நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஷாக்கிங்.. அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்.. மக்கள் அதிர்ச்சி!

தாலிபான் தலைவர்களை அமெரிக்கா வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Google Oneindia Tamil News

Recommended Video

    அமெரிக்காவின் முக்கியமான இடத்திற்கு தாலிபான்களை அழைத்த டிரம்ப்

    நியூயார்க்: தாலிபான் தலைவர்களை அமெரிக்கா வரவழைத்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டமிட்டது பெரிய சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

    ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்தி வரும் போரை நிறுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப் தீவிரமாக முயன்று வருகிறார். இதனால் அவர் ஆப்கானிஸ்தான் பிரதமருடன் ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்.

    அதேபோல் தாலிபான் தீவிரவாத அமைப்பின் தலைவர்களுடனும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார். ஆனால் இந்த ஆலோசனை கூட்டம் கடைசி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள கேம்ப் டேவிட் பகுதியில் இந்த ஆலோசனை கூட்டம் நடப்பதாக இருந்தது.

    தாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் நடத்த டிரம்ப் பிளான்.. கடைசியில் ரத்து.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்!தாலிபான்களுடன் ரகசிய மீட்டிங் நடத்த டிரம்ப் பிளான்.. கடைசியில் ரத்து.. என்ன நடக்கிறது அமெரிக்காவில்!

    கேம்ப் டேவிட் எப்படி

    கேம்ப் டேவிட் எப்படி

    அமெரிக்க அரசால் கட்டப்பட்டு அமெரிக்காவின் நேவி படையால் இந்த கேம்ப் டேவிட் இடம் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டு வருகிறது. அமெரிக்காவின் மிகப்பெரிய ஆலோசனை கூட்டங்கள், அமைதி ஒப்பந்தங்கள் எல்லாம் இங்கு நடந்து இருக்கிறது. வெள்ளை மாளிகையில் இருந்து வெறும் 110 கிமீ தூரத்தில்தான் இந்த பகுதி இருக்கிறது.

    ஏன் முக்கியம்

    ஏன் முக்கியம்

    இவ்வளவு சிறப்பு வாய்ந்த இடத்திற்குதான் தாலிபான் தலைவர்களை அமெரிக்க அதிபர் டிரம்ப் அழைத்து இருக்கிறார். கடைசி நேரத்தில் இந்த மீட்டிங் ரத்து செய்யப்பட்டுவிட்டது. ஆனால் தாலிபான் தலைவர்களை டிரம்ப் கேம்ப் டேவிட் அழைத்தது ஏன் என்ற கேள்விதான் தற்போது எழுந்துள்ளது.

    மோசமான மீட்டிங்

    மோசமான மீட்டிங்

    டிரம்ப் மீட்டிங் நடத்த வேண்டும் என்றால் எங்காவது ரகசியமாக நடத்தட்டும். தாலிபான் போன்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்தவர்களை கேம்ப் டேவிட் போன்ற இடத்திற்கு அழைத்து வருவது எந்த விதத்தில் நியாயம் என்று கேள்வி எழுந்துள்ளது. டிரம்பின் இந்த முடிவு அமெரிக்கர்கள் இடையே கடுமையான கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

    சிக்கல்

    சிக்கல்

    அதேபோல் இன்னும் 3 நாட்களில் அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல் நினைவு நாள் வர உள்ளது. இதற்கும் தாலிபான், அல் கொய்தா அமைப்பிற்கும் தொடர்பு உள்ளது. அதனால் இதுபோன்ற ஒரு நேரத்தில் தாலிபான் உடன் அமெரிக்க அதிபர் ஆலோசனை செய்வது எப்படி சரியான முடிவாக இருக்கும் என்றும் மக்கள் கேள்வி எழுப்பி இருக்கிறார்கள்.

    கேள்வி

    கேள்வி

    தாலிபான்கள் உடனான சந்திப்பை டிரம்ப் ரத்து செய்ததற்கும் இதுதான் காரணமாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மக்களின் எதிர்ப்பு விஸ்வரூபம் எடுக்க வாய்ப்புள்ளது. அதை தவிர்க்கும் பொருட்டு டிரம்ப் முடிவை மாற்றிக்கொண்டார் என்று கூறுகிறார்கள்.

    English summary
    US President Trump invites Taliban Camp David: Becomes a whole new controversy.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X