நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

என்னை வெற்றிபெற வையுங்கள்.. ஜிங்பிங்கிடம் "பேரம்" பேசிய டிரம்ப்.. அமெரிக்க அதிபர் தேர்தலில் பரபரப்பு

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற அதிபர் டிரம்ப் சீனாவின் உதவியை நாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் பவரை பயன்படுத்தி தனக்கு உதவ வேண்டும் என்று டிரம்ப் கோரிக்கை வைத்துள்ளார்.

Recommended Video

    US Election-ல் ஜெயிக்க China அதிபரிடம் பேரம் பேசிய Trump

    அமெரிக்க அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் நாளுக்கு நாள் அது தொடர்பாக புதிய தகவல்கள், சர்ச்சைகள் வெளியாகி வருகிறது. முக்கியமாக அமெரிக்க அதிபர் டிரம்பிற்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள், சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

    இதற்கு முன் நடந்த கடந்த அதிபர் தேர்தலிலேயே டிரம்ப் வெற்றிபெற்றது குறித்து நிறைய சர்ச்சைகள் எழுந்த வண்ணம் இருந்தது. ரஷ்யாவின் உதவியோடு தேர்தலில் முறைகேடு செய்து டிரம்ப் வெற்றிபெற்றதாக நிறைய தகவல்கள், சர்ச்சைகள் எழுந்தது.

    இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல் இந்தியா பதிலடி.. சீனாவின் முக்கிய அதிகாரி உட்பட 35 ராணுவ வீரர் பலி.. அமெரிக்க உளவுத்துறை தகவல்

    மீண்டும் சர்ச்சை

    மீண்டும் சர்ச்சை

    இந்த நிலையில் மீண்டும் அதேபோல் டிரம்பிற்கு எதிராக சர்ச்சை எழுந்துள்ளது. இந்த முறை ரஷ்யாவிற்கு பதிலாக சீனா. அதன்படி அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவின் உதவியை நாடியதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. சீனாவின் பவரை பயன்படுத்தி தனக்கு உதவ வேண்டும் என்று அதிபர் டிரம்ப் சீனாவிடம் நேரடியாக கோரிக்கை வைத்துள்ளார்.

    புத்தகம்

    புத்தகம்

    அதிபர் டிரம்பின் முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டன் எழுதிய "The Room Where it Happened: A White House Memoir'' என்ற புத்தகத்தில் இந்த விவரங்கள் விரிவாக உள்ளது. டிரம்பிற்கு எதிராக பல ரகசியங்களை இதில் ஜான் எழுதி இருக்கிறார். அதில், அமெரிக்க அதிபர் டிரம்ப் சீனாவிடம் நேரடியாக உதவி கேட்டார். நான் அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றிபெற வேண்டும். அதற்கு உதவுங்கள்.

    உங்களால் முடியும்

    உங்களால் முடியும்

    உங்களிடம் பொருளாதார ரீதியாக பெரிய சக்தி இருக்கிறது. நீங்கள் நினைத்தால் தேர்தல் முடிவுகளை மாற்ற முடியும். நான் மீண்டும் அதிபர் ஆவதை உறுதி செய்யுங்கள் என்று சீன அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் டிரம்ப் நேரடியாக கேட்டு இருக்கிறார். ஆம் இப்படித்தான் ஜான் தனது புத்தகத்தில் குறிப்பிட்டு உள்ளார் . இந்த மீட்டிங் 2019ல் நடந்து இருக்கிறது . ஜப்பானில் ஓசாகா பகுதியில் இந்த மீட்டிங் நடந்துள்ளது.

    மோசம்

    மோசம்

    முதலில் சீனாவின் உதவியோடு விவசாய திட்டங்களை கொண்டு வர வேண்டும். அதன் மூலம் விவசாயிகளை வளைத்து வாக்குகளை பெற வேண்டும் என்று டிரம்ப் பேசி இருக்கிறார். அதன்பின் நேரடியாகவே டிரம்ப் சீனாவிடம் தேர்தலில் வெற்றிபெற உதவும்படி கோரிக்கை வைத்துள்ளார் என்று அந்த புத்தகத்தில் குறிப்பிடப்பட்டு உள்ளது. அதேபோல் டிரம்பிற்கு எதிராக வேறு சில புகார்களும் வைக்கப்பட்டுள்ளது.

    புகார்கள் என்ன

    புகார்கள் என்ன

    தனக்கு எதிரான தகுதி நீக்க வழக்கை தள்ளிப்போக வைக்க டிரம்ப் நிறைய உள்ளடி வேலைகளை செய்தார். சீனாவில் Uighur இஸ்லாமியர்களை அந்த நாடு கொடுமை படுத்தியதை டிரம்ப் ஆதரித்தார். இதற்காக டிரம்ப் சீனாவிற்கு போன் செய்து அதிபர் ஜி ஜிங்பிங்கிடம் தனது பாராட்டுகளை தெரிவித்தார். இப்படித்தான் அந்த இஸ்லாமியர்களை நடத்த வேண்டும் என்று டிரம்ப் குறிப்பிட்டதாக அந்த புத்தகத்தில் உள்ளது.

    வழக்கு

    வழக்கு

    அமெரிக்க அதிபர் தேர்தல் நடக்க உள்ள நிலையில் இப்படி ஒரு புத்தகம் வெளியே வருவது டிரம்பிற்கு அதிர்ச்சி அளித்துள்ளது. இருக்கிற பிரச்சனை போதாது என்று அவருக்கு புதிய பிரச்சனை வந்துள்ளது. ஜான் எழுதிய இந்த "The Room Where it Happened: A White House Memoir'' புத்தகத்திற்கு எதிராக ஏற்கனவே அங்கு வழக்கும் தொடுக்கப்பட்டுவிட்டது. இந்த புத்தகம் ஜூன் 23ம் தேதி வெளியாக உள்ளது.

    நடந்தது என்ன

    நடந்தது என்ன

    ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப்தான் மீண்டும் அந்நாட்டு அதிபர் தேர்தலில் வெற்றிபெற வேண்டும் என சீனாவை சேர்ந்த அரசியல் வல்லுநர்கள், கோடீஸ்வரர்கள் விருப்பம் தெரிவித்து இருக்கிறார்கள்.வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். உலக நாடுகள் எல்லாம் இந்த தேர்தலை எதிர்நோக்கி உள்ளது. அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது.

    English summary
    US Presidential elections: Bolton's memoir book says Trump asked for Chinese help to win the election.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X