நியூயார்க் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் என்ன செய்வேன்? டிரம்ப் சொன்ன பரபரப்பு பதில்.. பிளான் என்ன?

Google Oneindia Tamil News

நியூயார்க்: அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் புகார் வைக்க தொடங்கி உள்ளது.

அமெரிக்கா தற்போது அந்நாட்டு அதிபர் தேர்தலை எதிர்கொண்டு இருக்கிறது. வரும் நவம்பர் முதல் வாரத்தில் அங்கு அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. குடியரசு கட்சி காரணமாக அங்கு அதிபர் டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுகிறார்.

ஜனநாயக கட்சி சார்பாக முன்னாள் துணை அதிபர் ஜோ பிடன் போட்டியிடுகிறார். அங்கு தேர்தலுக்கான பிரச்சாரங்கள் தொடங்க உள்ளது.

உலகம் முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது உலகம் முழுக்க கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 77.25 லட்சத்தை தாண்டியது

வெளியேற மாட்டார்

வெளியேற மாட்டார்

இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டிரம்ப் வரும் அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்தால் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார் என்று அந்நாட்டு எதிர்க்கட்சிகள் புகார் வைக்க தொடங்கி உள்ளது. இந்த புகாரை முதலில் வைத்தது அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜோ பிடன்தான். அவர் தனது பேச்சில், டிரம்ப் தேர்தலில் தோல்வி அடைந்தால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

ஏதாவது செய்து மக்களை ஏமாற்ற பார்ப்பார். எப்படியாவது வெள்ளை மாளிகையில் இருந்து கொண்டே கலகம் விளைவிக்கலாமா என்று பார்ப்பார். அவர் தோல்வியை ஏற்றுக்கொள்ளும் நபர் கிடையாது. அவர் தேர்தலில் தோல்வி அடைந்தால் அமைதியாக இருக்க மாட்டார். அதற்கு முன்பே தேர்தலில் எப்படியாவது பிரச்சனை செய்ய முயற்சி செய்வார். மக்களை வாக்களிக்க விடாமல் தடுப்பார்.

Recommended Video

    India China-சண்டைக்கு காரணமே America தான்..சொல்வது சீனா
    ராணுவம் வரும்

    ராணுவம் வரும்

    டிரம்ப் ஒருவேளை வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேற மறுத்தால் ராணுவம் தனது கடமையாக செய்யுமென்று நினைக்கிறேன். ராணுவம் வெள்ளை மாளிகைக்குள் புகுந்து டிரம்பை வெளியேற்றும் என்று நினைக்கிறேன். எனக்கு அதில் நம்பிக்கை இருக்கிறது. கண்டிப்பாக ராணுவம் டிரம்பை வெள்ளை மாளிகையில் இருக்க விடாது. அவரை உடனே வெளியேற்றும் என்று ஜோ பிடன் குறிப்பிட்டு இருந்தார்.

    பலர் கருத்து

    பலர் கருத்து

    இவரை தொடர்ந்து ஜனநாயக கட்சியை சேர்ந்த பலர் இதே சந்தேகத்தை எழுப்பி இருந்தனர். டிரம்ப் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற மாட்டார். அவர் என்ன வேண்டுமானாலும் செய்ய முயற்சி செய்வார். சர்வாதிகார ஆட்சி நடத்த கூட திட்டம் போடுவார். அவரை நம்ப கூடாது. ராணுவம் உடனடியாக களமிறங்கி அவருக்கு எதிராக செயல்பட தயாராக இருக்க வேண்டும், என்று பலர் கூறி இருந்தனர்.

    டிரம்ப் பதில்

    டிரம்ப் பதில்

    இதற்கு தற்போது அதிபர் டிரம்ப் பதில் அளித்துள்ளார். அதில், நான் தேர்தலில் தோல்வி அடைந்தால் எதுவும் செய்ய மாட்டேன். நான் தேர்தலில் தோல்வி அடைந்தால் தோல்வி அடைந்துவிட்டேன். அவ்வளவுதான். வேறு என்ன செய்ய முடியும். நான் சென்று என்னுடைய வேலைகளை செய்ய தொடங்குவேன். எனக்கு நிறைய பணிகள் இருக்கிறது. அந்த பணிகளை செய்வேன், என்று டிரம்ப் குறிப்பிட்டு இருக்கிறார்.

    English summary
    US Presidential elections: Trump answers whether he will leave White house or not after loosing to Biden.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X