நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அத்துமீறிய பேஸ்புக்.. ஆப்பு வச்ச அமெரிக்கா.. தனிநபர் தகவல்களை திருடியதால் ரூ.3 லட்சம் கோடி அபராதம்!

Google Oneindia Tamil News

Recommended Video

    தகவல்களை வெளியிட்ட பேஸ்புக்... அபராதம் விதித்த அமெரிக்கா

    நியூயார்க்: விதிகளை மீறி தனி நபர்களின் தகவல்களை பகிர்ந்ததற்காக ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 3 லட்சம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடியது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

    இதன்மூலம் பலரது பர்சனல் தகவல்கள் திருடப்பட்டன. இதனால் பேஸ்புக் பாதுகாப்பற்றது என்ற கருத்து எழுந்தது. பேஸ்புக் மற்றும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்தின் இந்த முறைகேட்டை சேனல் 4 தொலைக்காட்சிதான் முதலில் கண்டுபிடித்தது.

    காலமும்.. கடமையும்.. நம் நட்பும்.. நாமும்.. உதயநிதிக்கு 'நேம்' கொடுத்த அன்பில் மகேஷ்! காலமும்.. கடமையும்.. நம் நட்பும்.. நாமும்.. உதயநிதிக்கு 'நேம்' கொடுத்த அன்பில் மகேஷ்!

    அமெரிக்கா விசாரணை

    அமெரிக்கா விசாரணை

    தனிநபர்களின் தகவல்கள் திருடப்பட்டதை பேஸ்புக் நிறுவனமும் ஒப்புக்கொண்டது. இதைத்தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் இந்த புகார் தொடர்பாக அமெரிக்க வர்த்தக ஆணையம் விசாரணையை தொடங்கியது.

    உடன்படிக்கையை மீறிய பேஸ்புக்

    உடன்படிக்கையை மீறிய பேஸ்புக்

    பயனாளர்களின் பர்சனல் தகவல்களை யாருடனும் பகிர்வதில்லை என 2011ஆம் ஆண்டு பேஸ்புக் நிறுவனம் உடன்படிக்கை செய்துள்ளது. ஆனால் தனது உடன்படிக்கையை மீறி கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனத்திற்கு தனி நபர்களின் தகவல்களை அளித்துள்ளது.

    ரூ.3 லட்சம் கோடி அபராதம்

    ரூ.3 லட்சம் கோடி அபராதம்

    உடன்படிக்கையை மீறி பேஸ்புக் நிறுவனம் செயல்பட்டது விசாரணையில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து பேஸ்புக் நிறுவனத்திற்கு அமெரிக்க வர்த்தக ஆணையம் 3 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.

    பெரிய தொகை அபராதம்

    பெரிய தொகை அபராதம்

    இந்த அபராதம் பேஸ்புக் நிறுவனத்தின் கடந்த ஆண்டு வருமானத்தில் 9 சதவீதமாகும். மேலும் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றிற்கு இவ்வளவு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்படுவது இதுவே முதல் முறை என்றும் கூறப்படுகிறது.

    பிரிட்டன் அபராதம்

    பிரிட்டன் அபராதம்

    கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா ஊழலில் பேஸ்புக் நிறுவனத்திற்கு பிரிட்டன் அரசு கடந்த ஆண்டு ரூ. 4.72 கோடி ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது. இந்நிலையில் அமெரிக்க வர்த்தக ஆணையமும் ஒரு பெரிய தொகையை அபராதமாக விதித்துள்ளது.

    English summary
    US Federal Trade Commission approved a roughly 5 billion dollar penalty to Facebook for sharing data to British political consulting firm Cambridge Analytica
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X