நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சட்ட போராட்டத்திலும் பின்னடைவு.. மிச்சிகன் தேர்தல் வழக்கை வாபஸ் வாங்கிய டிரம்ப்.. என்ன நடந்தது?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்காவில் இருக்கும் மிச்சிகன் மாகாணத்தின் தேர்தல் முடிவிற்கு எதிராக அதிபர் டிரம்ப் தரப்பு தொடுத்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடன் 290 எலக்ட்ரல் வாக்குகளை வென்று, அடுத்த அதிபராக தேர்வாகி உள்ளார். ஆனாலும் டிரம்ப் இன்னும் தோல்வியை முழுமையாக ஏற்கவில்லை.

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்துள்ள டிரம்ப், தனது தோல்வியை ஏற்க மறுத்து தொடர்ந்து பிரச்சனை செய்து வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளர் அதிபர் டிரம்ப் 232 எலக்ட்ரல் வாக்குகளை வென்று, தேர்தலில் தோல்வி அடைந்துள்ளார்.

"வார் கேம்".. சீறிப்பாய்ந்த போர் ஜெட்கள்.. அரபிக்கடலில் இந்தியா, அமெரிக்காவின் மாஸ் மலபார் பயிற்சி!

வழக்கு

வழக்கு

இந்த நிலையில் தேர்தல் முடிவுகளை எதிர்த்து டிரம்ப் பல்வேறு மாகாணங்களில் வழக்கு தொடுத்துள்ளார். தேர்தல் முடிவை எதிர்த்து டிரம்ப் தரப்பு சட்ட போராட்டங்களை நடத்தி வருகிறது. முக்கியமான மிச்சிகன் மாகாணத்தில் தோல்வியை எதிர்த்து டிரம்ப் வழக்கு தொடுத்து இருந்தார். இங்கு 16 எலக்ட்ரல் வாக்குகள் உள்ளது. இதற்கு எதிராக டிரம்ப் வழக்கு தொடுத்தார்.

என்ன நடந்தது

என்ன நடந்தது

முக்கியமாக 8 லட்சம் வாக்குகளை கொண்டு இருக்கும் மிச்சிகனின் வெயின் கவுன்டியில் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க கூடாது என்று வழக்கு தொடுத்தார். இங்கு முழுமையாக அனைத்து வாக்குகளையும் எண்ண வேண்டும் என்று டிரம்ப் தரப்பு வழக்கு தொடுத்து இருந்தது.

பின்னணி

பின்னணி

இந்த நிலையில் மிச்சிகன் மாகாணத்தின் தேர்தல் முடிவிற்கு எதிராக அதிபர் டிரம்ப் தரப்பு தொடுத்த வழக்கு வாபஸ் வாங்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக டிரம்பின் பிரச்சார குழு செய்தி வெளியிட்டுள்ளது. மிச்சிகனின் வெயின் கவுன்டியில் தேர்தல் முடிவுகளை அதிகாரபூர்வமாக அறிவிக்க மாட்டோம் என்று தேர்தல் குழு உறுதி அளித்த காரணத்தால் வழக்கை வாபஸ் வாங்குவதாக டிரம்ப் தரப்பு தெரிவித்துள்ளது.

ஆனால் என்ன

ஆனால் என்ன

ஆனால் இந்த கவுன்டியில் தேர்தல் ஏற்கனவே முடிவு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. இங்கு பிடன் வென்றுவிட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுவிட்டது. வெயின் கவுன்டியில் பிடன் 68% வாக்குகளை பெற்றுள்ளார். மொத்தமாக மிச்சிகனில் பிடன் 50.6% வாக்குகளை பெற்று அங்கு இருக்கும் 16 எலக்ட்ரல் வாக்குகளையும் வென்றுள்ளார். டிரம்ப் இப்போது வழக்கை வாபஸ் வாங்கி உள்ளதால் மிச்சிகன் வெற்றி பிடனுக்கு உறுதியாகி உள்ளது.

English summary
US President Trump withdraws Michigan case after Wayne county result.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X