நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அமெரிக்க அதிபர் தேர்தல்.. குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிப்பு!

அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் தேர்தல் இப்போதுதான் சூடுபிடிக்க தொடங்கி உள்ளது. அங்கு ஜனநாயக கட்சியின் வேட்பாளராக ஜோ பைடன் அறிவிக்கப்பட்டுள்ளார். இவர் முன்னாள் துணை அதிபர்.

US Presidential elections: Trump announced as the official candidate for Republic

ஒபாமா அமெரிக்க அதிபராக இருந்த போது துணை அதிபராக பைடன் இருந்தார். அப்போதே பைடன் எதிர்கால அதிபராக வருவார் என்று கணிக்கப்பட்டது. ஆனால் இடையில் ஹிலாரி கிளிண்டன் தேர்தலில் நின்றதால், பைடன் இந்த முறை தேர்தலில் நிற்கிறார்.

அதிலும் பைடன் தனது துணை அதிபர் வேட்பாளராக இந்திய வம்சாவளியை சேர்ந்த கமலா ஹாரிஸை தேர்வு செய்துள்ளார். இப்போதே பைடனுக்கு ஆதரவு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை வந்த கருத்து கணிப்பில் பைடன்தான் முன்னிலையில் இருக்கிறார்.

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அதிபர் டிரம்ப் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். டிரம்பை அதிபர் வேட்பாளராக ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டுவிட்டார். ஆனாலும் இப்போதுதான் அதிகாரபூர்வமாக அதிபர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். துணை அதிபர் வேட்பாளராக தற்போதைய துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.

ஐ லவ் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட தேர்தல் பிரச்சார வீடியோ.. முழுக்க முழுக்க மோடிதான்.. செம மாஸ்!ஐ லவ் இந்தியா.. டிரம்ப் வெளியிட்ட தேர்தல் பிரச்சார வீடியோ.. முழுக்க முழுக்க மோடிதான்.. செம மாஸ்!

அதிபர் வேட்பாளரை தேர்வு செய்வதற்காக நடந்த உட்கட்சி தேர்தலிலேயே டிரம்ப் மிகுந்த வித்தியாசத்தில் முன்னிலை வகித்தார். குடியரசு கட்சியின் பிரைமரி தேர்தலில் டிரம்பிற்கு குடியரசு கட்சி உறுப்பினர்களின் ஆதரவே அதிகம் இருந்தது. டிரம்பிற்கு 93.95% குடியரசு கட்சியினர் ஆதரவு தெரிவித்தனர். தற்போது இதனால் அதிகாரபூர்வமாக டிரம்ப் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதை கொண்டாடும் வகையில் நாளையில் இருந்து நான்கு நாட்கள் டிரம்ப் குடும்பத்தினர் மக்கள் முன்னிலையில் பிரச்சாரம் செய்ய உள்ளனர். இவாங்கா டிரம்ப், லாரா டிரம்ப் எல்லோரும் வரிசையாக டிரம்பிற்காக பிரச்சாரம் செய்ய உள்ளனர். அதன்பின் வியாழக்கிழமை டிரம்ப் நார்த் கரோலினாவில் மக்கள் முன்னிலையில் பிரச்சனை செய்ய உள்ளார்.

English summary
US Presidential elections: Trump announced as the official candidate for Republic party.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X