நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

முக்கிய அறிவிப்பு வர போகிறது.. சீனாவிற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் அமெரிக்கா.. பகீர் பின்னணி

Google Oneindia Tamil News

நியூயார்க்: சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வெள்ளை மாளிகை இதை உறுதி செய்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இது தொடர்பாக அறிவிக்க இருக்கிறார்.

Recommended Video

    China VS America | China-விற்கு எதிராக பெரிய நடவடிக்கை எடுக்கும் America | White House

    சீனா மீது பல்வேறு விஷயங்களில் அமெரிக்கா கடுமையான கோபத்தில் இருக்கிறது. இரண்டு வருடமாக நடந்த வர்த்தக போர் இதற்கு பிள்ளையார் சுழி போட்டது. அதை தொடர்ந்து கொரோனா வைரஸ் பிரச்சனை இதை பெரிதாக்கியது.

    அதன்பின் தென் சீன கடல் எல்லை பிரச்சனை, இந்தியா - சீனா மோதல் ஆகியவை இதை இன்னும் பெரிதாக்கியது. சீனாவை மொத்தமாக உலக நாடுகளிடம் இருந்து பிரிக்க அமெரிக்கா முயன்று வருகிறது.

    பயணிகள் விமானம் தடை

    பயணிகள் விமானம் தடை

    அதன் ஒரு கட்டமாக சீனாவின் பயணிகள் விமானங்களை தடை செய்ய அமெரிக்க அதிபர் டிரம்ப் முடிவு செய்துள்ளார். கடந்த ஜூன் 16ம் தேதி முதல் அமெரிக்காவின் போர் விமானங்களை தடை செய்வதாக அவர் அறிவித்தார். அதை தொடர்ந்து வரிசையாக முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அதில், சீனாவின் மீது சிறிய சிறிய தடைகளை அமெரிக்கா விதித்தது.

    என்ன தடைகள்

    என்ன தடைகள்

    அதன்படி சீனாவின் ஆராய்ச்சி மாணவர்கள் அமெரிக்கா வர தடை விதிக்கப்பட்டது. சீனாவின் ஹவாய் உள்ளிட்ட நிறுவனங்களை அந்நாட்டு பங்கு சந்தையில் இணைக்க வேண்டும். அவர்களின் விவரங்களை வெளியிட வேண்டும் என்று அமெரிக்கா அறிவித்தது. அதோடு சீனாவின் அரசு அதிகாரிகள், செயலாளர்கள் சிலருக்கும் விசா தடை விதிக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது.

    புதிய அறிவிப்பு

    புதிய அறிவிப்பு

    இந்த நிலையில் சீனா மீது மேலும் நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது என்று கூறுகிறார்கள். அதன்படி சீனாவிற்கு எதிராக மிகப்பெரிய நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. வெள்ளை மாளிகை இதை உறுதி செய்துள்ள நிலையில் அதிபர் டிரம்ப் இது தொடர்பாக அறிவிக்க இருக்கிறார். டிரம்ப் இன்று அல்லது நாளை இது தொடர்பாக அறிவிக்க உள்ளார்.

    சொன்னது என்ன

    சொன்னது என்ன

    அதன்படி இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாக மெக் ஏனானி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட போகிறார் . சீனாவிற்கு எதிராக முக்கியமான நடவடிக்கை ஒன்றை அவர் எடுக்க உள்ளார். அவர் என்ன முடிவு எடுக்க போகிறார் என்று என்னால சொல்ல முடியாது. ஆனால் இது முக்கியமான முடிவாக இருக்கும், அவர் கண்டிப்பாக இதை அறிவிப்பார் என்பதை மட்டும் உறுதி அளிக்கிறேன், என்று அவர் கூறியுள்ளார்.

    தடை அறிவிப்பா

    தடை அறிவிப்பா

    இதனால் டிரம்ப் சீனாவிற்கு எதிராக என்ன அறிவிக்க போகிறார் என்று கேள்வி எழுந்துள்ளது. சீனாவிற்கு எதிராக மொத்தமாக பொருளாதார தடையை விதிப்பாரா? அல்லது சீனாவுடன் மொத்தமாக பொருளாதார உறவை முறிப்பதாக அறிவிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது . இல்லையெனில் தென் சீன கடல் எல்லையில் நடக்கும் மோதல் குறித்தும், போர் பதற்றம் குறித்தும் அறிவிப்பாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    US President Trump is going to announce something big on China soon.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X