நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

எங்களிடம் சொல்லாமல் செய்தது தவறு.. ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொலை.. புதிய சிக்கலில் அதிபர் டிரம்ப்!

ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதாக டிரம்ப் அறிவித்தது தற்போது அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நிறைய பிரச்சனைகளை எழுப்பி இருக்கிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    கதையை முடித்துவிட்டோம்....திக் திக் ஆபரேஷனை விளக்கிய டிரம்ப்.!

    நியூயார்க்: ஐஎஸ்ஐஎஸ் தலைவர் கொல்லப்பட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்ததற்கு பின் அமெரிக்காவில் அரசியல் ரீதியாக நிறைய பிரச்சனைகள் எழுந்துள்ளது.

    ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட உலகம் நாடு முழுக்க பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிரியாவில் அமெரிக்க படை நடத்திய அதிரடி தாக்குதலில் ஐஎஸ்ஐஎஸ் அமைப்பின் தலைவர் அபு பக்கர் அல் பக்தாதி பலியாகிவிட்டதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அமெரிக்க செனட் சபை மற்றும் காங்கிரஸ் அவையில் கடும் விவாதம் நடந்து வருகிறது. அமெரிக்க படை தாக்க வந்த போது, அபு பக்கர் அல் பக்தாதி தன்னிடம் இருந்த குண்டை செயல்பட செய்து, தற்கொலை செய்துகொண்டார்.

    சொல்லவில்லை

    சொல்லவில்லை

    இந்த நிலையில் இந்த ஆபரேஷன் தொடர்பாக நிறைய சிக்கலில் மாட்டி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். முதல் விஷயம் அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தாக்குதல் குறித்து அமெரிக்க காங்கிரஸ் அவைக்கு தெரிவிக்கவில்லை. அமெரிக்க பெரிய ராணுவ தாக்குதல் மேற்கொள்ளும் போது அதிபர் காங்கிரஸ் அவையிடம் அதுகுறித்து தெரிவிக்க வேண்டும்.

    ஆனால் செய்யவில்லை

    ஆனால் செய்யவில்லை

    இதுதான் அங்கு நடைமுறை. ஆனால் டிரம்ப் காங்கிரஸ் அவைக்கு தெரிவிக்காமல், இந்த தாக்குதலை நடத்த சொல்லி இருக்கிறார். இந்த விஷயம் ரகசியமாக இருக்க வேண்டும் என்று அப்படி செய்ததாக டிரம்ப் கூறியுள்ளார். இது அமெரிக்காவின் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கு கடும் கோபத்தை உண்டாக்கி உள்ளது.

    கேள்விகள்

    கேள்விகள்

    இது தொடர்பாக காங்கிரஸ் அவையின் சபாநாயகர் பெலோசி கடும் கோபத்துடன் பேட்டி அளித்துள்ளார். காங்கிரசில் இருக்கும் பெரிய தலைவர்களுக்காவது அவர் சொல்லி இருக்க வேண்டும். அவரின் இந்த செயல் தவறானது. அவர் ரஷ்யா குறித்து அடிக்கடி பேசியதும் நிறைய கேள்விகளை வரவைக்கிறது.

    ரஷ்யா புகழ்ச்சி

    ரஷ்யா புகழ்ச்சி

    அவர் பேசியது எல்லாம் ரஷ்யாவை புகழும்படியே இருந்தது. அவர் ரஷ்ய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் காங்கிரஸ் சபைக்கு தகவல் தெரிவிக்கவில்லை. அவரின் இந்த செயல் பெரிய அளவில் கேள்விகளை எழுப்புகிறது, என்று பெலோசி கூறியுள்ளார்.

    நன்றியை தெரிவிக்கிறேன்

    நன்றியை தெரிவிக்கிறேன்

    அதேபோல் டிரம்ப் அமெரிக்க படைகளுக்கு நன்றி தெரிவிக்கும் முன் ரஷ்ய படைகளுக்கும், அவர்களின் பாதுகாப்பு படைக்கும் நன்றி கூறினார். சிரியாவில் போர் செய்து வரும் துருக்கிக்கு நன்றி கூறினார். அவர் ஏன் இப்படி தவறுதலாக பேசினார் என்று தெரியவில்லை, என்றும் பெலோசி கூறியுள்ளார்.

    எதை திசை திருப்ப

    எதை திசை திருப்ப

    இந்த நிலையில் டிரம்ப் தன் மீது நடந்து வரும் தகுதி நீக்க புகார் மீதான விசாரணையை திசை திருப்ப வேண்டும் என்பதற்காகத்தான் இப்படி செய்கிறார். தன் மீது சுமத்தப்பட்டு வரும் குற்றச்சாட்டுகளை திசை திருப்ப வேண்டும் என்று அவர் ஐஎஸ்ஐஎஸ் குறித்தும், தீவிரவாதம் குறித்தும் பேசி வருகிறார் என்கிறார்கள்.

    English summary
    US Congress and Speaker opposes Trump's operation against ISIS chief: May seek clarification soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X