நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

டிரம்ப் vs பிடன்.. அமெரிக்க அதிபர் தேர்தலால் சண்டையில் குதித்த வல்லரசுகள்.. ரஷ்யாவுடன் மோதும் சீனா!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் முடிவுகளை மாற்றும் வகையில் ரஷ்யாவும், சீனாவும் செயல்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது. இதில் அதிர்ச்சி அளிக்கும் விஷயம் இரண்டு நாடுகளும் எதிர் எதிர் திசையில் இயங்கி வருகிறது.

அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. அதிபர் தேர்தல் மிக அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது.

குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார்.

எல்லையில் வாலாட்டும் சீனா... நீளும் பேச்சுவார்த்தை... ஏன் தேப்சாங் இந்தியாவுக்கு முக்கியம்!! எல்லையில் வாலாட்டும் சீனா... நீளும் பேச்சுவார்த்தை... ஏன் தேப்சாங் இந்தியாவுக்கு முக்கியம்!!

தலையீடு

தலையீடு

கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா தலையீடு செய்ததாக புகார் உள்ளது. அதாவது அதிபர் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டது. எதிர்க்கட்சி வேட்பாளர் ஹிலாரி கிளிண்டனுக்கு எதிராக செயல்பட்டு ரஷ்யா டிரம்ப்பை வெற்றிபெற வைத்தது என்று புகார் உள்ளது.அதாவது தேர்தல் பிரச்சாரம் மற்றும் தேர்தலில் நிறைய முறைகேடுகள், தலையீடுகளை செய்து, தேர்தல் முடிவை ரஷ்யா மாற்றியதாக புகார் உள்ளது.

மீண்டும் எப்படி

மீண்டும் எப்படி

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்யா மீண்டும் தலையிட்டு வருகிறது. இதற்கான திட்டங்களை வகுத்து வருகிறது என்று கூறுகிறார்கள். அமெரிக்காவின் முன்னாள் சிஐஏ மற்றும் எப்பிஐ அதிகாரிகள் இது தொடர்பாக புகார்களை, தகவல்களை வெளியிட்டுள்ளனர். அதன்படி இந்த 2020 அதிபர் தேர்தலிலும் டிரம்பிற்கு ஆதரவாக ரஷ்யா செயல்பட்டு வருகிறது என்று கூறுகிறினார்கள்.

செய்வது என்ன

செய்வது என்ன

அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளர் பிடனுக்கு எதிராக ரஷ்யா செயல்படுகிறது. பிடன் அதிபர் தேர்தலில் வெற்றிபெற்றால், அவர் ரஷ்யாவை கட்டுப்படுத்துவார். ரஷ்யாவின் ஆதிக்கத்தை கட்டுப்படுத்தும் பணிகளை செய்வார். அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கை இதனால் மாற்றம் அடையும். பிடன் ஆட்சிக்கு வந்தால் அது ரஷ்யாவிற்குதான் சிக்கல், என்பதால் பிடனுக்கு எதிராக ரஷ்யா செயல்பட்டு வருகிறது என்கிறார்கள்.

பெரிய ஆதாரம்

பெரிய ஆதாரம்

இதனால் பிடனுக்கு எதிராக பாலியல் புகார் தொடங்கி ஊழல் புகார் வரை பல்வேறு புகார்களை ரஷ்யா முன்னெடுத்து வருகிறது. அமெரிக்காவிற்குள் பிடனுக்கு எதிராக ரஷ்யா புதிய குழு ஒன்றை உருவாக்கி வருகிறது. சில நாட்களுக்கு முன் பிடன் போனில் பேசியதாக சில ஆடியோக்கள் வெளியானது. அந்த ஆடியோக்களை வெளியிட்டதும் ரஷ்யாதான் என்று கூறுகிறார்கள்.

ஆனால் சீனா

ஆனால் சீனா

ஆனால் இன்னொரு பக்கம் சீனாவோ அதிபர் டிரம்பிற்கு எதிராக இருக்கிறது. சீனா மீது டிரம்ப் கடும் கோபத்தில் இருக்கிறார். மீண்டும் டிரம்ப் ஆட்சிக்கு வந்தால் அது சீனாவிற்கு பெரிய பிரச்சனையாக மாறும். சீனா மீது அவர் பொருளாதார தடையை விதிக்க கூட வாய்ப்புள்ளது.அவர் மீண்டும் நான்கு ஆண்டுகள் ஆட்சி செய்தால் சீனாவிற்கு அது வீழ்ச்சியாக மாறும் என்று சீனா நினைக்கிறது.

திட்டம்

திட்டம்

இதனால் டிரம்பிற்கு எதிராக சீனா செயல்பட்டு வருகிறது. இதனால்தான் டிக்டாக் மூலம் டிரம்பிற்கு எதிராக சீனா தொடர்ந்து பிரச்சாரங்களை செய்து வருகிறது என்றும் கூறுகிறார்கள். 2020 தேர்தலில் பிடன் வெற்றிபெற்றால் , அவர் சீனாவுடன் உறவை புதிப்பிப்பார். இதனால் மீண்டும் சீனாவின் நிறுவனங்கள் அமெரிக்காவில் இயங்க முடியும் என்று சீனா நம்புகிறது. இதனால் பிடனுக்கு ஆதரவாக சீனாவும் எதிராக ரஷ்யாவும் களமிறங்கி உள்ளது.

ஈரான் எப்படி

ஈரான் எப்படி

அதேபோல் ஈரானும் டிரம்பிற்கு எதிராக இருப்பதாக கூறுகிறார்கள் . ஈரான் மீது கடுமையான பொருளாதார தடைகளை டிரம்ப்தான் விதித்தார். அதோடு , ஈரான் தளபதி சுலைமானி கொலைக்கும் டிரம்ப்தான் உத்தரவிட்டார். இதனால் மீண்டும் டிரம்ப் ஆட்சிக்கு வர அனுமதிக்க கூடாது என்று ஈரான் நினைக்கிறது. இதனால் சீனாவுடன் இணைந்து ஈரான் டிரம்ப்பிற்குகு எதிராக பணியாற்றி வருகிறார் என்கிறார்கள்.

English summary
vUS Presidential elections: China supports Biden, Meanwhile, Russia supports Trump-like last time.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X