நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சைக்கிளில் வீலிங் சவால்.. வழிப்போக்கருடன் பந்தயம்.. இது அமெரிக்க ‘காக்காமுட்டை’கள்!

சிறுவர்களுக்கு பீட்சா வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்த அமெரிக்க மனிதரின் கதை ஒன்று சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

Google Oneindia Tamil News

நியூயார்க்: தன்னுடன் பந்தயம் வைத்த சிறுவர்களுக்கு பீட்சா வாங்கிக் கொடுத்து மகிழ்ச்சி அடைந்த அமெரிக்காவைச் சேர்ந்த ஜெஃப் என்பரின் அனுபவம் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

இந்த கொடிய கொரோனா காலத்தில் மனிதம் ஒன்றே அனைவருக்கும் ஆறுதலாய் இருக்கின்றது. வேலையிழந்து, வறுமையில் வாடும் ஏழை மக்களுக்கு நல் உள்ளம் கொண்ட ஏராளமானோர் உதவி செய்து வருவதை நாம் கண்கூடாக பார்க்கிறோம். அப்படிப்பட்ட ஒரு மனிதநேயம் மிக்கவரின் கதை தான் இது.

அமெரிக்காவை சேர்ந்தவர் ஜெஃப் கிராவட். சம்பவத்தன்று இவர் தனது வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைக்கு நடந்து சென்று கொண்டுருத்தார்.

 விரைவில் கொரோனா தடுப்பு மருந்து...நமது வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்...பிரதமர் பேட்டி!! விரைவில் கொரோனா தடுப்பு மருந்து...நமது வீரர்களுக்கு நாம் துணை நிற்க வேண்டும்...பிரதமர் பேட்டி!!

வீலிங் பந்தயம்

வீலிங் பந்தயம்

அப்போது அங்கு நின்று கொண்டிருந்த சிறுவர்கள் சிலர் ஜெஃபிடம் தங்களுடன் பந்தயத்துக்கு வரத் தயாரா என சவாலுக்கு அழைத்திருக்கின்றனர். என்ன பெட் என் ஜெஃப் கேட்க, அந்த சிறுவர் கூட்டத்தில் இருந்த ஒரு பெரிய பையன், ஒரு குறிப்பிட்ட தூரத்திற்கு தனது சைக்கிளை வீலிங் செய்தபடி ஓட்டுவதாக கூறியிருக்கிறான்.

பீட்சா ஆசை

பீட்சா ஆசை

அதெல்லாம் சாத்தியமே இல்லை என ஜெஃப் கூற, "பந்தயத்தில் நாங்கள் ஜெயித்தால் 10 அமெரிக்க டாலர் பணம் தர வேண்டும்" என கேட்டிருக்கிறார்கள். எதற்காக 10 டாலர் என் ஜெஃப் கேட்க, ‘டாமினோஸ் பீட்சா கடையில் இருந்து ஒரு பெரிய சைஸ் பீட்சா வாங்கி சாப்பிடுவதற்காக தான் 10 டாலர் பெட் கட்டுவதாக', அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

சிறுவன் தோல்வி

சிறுவன் தோல்வி

இதை கேட்டதும் பந்தயத்துக்கு ஓகே சொல்லிவிட்டார் ஜெஃப். ஆனால் அந்த சிறுவனால் பெட் கட்டியபடி குறிப்பிட்ட தூரத்துக்கு சைக்கிளை வீலிங் செய்தபடி ஓட்டிச் செல்ல முடியவில்லை. பந்தயத்தில் தோற்றுவிட்டோமே என்ன செய்வது என சிறுவர்கள் யோசித்துக் கொண்டிருந்த அதே சமயத்தில், டோமினோசில் இருந்து ஒரு பெரிய சைஸ் பீட்சாவும், கூடவே சில்லென்று குடிக்க குளிர்பானமும் ஆர்டர் செய்துவிட்டார் ஜெஃப்.

பாராட்டு

பாராட்டு

பெட்டில் தோற்றும் தாங்கள் ஆசைப்பட்ட பீட்சா கிடைத்ததை நினைத்து சிறுவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த சம்பவத்தை தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்த ஜெஃப், " இன்றைய இரவுப் பொழுது நிறைவுப் பெற்றது", என குறிப்பிட்டிருந்தார். இதை பார்த்த நெட்டிசன்கள் ஜெஃபை புகழ்ந்து தள்ளி வருகின்றனர்.

காக்காமுட்டைகள்

காக்காமுட்டைகள்

நம்மூரிலும் பீட்சா போன்ற உணவுகள் உடலுக்கு கேடு என மருத்துவர்கள் கூறினாலும், அதையே சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பிச் சாப்பிடுகின்றனர். பீட்சா சாப்பிட ஆசைப்படும் இரண்டு சிறுவர்கள் அதற்காக எப்படியெல்லாம் கஷ்டப்படுகிறார்கள் என காக்காமுட்டை படத்தில் காட்டியிருப்பார்கள். அதில் தெருநாய் ஒன்றை அதிக விலைக்கு விற்க முயற்சிப்பார்கள் அந்த சிறுவர்கள்.

சரியான தேர்வு

சரியான தேர்வு

அவர்களைப் போலவே இந்த அமெரிக்க சிறுவர்களும் பீட்சாவுக்காக போட்டிக்கு அழைத்திருக்கிறார்கள். நல்லவேளையாக ஜெஃப்பை அவர்கள் போட்டிக்கு அழைத்ததால், தோற்றாலும் பீட்சா கிடைத்து விட்டது. இல்லையென்றால் பாவம் ஏமாந்திருப்பார்கள்.

English summary
A US-based man is winning the internet for his endearing gesture to treat a group of kids with a large pizza.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X