நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

முன்னின்று காய் நகர்த்தும் கேம் சேஞ்சர்.. வெளியுறவுத்துறை அமைச்சராகும் ஆண்டனி.. பிடன் பிளான்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபராக வெற்றி பெற்று இருக்கும் ஜோ பிடன் அமெரிக்காவின் புதிய வெளியுறவுத்துறை பொறுப்பை ஆண்டனி பிளிங்கனுக்கு அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் வென்று இருக்கும் பிடன் தனது அமைச்சரவை உறுப்பினர்களை தேர்வு செய்யும் பணிகளை செய்து வருகிறார். தனக்கு நெருக்கமாக இருந்தவர்களுக்கும், ஒபாமாவிற்கு கீழ் பணியாற்றிய சிலருக்கு அமைச்சரவை பொறுப்பு, வேறு உயர் பொறுப்புகளை வழங்கவும் பிடன் திட்டமிட்டு வருகிறார்.

பென்டகன், சிஐஏ, எப்பிஐ, முப்படை என்று பல முக்கிய பொறுப்புகளுக்கு பிடன் ஆட்களை தேர்வு செய்ய வேண்டும். இது போக வெள்ளை மாளிகையில் செய்தி தொடர்பாளர் தொடங்கி ஃசீப் ஆப் ஸ்டாப்ஸ் வரை பல முக்கிய பொறுப்புகளை பிடன் தேர்வு செய்ய உள்ளார்.

இதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோஇதுதான் நிவர் புயலா.. அதுக்குள் இவ்வளவு கிட்ட வந்துடுச்சா.. சென்னையை நெருங்கியது.. சாட்டிலைட் போட்டோ

யார்

யார்

இந்த நிலையில் ஜோ பிடன் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ( செக்ரட்டரி ஆப் ஸ்டேட்) பொறுப்பை ஆண்டனி பிளிங்கனுக்கு அளிப்பார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பை அதிபர் தேர்வு செய்ய முடியும். அதே சமயம் இதற்கு செனட் உறுப்பினர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும். வெளியுறவுத்துறை அமைச்சர் என்பவர் அமெரிக்காவின் வெளியுறவு கொள்கையை திட்டமிடும் நபர்.

முக்கிய பதவி

முக்கிய பதவி

அமெரிக்காவிற்கும் பிற நாட்டிற்கும் இருக்கும் உறவுக்கு மிகப் பெரிய பாலமாக இருக்கும் நபர்தான் வெளியுறவுத்துறை அமைச்சர். இவரை நம்பித்தான் அமெரிக்காவின் வெளிநாட்டு உறவு இருக்கும். அமெரிக்காவின் மிகப்பெரிய கேம் சேஞ்சராக இவர் இருப்பார். அதிலும் ரஷ்யா, சீனாவுடன் அமெரிக்கா மோதி வரும் இந்த சூழ்நிலையில், வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பு அதிக முக்கியத்துவம் பெறுகிறது.

எப்படி

எப்படி

இந்த பொறுப்பைத்தான் பிடன் ஆண்டனி பிளிங்கனுக்கு வழங்க உள்ளார். அமெரிக்க அதிபராக ஒபாமா இருந்த போது ஆண்டனி பிளிங்கன் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தார். அதேபோல் இவர் பிடன் துணை அதிபராக இருந்த போது அவரின் பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்தார். இவரைத்தான் பிடன் தற்போது வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் அமர வைக்க உள்ளார் என்று கூறுகிறார்கள்.

கண்டிப்பு

கண்டிப்பு

58 வயது நிரம்பிய இவர் கொஞ்சம் கண்டிப்பானவர். டிரம்பின் ஆட்சிக்காலத்தில் வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பில் இருந்தவர்களான ரெக்ஸ் டில்லர்சன், மைக் பாம்பியோ இருவரும் அந்நாட்டு வெளியுறவு கொள்கையை காலி செய்துவிட்டனர் என்று புகார் உள்ளது. இந்த நிலையில்தான் அதிக அனுபவம் கொண்ட நபரை வெளியுறவுத்துறை அமைச்சர் பொறுப்பிற்கு பிடன் கொண்டு வர இருக்கிறார்.

English summary
US President elect Joe Biden may choose Antony Blinken for Secretary of States post.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X