நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பிறந்த நாள் அன்று டிரம்பிற்கு பெரும் அவமானம்.. எங்கே போனாலும் துரத்தும் ஒபாமா இமேஜ்.. சிம்ம சொப்பனம்

Google Oneindia Tamil News

நியூயார்க்: அதிபர் டிரம்பை அவர் எங்கே சென்றாலும் ஒபாமாவின் இமேஜ் துரத்த தொடங்கி உள்ளது. தற்போது அவரின் பிறந்த நாள் அன்றும் கூட ஒபாமாவின் செல்வாக்கு அவரை துரத்த தொடங்கி உள்ளது.

அமெரிக்க அதிபர் டிரம்ப் தற்போது அதிபர் தேர்தலுக்காக தயாராகி வருகிறார். வரும் நவம்பர் முதல் வாரம் நடக்கும் இந்த தேர்தலில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்று குடியரசு கட்சி வேட்பாளரான டிரம்ப் முடிவு செய்துள்ளார்.

ஆனால் இன்னொரு பக்கம் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடனுக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு கூடிக்கொண்டே செல்கிறது. அதிலும் முன்னாள் துணை அதிபர் பிடனுக்கு முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஆதரவு தெரிவித்து இருப்பதும் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்னும் 7 நாட்கள்.. அழைப்பு விடுத்த புடின்.. மீட்டிங் போடும் சீனா - இந்தியா - ரஷ்யா.. பரபர திருப்பம்இன்னும் 7 நாட்கள்.. அழைப்பு விடுத்த புடின்.. மீட்டிங் போடும் சீனா - இந்தியா - ரஷ்யா.. பரபர திருப்பம்

ஆதரவு தெரிவித்தார்

அதோடு ஜார்ஜ் பிளாய்டு கொலை, டிரம்ப் அதை எதிர்கொண்ட விதம், அதி தொடர்ந்த போராட்டங்கள் எல்லாமே டிரம்பிற்கு எதிராக திரும்பி இருக்கிறது. இந்த போராட்டத்தின் போது, போராட்டம் செய்யும் மக்களுக்கு ஆதரவாக ஒபாமா குரல் கொடுத்தார். ஏற்கனவே மக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் ஒபாமா இந்த போராட்டம் காரணமாக இன்னும் செல்வாக்கு பெற்றார். இதை எல்லாம் சமாளிக்க முடியாமல் டிரம்ப் திணறி வருகிறார்.

என்ன முடிவு

இந்த நிலையில்தான் டிரம்ப் இத்தனை பிரச்சனைகளுக்கு இடையே நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடினார். வெள்ளை மாளிகையிலேயே டிரம்ப் தனது பிறந்தநாளை கொண்டாடினார். ஆனால் பிறந்த நாள் அன்று கூட, அவர் மிக மோசமாக இணைய தாக்குதலுக்கு உள்ளானார். மக்கள் அவர் மீது இருந்த கோபத்தை எல்லாம் நேற்று மொத்தமாக கொட்டி தீர்த்தனர்.

ஒபாமா ஆதரவு

நேற்று டிரம்பின் பிறந்த நாளை எல்லோரும் ஒபாமா தினமாக கொண்டாடினார்கள். ஆம் இது டிரம்பின் பிறந்த தினம் கிடையாது. அவரின் பிறந்த நாளை எல்லாம் கொண்டாட முடியாது. அதனால் நாங்கள் இதை ஒபாமாவின் புகழை பாராட்டும் தினமாக, அவரை பாராட்டும் தினமாக கொண்டாட போகிறோம். இது எங்களுக்கு ஒபாமா நாள்தான் என்று கூறி உள்ளனர்.

செம போங்க

இதற்காக அவர் நிறைய ஹேஷ்டேக்குகளை உருவாக்கி உள்ளனர் #ObamaDayJune14th, #BarackObamaDay, #ObamaDayUSA, #ObamaAppreciationDay என்று ஒபாமாவை பாராட்டு வகையில் நிறைய ஹேஸ்டேக்குகளை உருவாக்கி உள்ளனர். இந்த டேக் முழுக்க ஒபாமாவை பாராட்டி நிறைய போஸ்டுகளை போட்டு உள்ளனர். அதோடு டிரம்பை மிக தீவிரமாக, கடுமையாக கலாய்த்து இருக்கிறார்கள்.

என்ன வேறுபாடு

டிரம்ப் எவ்வளவு மோசமான அதிபர், ஒபாமா எவ்வளவு சிறந்த அதிபர் என்று எடுத்துக்காட்டுகளுடன் இவர்கள் ஒப்பிட்டு இருக்கிறார்கள். சாதாரண நெட்டிசன்கள் தொடங்கி இணையத்தில் ப்ளூ டிக் கொண்ட பிரபலங்கள் வரை ஒபாமாவின் புகழை பாடி இருக்கிறார்கள். பிறந்தநாள் என்பதை டிரம்ப் நினைத்து கூட பார்க்க கூடாது என்று திட்டமிட்டு ஓட ஓட இணையத்தில் அவரை கிண்டல் செய்து சுண்டல் போட்டு இருக்கிறார்கள்.

கணிப்பு

கணிப்பு

ஏற்கனவே தேர்தல் நெருங்க நெருங்க டிரம்பின் approval rating எனப்படும் கணிப்பு குறைந்து கொண்டே செல்கிறது.மீண்டும் டிரம்ப் அதிபர் ஆக வாய்ப்பே இல்லை என்று கூட கூறுகிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது ஒரு பக்கம் பிடன் பக்கம் சீனா துரத்த தற்போது ஒபாமா அவருக்கு சிம்ம சொப்பனமாக வந்து இருக்கிறார். இதை எல்லாம் சமாளித்து டிரம்ப் தேர்தலில் வெற்றிபெறுவது மிகவும் கடினம் என்று கூறுகிறார்கள்.

English summary
US Presidential elections: Obama come as a nightmare to President Trump on his birthday too.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X