நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

யம்மாடியோ.. அமெரிக்காவை அலறவிடும் சீன "ராட்சச" பலூன்.. சுட்டு வீழ்த்தவே முடியாதாம்.. நிபுணர்கள் பகீர்

இதேபோல 1998ம் ஆண்டு ஒரு பலூனை கனடாவின் விமானப்படைக்கு சொந்தமான F-18 விமானம் சுட்டது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவின் வான் எல்லையில் அந்நாட்டு ஏவுகணை தளங்கள் மீது நிலைகொண்டுள்ள சீனாவின் பலூன் குறித்து சர்ச்சை நீடித்து வரும் நிலையில், இந்த பலூனை சுட்டு வீழ்த்துவது எளிதான காரியமல்ல என்று அமெரிக்க ராணுவம் கூறியுள்ளது.

இது குறித்து அமெரிக்க பாதுகாப்புப் படையின் உளவு பலூன் நிபுணரான வில்லியம் கிம் சில தகவல்களை பகிர்ந்திருக்கிறார். அதாவது, "இந்த மாதிரியான பலூன்களை பயன்படுத்துவதில் பல்வேறு நன்மைகள் இருக்கின்றன. நீங்கள் உளவு பணிக்காக விமானங்களையோ அல்லது ஆளில்லாத விமானங்களையோ அனுப்பினால் அது நிச்சயம் ரேடார் கண்களுக்கு சிக்கவிடும். ஆனால் பலூன்கள் இப்படி சிக்காது. ஏனெனில் பலூன்கள் உலோகத்தால் செய்யப்பட்டவை கிடையாது.

எனவே இதனை கண்டுபிடிப்பது கஷ்டம். இரண்டாவது அம்சம் இதன் பறக்கும் திறன். இந்த வகை பலூன்கள் அசால்டாக 65 ஆயிரம் அடி உயரத்திலிருந்து 1 லட்சம் அடி உயரம் வரை பறக்கும். எனவே இதனை பூமியிலிருந்து பார்த்தால் கூட கண்களுக்கு தெரியாது. ஆனால் இந்த சீன பலூன் 45 ஆயிரம் அடியில்தான் பறந்துக்கொண்டிருக்கிறது. விமானத்தை இயக்குவதை பலூன்களை இயக்குவது மிகவும் கடினமானது. காற்றின் வேகத்திற்கு உங்களால் அதனை எப்போதும் மிகச்சரியாக இயக்க முடியாது.

தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம் தேவையில்லாம பேசாதீங்க.. நாங்க அப்படி பண்ணல! 'உளவு' பலூன் விவகாரத்தில் சீனா கறார் விளக்கம்

திசை

திசை

உயரத்தை ஏற்றி இறக்குவதன் மூலம் பலூன் பயணிக்கும் திசையை நம்மால் மாற்றி அமைக்க முடியும். அதுமட்டுமல்லாது பலூனோடு இருக்கும் பொருள் என்னவென்று நம்மால் பூமியிலிருந்து சரியாக பார்த்து புரிந்துக்கொள்ள முடியாது. ஒரு அனுமானம் மட்டுமே செய்ய முடியும். சீன பலூனை பொறுத்த அளவில் இதில் கண்களுக்கு புலப்படும் வகையில் உளவு கருவிகள் இருக்கின்றன. இதனை பார்த்தால் பூமியிலிருந்து இயக்குவதை போல தெரியவில்லை. என்னுடைய கணிப்பு சரியாக இருப்பின், இது AI எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்டிருக்க வேண்டும்.

 செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம்

எனவே இது தான் நினைத்த இடத்திற்கு தானாக சென்றுவிடும். இதனை தடுக்க முடியாது, இதில் ரேடியோ தகவல் தொடர்பு கருவிகள் இணைக்கப்பட்டிருக்கலாம். அதன் மூலம் இது உளவு செய்திகளை தன்னுடைய உரிமையாளருக்கு அனுப்பும். செயற்கைக்கோள்களை ஒரே இடத்தில் வைத்து நம்மாள் நீண்ட நாட்களுக்கு அந்த இடம் குறித்த தகவல்களை திரட்ட முடியாது. ஆனால், பலூன்களை சுமார் ஒரு மாதம் வரைகூட ஒரே இடத்தில் நிலையாக வைத்திருக்க முடியும். அமெரிக்க எல்லைகளுக்கு வெளியே இருந்து அமெரிக்கா தொடர்பான டேட்டாக்களை சேகரிக்க இந்த சழுன பலூன் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.

சுட முடியாது

சுட முடியாது

ஆனால் தற்போது இது வேலை செய்துக்கொண்டிருக்கிறதா? இல்லையா? என்பது சரியாக தெரியாது. இந்த பலூனில் சோலார் பேனல்கள் இருக்கின்றன. இதுதான் உள்ளே இருக்கும் கருவிகளுக்கு பவரை வழங்குகிறது. அதேபோல இந்த பலூனை பூமியிலிருந்து சுடுவது சாத்தியமற்றது. ஏனெனில் 46 ஆயிரம் அடி உயரத்தில் இருக்கும் இலக்கை எந்த குண்டும் குறி தவறாமல் தாக்காது. இரண்டாவது இதனை சுட ராக்கெட் ஏவுகணைகளையும் பயன்படுத்த முடியாது. ஏனெனில் இந்த ஏவுகணைகள் உலோகத்தால் ஆன பொருட்களை மட்டும் இலக்கு வைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஏன் தெரியுமா?

ஏன் தெரியுமா?

இதனை வானத்திலேயே சுட்டு வீழ்த்தலாம். ஆனால் அதுவும் சுலபமான காரியம் அல்ல. ஏனெனில், பலூன் முழுவதும் ஹீலியம் இருக்கிறது. ஒரு வேலை பலூனை சுட்டால் அடு வெடிக்காது ஏனெனில் ஹீலியம் எந்த அளவுக்கு லேசாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு வளிமண்டலம் உள்ள பகுதியில்தான் இது நிலைக்கொண்டுள்ளது. எனவே ஜெட் விமானங்கள் மூலம் சுட்டாலும் அது எரியதான தொடங்கும் வெடிக்காது. பின்னர் மெதுவாக பூமியில் விழும். இதற்கு ஒருவாரம் வரை டைம் ஆகலாம். கடந்த 1998ம் ஆண்டு இதேபோல ஒரு பலூனை கனடாவின் விமானப்படைக்கு சொந்தமாக F-18 விமானத்தால் சுட்டு வீழ்த்தப்பட்டது. அந்த பலூன் ஒருவழியாக கீழே வருவதற்கு சுமார் 6 நாட்கள் வரை ஆனது" என்று கூறியுள்ளார்.

English summary
The US military has said that shooting down this balloon will not be an easy task as the controversy continues over the Chinese balloon that is stationed over the country's missile sites in the airspace of the United States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X