நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

காலாவும், அறமும் : அமெரிக்க தேர்தலில் கொடி நட்ட பெண்கள்.. புரட்சி செய்த கறுப்பினத்தவர்கள்!

அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த மிட்-டெர்ம் தேர்தலில் இந்த முறை அதிக அளவில் பெண்கள் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அதேபோல் கறுப்பின மக்களும் அதிக அளவில் வென்று இருக்கிறார்கள்.

அமெரிக்காவில் நேற்று மிட்-டெர்ம் தேர்தல்கள் நடைபெற்றது. இதற்கான முடிவுகள் தற்போது வெளியாகி வருகிறது.

அமெரிக்காவில் நடக்கும் அதிபர் தேர்தலுக்கு நிகராக இந்த தேர்தல் பார்க்கப்படுகிறது. இதில் பல புரட்சிகரமான சம்பவங்கள் நடந்து இருக்கிறது.

செம

செம

இந்த தேர்தல் பல வகைகளில் அமெரிக்க நாட்டிற்கு முக்கியத்துவம் வாய்ந்தது. அதில் மிக முக்கியமாக கவனிக்க வேண்டியது என்றால் ஆப்ரோ - அமெரிக்கர்களும் (கறுப்பின மக்கள்), பெண்களும் இந்த தேர்தலில் அதிக அளவில் வெற்றி பெற்று இருக்கிறார்கள். அமெரிக்காவில் ஆப்ரோ - அமெரிக்கர்கள் அதிக பேர் போட்டியிட்ட முதல் தேர்தல் இதுதான். இத்தனை வருட குடியரசு நாட்டின் ஆட்சியில் முதல்முறை இப்படி ஒரு புரட்சி நடந்துள்ளது.

எத்தனை பெண்கள்

எத்தனை பெண்கள்

அதேபோல் பெண்கள் இந்த தேர்தலில் மிக அதிக எண்ணிக்கையில் போட்டியிட்டு இருக்கிறார்கள். அமெரிக்க நாடாளுமன்றத் தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக அதிக பெண்கள் போட்டியிட்டு அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். 435 பிரதிநிதிகளின் சபை உறுப்பினர்களுக்கும் தேர்தல் நடந்தது. இதில் பிரதிநிதிகள் சபைக்கு இதுவரை மொத்தம் 90 பெண்கள் தேர்வாகியுள்ளனர். இதில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சி சார்பாக 78 பெண்களும், டிரம்ப்பின் குடியரசுக் கட்சி 12 சார்பாக பெண்களும் தேர்வாகி உள்ளனர்.

இஸ்லாமியர்கள்

இஸ்லாமியர்கள்

இதில் இரண்டு இஸ்லாமிய பெண்கள் முதல்முறையாக வெற்றிபெற்றுள்ளனர். ஜனநாயக கட்சியை சேர்ந்த இஹான் ஒமர் என்ற பெண் மின்னசோட்டா தொகுதியிலும், ரஷிதா தாலிப் என்ற பெண் மிச்சிகன் தொகுதியிலும் வென்று இருக்கிறார்கள். அங்கு இஸ்லாமிய பெண்கள் பிரதிநிதிகளின் சபைக்கு தேர்வாவது இதுவே முதல்முறை.

கருப்பு - உழைப்பின் வண்ணம்

கருப்பு - உழைப்பின் வண்ணம்

அதேபோல் அதிக அளவிலான கருப்பின பெண்களும் இதில் வெற்றிபெற்று இருக்கிறார்கள். மாசுச்சுசெட்ஸ் தொகுதி முதல் கறுப்பின பெண்ணை தேர்வு செய்துள்ளது. அரிசோனா மற்றும் டென்னிஸி தொகுதி கறுப்பின பெண்களை முதல்முறையாக சென்ட் சபைக்கு அனுப்பி உள்ளது. ஜார்ஜியாவை சேர்ந்த சதாசி அப்ராம்ஸ் கவர்னராகி உள்ளார். இவர்தான் அமெரிக்காவின் முதல் கறுப்பின பெண் கவர்னர்.

English summary
US Mid Term Elections: Afro - Americans and Women won many seats for the first time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X