நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஐநாவில் இந்தியரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய அமெரிக்கா

Google Oneindia Tamil News

நியூயார்க்: ஆப்கானிஸ்தானில் வசிக்கும் இந்தியரான கட்டுமான என்ஜினியர் வேணு மாதவ் டோங்கராவை ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க பாகிஸ்தான் எடுத்த முயற்சியை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

Recommended Video

    Indian Engineer-ஐ சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தான்.. தடுத்து நிறுத்திய America

    எல்லை தாண்டிய பயங்கரவாத தாக்குதலில் இந்தியாவில் நடத்தி வந்த ஜெய்ஷ்-இ-முகமது (ஜே.எம்) தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக ஐ.நா பாதுகாப்பு அவை அறிவித்தது. இதற்கு பதிலடியாக இந்தியாவைச் சேர்ந்த ஒருவரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயன்ற பாகிஸ்தானின் முயற்சிகளை அமெரிக்கா தடுத்து நிறுத்தியது.

    US officially blocking Pakistans effort to get Dongara listed as a global terrorist by the UNSC

    ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இந்திய கட்டுமான நிறுவனத்தின் பொறியியலாளர் வேணு மாதவ் டோங்காரா, பாகிஸ்தான் நாட்டில் தீவிரவாத தாக்குதல்களுடன் தொடர்பு கொண்டிருந்த 4 இந்திய நாட்டினரில் ஒருவர் என்று அந்நாட்டு அரசு கூறி வருகிறது. இந்த டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க. சீனாவின் ஆதரவோடு ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் பாகிஸ்தான் முயன்றது.

    இதை அமெரிக்கா தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதிகாரப்பூர்வமாக தடுத்து நிறுத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் யு.என்.எஸ்.சி 1267 பொருளாதாரத் தடைக் குழுவால் டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக தடைசெய்யும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் அமெரிக்காவின் உயர் அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவித்தன.

    US officially blocking Pakistans effort to get Dongara listed as a global terrorist by the UNSC

    இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?இந்தியா-சீனா ராணுவ கமாண்டர்கள் 11 மணி நேர பேச்சுவார்த்தை! லே விரையும் ராணுவ தளபதி.. என்ன நடக்கிறது?

    கடந்த ஆண்டு செப்டம்பரில் அமெரிக்கா இந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி வைத்திருந்தது, டோங்காரா மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க பாகிஸ்தான் கூடுதல் ஆதாரங்களை அளிக்க வேண்டும் என்று அமெரிக்கா எதிர்பார்க்கிறது. புதிய ஆதாரங்கள் வரவில்லை, ஆனாலும் பாக்கிஸ்தான் இன்னும் தடைகள் குழு பட்டியலில் டோங்காராவை குறிவைத்து வலியுறுத்துகிறது, அமெரிக்கா கடந்த வாரம் இந்த திட்டத்தை தடுத்ததால், பாகிஸ்தானின் முயற்சி முடிவுக்கு வந்துள்ளது.

    பாகிஸ்தான் மீண்டும் டோங்காராவை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்க முயற்சிக்கும் என கூறப்படுகிறது. ஆனால் அதற்கு கூடுதல் ஆதாரங்கள் தேவைப்படும்.

    English summary
    Pakistan was hoping to get Dongara listed as a global terrorist by the UNSC with support from China. but US had formally informed all members of the UN Security Council (UNSC) on Friday that it was officially blocking, and thus terminated
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X