வெள்ளை மாளிகை எடுத்த அதிரடி முடிவு.. இலவச கொரோனா டெஸ்ட்டுக்கு ஏற்பாடு.. புது வெப்சைட் துவக்கம்
நியூயார்க்: நாளுக்கு நாள் உயர்ந்து வரும் தொற்று எண்ணிக்கை காரணமாக, அமெரிக்காவில் வரும் 19ந்தேதி முதல் இலவச கொரோனா டெஸ்ட் செய்து கொள்ள, வெள்ளை மாளிகை சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது.
உலகளவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. கடந்த வாரம் மட்டும் ஒரே நாளில் 10 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.. இது அந்நாட்டு மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது..
ஒமிக்ரான் வைரஸ் ஒரு பக்கம் பரவி வந்தாலும், அதற்கு முன்பாகவே அமெரிக்காவில் கொரோனா கேஸ்கள் பாதிப்பு 1 லட்சத்தை நெருங்கிவிட்டது... இதில் படுமோசமாக பாதிப்புக்கு ஆளாகி உள்ளது நியூயார்க்தான்..
கொரோனா விஸ்வரூபம்! ஒரேநாளில் 23,459 பேருக்கு தொற்று! 9,026 பேர் டிஸ்சார்ஜ்! 26 பேர் உயிரிழப்பு!

அமெரிக்கா
காரணம், டெல்டா வைரஸ் அமெரிக்காவை கதிகலங்க வைத்துவிட்டது.. இப்போது ஒமிக்ரானும் சேர்ந்து கொண்டுள்ளதால், தொற்று பாதிப்பு தினமும் 4 லட்சத்தை தாண்டி செல்ல ஆரம்பித்துள்ளது.. உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 55.46 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 5,546,541 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 323,863,479 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 265,239,361 பேர் குணமடைந்துள்ளனர்.

அமெரிக்கா
மேலும் 53,077,577 கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் கடந்த 24 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்கா முதலிடத்திலும், இந்தியா, இரண்டாவது இடத்திலும், பிரேசில் போன்ற நாடுகள் அடுத்தடுத்த இடத்திலும் உள்ளன. அமெரிக்காவில் ஒரு நாளில் 70,86,44 பேர் தொற்றுக்கு ஆளாகி உள்ளன.. ஒரேநாளில் 1,943 பேர் பலியாகி உள்ளனர்.. இதுவரை அங்கு 42,972,340 பேர் குணமாகி உள்ளனர்.. அமெரிக்காவில் இதுவரை 65,976,500 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ஒமிக்ரான்
ஒரே மாதத்தில் 1 கோடி பேர் அமெரிக்காவில் கொரோனா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்... இதற்கு மொத்த காரணமும் ஒமிக்ரான் வைரஸ் என்கிறார்கள்.. அதாவது, உலகளவில் கொரோனாவைரஸ் பாதிப்பில் 20 சதவீதம் பேர் அமெரிக்காவில்தான் இருக்கிறார்களாம்.. அதுமாதிரி, உயிரிழப்பிலும் 15 சதவீதம் அமெரிக்காவில்தான் நடந்தது என்கிறது ஒரு பகீர் ஆய்வு... இந்நிலையில், அமெரிக்க மக்கள் நலனுக்காக 500 மில்லியன் இலவச கொரோனா டெஸ்ட்களை மேற்கொள்வதற்கு வசதியாக, வெப்சைட் ஒன்று துவங்கப்படும் என்று அதிபர் ஜோ பிடன் கடந்த டிசம்பர் மாதமே அறிவித்திருந்தார்.

அறிக்கை
அதற்கான நடவடிக்கை இப்போது எடுக்கப்பட்டுள்ளது.. இது தொடர்பான ஒரு அறிக்கையை வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ளது.. அதில், "அமெரிக்க மக்கள் இலவச கொரோனா டெஸ்ட் செய்ய வசதியாக வரும் 19ந்தேதி முதல் COVIDTests.gov என்ற வெப்சைட் துவங்கப்படும் என்று தெரிவித்துள்ளது... இதில் பெயர் மற்றும் முகவரி ஆகிய இரண்டை மட்டுமே குறிப்பிட்டாலே போதுமாம்.. இதுபற்றிய ஆர்டரை பதிவு செய்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ரிசல்ட்கள்
ஒரு குடியிருப்பு முகவரிக்கு 4 பரிசோதனைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.. அதுமட்டுமல்ல, கொரோனா டெஸ்ட் செய்து கொள்வதற்காக, ஆர்டர் செய்த 7 முதல் 12 நாட்களுக்குள் தபால் சேவை மூலமே அந்த ரிசல்ட் முடிவுகள் அனுப்பிவைக்கப்படும் என்று வெள்ளை மாளிகை தன்னுடைய அறிவிப்பில் தெரிவித்துள்ளது... இந்த வசதியை ஏற்படுத்துவதன் மூலம் மேலும் தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்படும் என்று பிடன் அரசு நம்புகிறது.