நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

சர்வாதிகாரமா? வெள்ளை மாளிகை உள்ளே ராணுவம் செல்லும்.. டிரம்பை வெளியே துரத்தும்.. பிடன் தந்த வார்னிங்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: வெள்ளை மாளிகைக்கு உள்ளே அமெரிக்க ராணுவம் சென்று அங்கிருந்து அதிபர் டிரம்பை அந்நாட்டு ராணுவம் வெளியேற்றும் என்று ஜனநாயக கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் களம் இப்போதுதான் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது. கொரோனா பாதிப்பு மற்றும் ஜார்ஜ் பிளாய்டு கொலைக்கு இடையே இந்த தேர்தல் நடக்க உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த தேர்தலில் இரண்டாவது முறையாக போட்டியிடுகிறார். ஆனால் இதுவரை வெளியான கருத்து கணிப்புகள் படி டிரம்ப் இந்த தேர்தலில் வெற்றிபெற பெரிய அளவில் வாய்ப்புகள் இல்லை என்று கூறுகிறார்கள்.

இத்தாலியும், நியூயார்க்குமே தப்பியாச்சு, சென்னைவாசிகளே ஹேப்பியா இருங்க! உற்சாக 'மாஸ்க்' ஆய்வு முடிவுஇத்தாலியும், நியூயார்க்குமே தப்பியாச்சு, சென்னைவாசிகளே ஹேப்பியா இருங்க! உற்சாக 'மாஸ்க்' ஆய்வு முடிவு

என்ன கேள்வி

என்ன கேள்வி

அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் அங்கு எழுந்து இருக்கும் மிக முக்கியமான கேள்வி, அதிபர் டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன செய்வார் என்பதுதான். டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால் உடனே வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற வேண்டும் . புதிய அதிபருக்கு டிரம்ப் இடம் அளிக்க வேண்டும். தன்னிடம் இருக்கும் அணு ஆயுதத்திற்கு பாஸ்வேர்டை திருப்பி அளிக்க வேண்டும்.

ஆனால் சந்தேகம்

ஆனால் சந்தேகம்

ஆனால் டிரம்ப் இப்படி அனைத்தையும் துறந்துவிட்டு செல்வாரா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது ஒருவேளை டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால், அவர் என்ன செய்வார், வெள்ளை மாளிகைக்கு உள்ளேயே இருப்பாரா என்று கேள்வி எழுந்து உள்ளது. அதாவது ஆட்சியை விட்டுக்கொடுக்காமல், தேர்தல் முடிவை ரத்து செய்வாரா அல்லது மறு தேர்தல் நடத்த வேண்டும் என்று கூறுவாரா என்று கேள்வி எழுந்துள்ளது.

என்ன நியாயம்

என்ன நியாயம்

டிரம்பின் வியாபார மூளை தொடங்கி அவரின் பழைய வரலாறு தெரிந்தவர்களுக்கு இது ஆச்சர்யம் அளிக்க கூடிய விஷயம் இல்லை. அதோடு டிரம்ப் வாஷிங்க்டன் உள்ளேயே ராணுவத்தை அனுப்புவேன் என்று கூறியவர். எந்த அதிபரும் செய்யாத விஷயத்தை செய்ய போவதாக இவர் கூறினார். அதோடு அமெரிக்காவில் ஆபிரகாம் லிங்கன் இருந்த காலத்திலேயே இதுபோல் இரண்டு வெள்ளை மாளிகை என்று உள்நாட்டு யுத்தம் எல்லாம் நடந்து இருக்கிறது.

இரண்டு அதிபர்

இரண்டு அதிபர்

ஆம் இரண்டு அதிபர்கள் ஒரே நேரத்தில் ஆட்சிக்கு சண்டை போட்ட சம்பவங்கள் எல்லாம் அமெரிக்காவில் நடந்து இருக்கிறது . அதனால் அங்கு மீண்டும் அப்படி ஒரு சூழ்நிலை உருவாகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. அதாவது டிரம்ப் தனது தேர்தல் தோல்விக்கு பின் ஆட்சியை விட்டு வெளியேறாமல், சர்வாதிகாரத்தை கையில் எடுப்பாரா என்று மக்கள் கேட்க தொடங்கி உள்ளனர். இது தொடர்பாகத்தான் தற்போது ஜோ பிடன் பதில் அளித்துள்ளார்.

ஜோ பிடன் கருத்து என்ன

ஜோ பிடன் கருத்து என்ன

இது தொடர்பாக தற்போது ஜோ பிடன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் என்று நினைக்கிறேன். இதில் டிரம்ப் ஏதாவது முறைகேடு செய்ய வாய்ப்பு உள்ளது. தேர்தல் தோல்விக்கு பின் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியே செல்ல மாட்டேன் என்று சவால் விட வாய்ப்புள்ளது. ஆனால் அவரால் அப்படி எல்லாம் செய்ய முடியாது.

Recommended Video

    கருத்துக்கணிப்பில் பின்னடைவு... Trump-க்கு வந்த சிக்கல்
    ராணுவம் நம்பிக்கை

    ராணுவம் நம்பிக்கை

    ஏனென்றால் அமெரிக்க ராணுவம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அதிபர் டிரம்ப் ஏதாவது முறைகேடு செய்ய நினைத்தால் உடனே ராணுவம் வெள்ளை மாளிகை உள்ளே செல்லும். உடனே அவரை வெள்ளை மாளிகையில் இருந்து அப்புறப்படுத்தும். வெள்ளை மாளிகை உள்ளே டிரம்ப் இருக்க, அமெரிக்கா ராணுவம் எப்போதும் அனுமதிக்காது என்று உறுதியாக நம்புகிறேன் என்று பிடன் தெரிவித்துள்ளார்.

    English summary
    US Presidential elections: Army will intervene and send Trump out of White House says Joe Biden.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X