நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு.. வாக்கு எண்ணும் மையம் முன் திரண்ட டிரம்ப் ஆதரவாளர்கள்.. ஷாக்கிங்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அதிபர் தேர்தலில் டிரம்ப் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவரின் ஆதரவாளர்கள் ஆயுதங்களோடு வாக்கு எண்ணும் மையங்கள் முன் திரண்டு வருகிறார்கள்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்பின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் வெறும் 214 எலக்ட்ரல் வாக்குகளே வென்றுள்ளார். அவர் வெற்றிபெற இன்னும் 56 வாக்குகள் தேவை என்பதால்.. டிரம்பின் தோல்வி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது.

வெற்றிபெறுவதற்கு இன்னும் 6 எலக்ட்ரல் வாக்குகளே தேவை என்ற நிலையில்.. ஜனநாயக கட்சி வேட்பாளர் பிடனின் வெற்றி கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இதுவரை வெளியாகி உள்ள முடிவுகளின்படி 264 வாக்குகளுடன் பிடன் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார்.

அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால்.. நானும் உரிமை கோருவேன்.. டிரம்ப் பரபரப்பு டிவிட்.. மோதல்! அதிபர் பதவிக்கு பிடன் உரிமை கோரினால்.. நானும் உரிமை கோருவேன்.. டிரம்ப் பரபரப்பு டிவிட்.. மோதல்!

கோரிக்கை

கோரிக்கை

டிரம்ப் முக்கியமான மாகாணங்கள் பலவற்றில் சரிவை சந்தித்துள்ளார். முக்கியமாக பென்சில்வேனியா, ஜார்ஜியா, மெக்சிகன், அரிசோனா போன்ற மாகாணங்களில் டிரம்ப் சரிவை சந்தித்துள்ளார். முதலில் இங்கு முன்னிலை வகித்த டிரம்ப்.. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில்.. மாபெரும் சரிவை சந்தித்துள்ளார்.

சர்ச்சை

சர்ச்சை

தபால் வாக்குகளை எண்ண, எண்ண பிடன் வெற்றிக்கு அருகில் சென்று கொண்டு இருக்கிறார். அதிபர் தேர்தலில் பிடன் முறைகேடு செய்துவிட்டார், தபால் வாக்குகளில் பிடன் முறைகேடு செய்துவிட்டார் என்று டிரம்ப் குற்றஞ்சாட்டி வருகிறார். இதை டிரம்பின் ஆதரவாளர்களும் தீவிரமாக நம்பி வருகிறார்கள். தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டதாக அவர்கள் தீவிரமாக நம்புகிறார்கள்.

தீவிரம்

தீவிரம்

இதனால் பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் டிரம்ப் ஆதரவாளர்கள் கோபமாக திரண்டு வருகிறார்கள். துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களோடு வாக்கு எண்ணும் மையம் முன் டிரம்ப் ஆதரவாளர்கள் திரண்டு வருகிறார்கள். பென்சில்வேனியா உள்ளிட்ட மாகாணங்களில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையோடு அவர்கள் கோபமாக கோஷங்களை எழுப்பி வருகிறார்கள்.

திரண்டு வருகிறார்கள்

திரண்டு வருகிறார்கள்

டிரம்ப் பின்னடைவை சந்தித்து வரும் நிலையில் அவரின் ஆதரவாளர்கள் இப்படி திரண்டு வருகிறார்கள். இதனால் பென்சில்வேனியா, ஜார்ஜியா உள்ளிட்ட மாகாணங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. அங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் கலவரத்தில் ஈடுபட வாய்ப்பு உள்ளதால்.. பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அங்கு டிரம்ப் ஆதரவாளர்கள் சிலர் ஏற்கனவே கைது செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

English summary
US Presidential Election 2020: Trump supporters gather outside counting centers with guns and spikes.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X