நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஒரு தமிழர் உட்பட 4 இந்தியர்கள்.. அமெரிக்க மிட்-டெர்ம் தேர்தலில் அசத்தல் வெற்றி!

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் இந்தியர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் இந்தியர்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். இந்த தேர்தலில் தமிழரும் ஒருவர் வெற்றிபெற்றுள்ளார்.

அமெரிக்காவில் கடந்த செவ்வாய்கிழமை மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் நேற்று வெளியானது.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து இருக்கிறது. எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சி மாபெரும் வெற்றிபெற்றுள்ளது.

பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி பெண்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பு ஏற்படும்.. விஜயை எச்சரிக்கும் நிர்மலா பெரியசாமி

ஒரு தமிழர்

ஒரு தமிழர்

இந்த தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக போட்டியிட்ட தமிழரான ராஜா கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்று இருக்கிறார். இவர் இரண்டாவது முறையாக இல்லினாய் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். தமிழகத்தை சேர்ந்த இவர் டெல்லியில் வசித்து வந்தார். பல வருடங்களுக்கு முன்பே அமெரிக்கா சென்ற இவர் அங்கு பிரின்ஸ்டன் பல்கலையிலும், ஹார்வேர்ட் பல்கலையிலும் படித்துள்ளார். சக இந்தியரான குடியரசுக் கட்சியை சேர்ந்த ஜெடி டிகன்கேரை 30 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் இவர் தோற்கடித்துள்ளார்.

ஒரே இந்திய பெண்

ஒரே இந்திய பெண்

இந்த தேர்தலில் கேரளாவை பூர்விகமாக கொண்ட பிரமிளா ஜெயபால் வெற்றிபெற்றுள்ளார். இந்த தேர்தலில் வென்ற ஒரே இந்திய பெண் இவர்தான். இவர் கேரளாவை சேர்ந்தவர் என்றாலும் பிறந்து வளர்ந்தது எல்லாம் சென்னையில்தான். ஜனநாயகக் கட்சி சார்பாக வாஷிங்டன் தொகுதியில் இருந்து பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். 60 சதவிகித வாக்கு வித்தியாசத்தில் இவர் வென்றுள்ளார்.

இன்னொரு இந்தியர்

இன்னொரு இந்தியர்

மூன்று முறை பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ள இந்தியாவை சேர்ந்த டாக்டர் அமி பேரா இந்த முறையும் பிரநிதிகள் சபைக்கு தேர்வாகி உள்ளார். கலிபோர்னியா தொகுதியில் இவர் வென்றுள்ளார். இவரும் குடியரசுக் கட்சியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் வெறும் 5 சதவிகித வாக்கு வித்தியாசத்தில்தான் இவர் வென்றுள்ளார்.

ரோ கண்ணா

ரோ கண்ணா

பஞ்சாப்பை பூர்விகமாக கொண்ட ரோ கண்ணா அமெரிக்காவிலேயே பிறந்து வளர்ந்தவர். இவர் சிலிகான் வாலியில் போட்டியிட்டு குடியரசு கட்ச் சார்பாக வென்றுள்ளார். 44 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் வென்றுள்ளார். இதுமட்டும் இல்லாமல் 9 இந்தியர்கள் மாநில சபைகளுக்கும் தேர்வாகி உள்ளனர்.

English summary
US Mid Term Elections: 4 Indians including one Tamil made into House of Representatives.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X