நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது.. குண்டை தூக்கி போடும் டிரம்ப்!

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே போக கூட வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

Recommended Video

    Air Force One | Trump Force One | Oneindia Tamil

    அமெரிக்க அதிபர் தேர்தலை கொரோனா காலத்திற்கு இடையே நடத்துவதை அதிபர் டிரம்ப் தொடர்ந்து எதிர்த்து வருகிறார். இப்படிப்பட்ட நேரத்தில் தேர்தலை நடத்தினால், அது நேர்மையான தேர்தலாக இருக்காது. தேர்தல் முடிவுகள் மாறலாம்.

    அதிலும் தபால் வாக்குகள் மூலம் முறைகேடுகளை சந்திக்க வாய்ப்புள்ளது. அமெரிக்கா வரலாற்றில் மிக மோசமான தேர்தலாக இது இருக்க போகிறது என்று அதிபர் டிரம்ப் வெளிப்படையாக ஏற்கனவே கூறி இருந்தார்.

    ஈரான் மீது இனி தடை விதிக்க முடியாது.. கொதித்தெழுந்த 13 நாடுகள்..யுஎன்எஸ்சியில் மூக்குடைந்த அமெரிக்காஈரான் மீது இனி தடை விதிக்க முடியாது.. கொதித்தெழுந்த 13 நாடுகள்..யுஎன்எஸ்சியில் மூக்குடைந்த அமெரிக்கா

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    அதிபர் தேர்தலை தள்ளி வைக்கும் எண்ணத்தில் டிரம்ப் இப்படி பேசுகிறார் என்று கூறப்பட்டது. அதாவது கொரோனாவை காரணம் காட்டி தேர்தலை தள்ளி வைக்கலாம். இதன் மூலம் மேலும் சில காலத்திற்கு அதிபராக இருக்கலாம் என்று டிரம்ப் திட்டமிடுகிறார். அல்லது தேர்தலில் முறைகேடு நடந்துவிட்டு என்று பொய் சொல்லி, தேர்தல் முடிவுகளை ஏற்காமல் பிரச்சனை செய்ய வாய்ப்புள்ளது என்றும் அரசியல் வல்லுநர்கள் கூறினார்கள்.

    என்ன நிலைமை

    என்ன நிலைமை

    இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் எப்போது முடிவுகள் வரும் என்பதை உறுதியாக சொல்ல முடியாது, முடிவுகள் வராமலே கூட போக வாய்ப்புள்ளது என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அவர் அளித்துள்ள பேட்டியில், அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் எப்போது வரும் என்று சொல்ல முடியாது. நவம்பர் 3ம் தேதிதான் தேர்தல் முடிவு வரும் என்று நினைக்காதீர்கள்.

    வாய்ப்பு இல்லை

    வாய்ப்பு இல்லை

    தேர்தல் முடிந்த பின்தான் வாக்கு எண்ணிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும். நவம்பர் 3ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கும் என்று நினைக்க வேண்டாம். பல வாரங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். பல மாதங்கள் கழித்து கூட முடிவுகள் வரலாம். ஏன் தேர்தல் முடிவுகள் வராமல் கூட போகலாம். எதையும் உறுதியாக சொல்ல முடியாது.

    ஏன் இப்படி

    ஏன் இப்படி

    50 மில்லியன் மக்கள் தபால் வாக்குகளை அளிக்கப் போகிறார்கள். இதை எண்ணுவது சாதாரண விஷயம் கிடையாது. இதனால் முடிவுகள் தாமதம் ஆகும். நாம் இதற்கு தயாராகவில்லை. நமக்கு இது மிகப்பெரிய அவமானமாக கூட மாற வாய்ப்புள்ளது. இது மிகப்பெரிய பிரச்சனை.

    தயார்

    தயார்

    மனதளவில் நாம் இதற்கு தயாராக வேண்டும். இதில் பல விதமான இடர்பாடுகள் வரும் என்று டிரம்ப் கூறியுள்ளார். டிரம்ப் இப்படி கூறி இருப்பதன் மூலம் அவர் ஏதோ திட்டமிடுகிறார். தேர்தல் முடிவுகளை தள்ளி வைக்க பிளான் போடுகிறார் என்கிறார்கள். சமயத்தில் அவர் தேர்தல் முடிவுகளை ஏற்காமல் போவதற்கு கூட வாய்ப்புள்ளது என்று கூறுகிறார்கள்.

    English summary
    US Presidential elections: Results may not come says Trump on counting date and delay.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X