்பத்தை இதற்காக உருவாக்கியது. அதன்படி உலகில் உள்ள எல்லா சிஐஏ ஏஜெண்டுகளுடன் ரகசியமாக தொடர்பு கொள்ளும் வகையில் சிஐஏவிற்கு புதிய தகவல் தொழில்நுட்பம் அளிக்கப்பட்டது. இதை வைத்துதான் 2009ல் இருந்து 2012 வரை சிஐஏ தனது ஏஜண்டுகளுடன் பேசி வந்தது.

    ஈரான் செய்த வேலை

    ஈரான் செய்த வேலை

    இந்த நிலையில் ஈரானில் இருந்து சிஐஏ உளவாளியை, ஈரான் உளவாளிகள் கடந்த 2010ல் கைது செய்து இருக்கிறார்கள். அவரை விடுதலை செய்ய அவர்கள் வைத்த கோரிக்கை ''நீ எங்களுக்கு உளவாளியாக மாறிவிட வேண்டும்'' என்பதுதான். அதேபோல் அந்த சிஐஏ உளவாளி, ஈரானின் உளவாளியாக வேலை செய்துள்ளார். அவர் அளித்த தகவலின் அடிப்படையில் இந்த தகவல் தொடர்பு முறையை கண்டுபிடித்து இருக்கிறது.

    கண்டுபிடித்து என்ன செய்தது

    கண்டுபிடித்து என்ன செய்தது

    இதில் வேடிக்கையான விஷயம் என்னவென்றால், மக்கள் அதிகமாக பயன்படுத்தும் கூகுள் டூல் ஒன்றை வைத்து பென்டகன் உருவாக்கிய இந்த கடினமான தகவல் தொடர்பு முறையை ஹேக் செய்துள்ளனர். அதையடுத்து 2 வருடங்கள் இப்படி அந்த தகவல் தொடர்பு முறை மூலம் பரிமாறப்பட்ட அனைத்து தகவல்களையும் கண்டுபிடித்துள்ளனர்.

    30 பேர் மாட்டினார்கள்

    30 பேர் மாட்டினார்கள்

    அதுமட்டுமில்லாமல் சீனா, ரஷ்யாவிற்கும் இந்த தகவல்களை ஈரான் அனுப்பி இருக்கிறது. அதன் முடிவாக மொத்தம் 30 சிஐஏ உளவாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக வாஷிங்டன் போஸ்ட் கட்டுரை வெளியிட்டுள்ளது. இதில் சிலர் கைதும் செய்யப்பட்டு இருக்கிறார்கள்.

    என்ன அதிர்ச்சி

    என்ன அதிர்ச்சி

    இந்த தகவல் வெளியே வந்தவுடன் அமெரிக்கா தனது உளவாளிகள் அனைவரையும் மீண்டும் அமெரிக்காவிற்கு திரும்பி வரும்படி கூறிவிட்டது. ஆனால் சிலர் ஈரானில் மாட்டிக் கொண்டார்கள் என்றும் தகவல் வருகிறது. இவர்கள் எப்போதோ கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்றும் கூறுகிறார்கள்.

    English summary
    US CIA website hacked by Iran using a small Google tool.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X