நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஜோ பைடன் மீது சந்தேகம்.. அவருக்கு ஊக்குமருந்து சோதனை செய்ய வேண்டும்.. டிரம்ப் பகீர் புகார்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஊக்க மருந்து எடுத்து கொண்டதற்காக அதிபர் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுவாக வேட்பாளர்கள் இடையே நடக்கும் விவாதங்கள் முக்கியமானதாக பார்க்கப்படும். கட்சிக்குள் அதிபர் வேட்பாளரை தேர்வு செய்யும் பிரைமரி தேர்தலிலும் சரி அதன்பின் அதிபர் வேட்பாளரகளுக்கு இடையே நடக்கும் அதிபர் தேர்தலுக்கான போட்டியிலும் சரி விவாதங்கள் மிக முக்கியமானது ஆகும்.

இதை வைத்தே கருத்து கணிப்புகள் வெளியாகும், வேட்பாளர்களின் மதிப்பெண்கள், புள்ளிகள் வெளியாகும். அதன்பின் அதிபர் தேர்தல் முடிவுகளும் இந்த விவாதங்களை பொறுத்தே மாற்றம் அடையும். அதிபர் வேட்பாளர்களின் கொள்கைகள் என்னென்ன என்று இந்த விவாதங்கள் மூலமே தெரிய வரும்.

ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா! ரஷ்யாவில் நடக்கும் எஸ்சிஓ கூட்டம்.. மேப் மூலம் சீண்டிய பாக்.. மீட்டிங்கிலிருந்து வெளியேறிய இந்தியா!

ஊக்கமருந்து

ஊக்கமருந்து

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் ஊக்க மருந்து எடுத்து கொள்வதாக அதிபர் மற்றும் குடியரசு கட்சி வேட்பாளர் டிரம்ப் குற்றஞ்சாட்டி இருக்கிறார். டிரம்ப் தனது குற்றச்சாட்டில், ஜோ பைடன் முதலில் ஜனநாயக கட்சியின் பிரைமரி விவாதம்( அதிபர் வேட்பாளரை தேர்வு செய்ய உள் கட்சிக்குள் நடக்கும் விவாதம்) எதிலும் சரியாக பேசவில்லை.

மோசமாக திணறினார்

மோசமாக திணறினார்

பைடன் முதலில் மோசமாக திணறினார். அதிலும் சக போட்டியாளர் பெர்னி சாண்டர்ஸிடம் மோசமாக தோல்வி அடைந்தார். ஆனால் அதன்பின் நடந்த விவாதங்களில் பைடன் சிறப்பாக உரையாற்றினார். பைடன் திடீரென இப்படி மாறியது எனக்கு சந்தேகம் தருகிறது. அதில் எதோ தவறு இருக்கிறது. அவர் இப்படி திடீரென மாற்றம் அடைந்தது சந்தேகம் தருகிறது.

சோதனை வேண்டும்

சோதனை வேண்டும்

இதை நான் சொல்ல கூடாது.. ஆனாலும் பைடன் ஏதாவது ஊக்கு மருந்து எடுத்தாரா என்று சந்தேகம் எழுகிறது. அவரை சோதனை செய்ய வேண்டும். அவர் ஒருவேளை ஊக்கமருந்து எடுத்துவிட்டு சிறப்பாக பேசி இருக்கலாம். அவர் மூளை இதனால் சிறப்பாக செயல்பட்டு இருக்கலாம். இதனால் அவரை சோதனை செய்ய வேண்டும்.

நானும் தயார்

நானும் தயார்

நானும் சோதனை செய்து கொள்ள தயார். செப்டம்பர் 29ம் தேதி நாங்கள் விவாதம் செய்ய போகிறோம். அதன்பின் இரண்டு விவாதம் செய்வோம். இந்த விவாதத்திற்கு முன் அவர் சோதனை செய்ய வேண்டும். அவரால் கேள்விகளை எதிர்கொள்ள முடியாது. அப்படிப்பட்ட பைடன் திடீரென விவாதங்களில் நன்றாக பேசுவது சந்தேகம் தருகிறது என்று டிரம்ப் கூறியுள்ளார்.

English summary
US Presidential elections: Joe Biden should undergo Drug test says Trump in his speech.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X