நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப் கோபம் எதிரொலி.. நடவடிக்கை.. வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்?

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்கா வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கம்- வீடியோ

    நியூயார்க்: அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. இதற்கான முறையான அறிவிப்பை அதிபர் டிரம்ப் இன்னும் சில நாட்களில் வெளியிடுவார்.

    அமெரிக்கா உலகில் சில முக்கிய நட்பு நாடுகளை வர்த்தக முன்னுரிமை நாடுகள்( Generalized System of Preferences - GSP) என்று பட்டியலில் வைத்து இருக்கிறது. இதில் இந்தியாவும் இருக்கிறது.

    இந்த பட்டியலில் இருந்துதான் இந்தியா தற்போது நீக்கப்பட உள்ளதாக செய்திகள் வருகிறது. இந்தியா மீது கோபத்தில் இருக்கும் டிரம்ப் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறுகிறார்கள்.

    Also Read | ஜிஎஸ்டி: மாநில அரசுகளின் வருவாய் வளர்ச்சி கூடினாலும் மத்திய அரசின் இழப்பீடு தொடரும் - ஜிஎஸ்டி ஆணையம்

    என்ன

    என்ன

    இந்த பட்டியலில் இருப்பதன் மூலம் இந்தியா 30 ஆயிரம் கோடி ரூபாய் வரை இந்தியா அமெரிக்காவில் வரி இல்லாமல் வர்த்தகம் செய்ய முடியும். உலகில் GSP மூலம் அதிக பலன் பெறும் நாடு இந்தியாதான். இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் பல பொருட்களுக்கும் அமெரிக்காவில் இறக்குமதி வரி விதிக்கப்படுவதில்லை.

    டிரம்ப் பேச்சு

    டிரம்ப் பேச்சு

    இந்த நிலையில் நேற்று பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா அமெரிக்க பொருட்கள் மீது மோசமாக வரி விதிக்கிறது. வரி விதிப்பு முறையில் இந்தியா மோசமாக நடந்து கொள்கிறது. அமெரிக்க பொருட்கள் அனைத்திற்கும் 100% வரியை இந்தியா விதித்து வருகிறது. அவர்கள் நம்மை முட்டாள்கள் என்று நினைக்கிறார்கள்.

    டிரம்ப் கோபம்

    டிரம்ப் கோபம்

    நாம் இந்திய பொருட்களுக்கு வரி விதிப்பதில்லை. ஆனால் அமெரிக்கா இனியும் ஏமாளியாக இருக்க கூடாது. இதை நாம் உடனே களைய வேண்டும். இந்தியா நம்முடைய காருக்கும், பைக்கிற்கும் 100% வரியை விதிக்கிறது. மது பானங்களுக்கு 150% வரியை விதிக்கிறது என்று கோபமாக குறிப்பிட்டு இருந்தார்.

    நீக்கம்

    நீக்கம்

    இந்த நிலையில்தான் அமெரிக்காவின் வர்த்தக முன்னுரிமை நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியா நீக்கப்பட உள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்து இருக்கிறது. அதேபோல் துருக்கியும் இந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்ப் இதை குறித்து முறையான அறிவிப்பை இன்னும் சில நாட்களில் வெளியிடுவார் என்கிறார்கள்.

    English summary
    At direction of President Donald Trump, US Trade Representative Robert Lighthizer announced that US intends to terminate India’s & Turkey’s designations as Beneficiary Developing Countries under Generalized System of Preferences (GSP) program
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X