• search
நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

வரலாறு காணாத வீழ்ச்சிக்கு பின்.. அமெரிக்கா கச்சா எண்ணெய் விலையில் அதிரடி உயர்வு

|

நியூயார்க்: மே மாதத்திற்கான அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை பீப்பாய் ஒன்று 10.01 டாலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    வரலாறு காணாத சரிவில் WTI கச்சா எண்ணெய்.. என்ன காரணம்?

    முன்னதாக அமெரிக்காவின் வரலாற்றில் இல்லாத அளவாக திங்கள்கிழமை அன்று ஒரு பேரல் கச்சா எண்ணெய் விலை -37.63 டாலராக இருந்தது.

    US Oil Prices Rebound At $10.01 Per Barrel After Historic Crash

    கொரோனா வைரஸ் 200க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி 25லட்சத்துக்கும் அதிகமான மக்களை பாதித்துள்ளது. அத்துடன் 1.77 லட்சம் பேர் இதுவரை உலகம் முழுவதும் கொரோனாவால் இறந்துள்ளனர்.

    உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கத்தால் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது , இதனால் வாகனங்கள் இயக்கப்படவில்லை. பொருளாதாரம் கடுமையாக சரிந்துள்ளது. வேலைகள் முடங்கிஉள்ளன. இதனால் சர்வதேச சந்தையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு கச்சா எண்ணெய் விலை கடுமையாக சரிந்தது.

    திடீர் திருப்பம்! இந்திய தொலை தொடர்பு சந்தையில் நுழைந்தது பேஸ்புக்! ஜியோவில் பல்லாயிரம் கோடி முதலீடுதிடீர் திருப்பம்! இந்திய தொலை தொடர்பு சந்தையில் நுழைந்தது பேஸ்புக்! ஜியோவில் பல்லாயிரம் கோடி முதலீடு

    வெஸ்ட் டெக்ஸாஸ் இண்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் மற்றும் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை படுமோசமான சரிவை சந்தித்து வந்தன. இந்த நிலையில் WTI கச்சா எண்ணெய் விலை திங்கள்கிழமை அன்று 0 டாலருக்கும் கீழே குறைந்தது. அதாவது ஒரு பேரல் -$37.63 ஆக குறைந்தது

    இந்நிலையில் அமெரிக்காவின் கச்சா எண்ணெய் விலை மே மாதத்திற்கான ஒப்பந்தம் $10.01 ஆக உயர்ந்துள்ளது. ஜூன் மாதத்திற்கு 11.57 டாலராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இது 1983 ஆம் ஆண்டில் ஒப்பந்தம் நிறுவப்பட்டதிலிருந்து மிகக் குறைவான அளவு ஆகும்.

     
     
     
    English summary
    Futures of US benchmark contract West Texas Intermediate for delivery in May ended at $10.01 a barrel after finishing Monday's session at -$37.63 a barrel.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X